அம்மாவுக்குக் காணிக்கை

 அன்னையர் தினம் - 9/5/2021

அம்மாவுக்குக் காணிக்கை












அம்மா........,😢😢😢🙏🙏🙏❤❤❤
உன் கையைப் பற்றி அன்று நான் நடக்கையில் நீ அடைந்தாய் உவகை
உன் இறுதி நாட்களில் என் கையைப் பற்றி
நீ நடக்கையில் எனக்குள் அழுகை
கையெழுத்திடக் குனிந்த போதெல்லாம்
நீ கைநாட்டினாய் - ஆனால் என்னையோ
பள்ளிக்கூடம் நோக்கி கை நீட்டினாய்
நீ எனக்காக சுமந்த சுமைகளால்
உன் கால்கள் வலித்திருக்கலாம்
என்னைக் கருவறையிலே சுமந்த
உன் மனம் சலித்ததில்லை
நீ கிள்ளிய ஒவ்வொரு தேயிலைக் கொழுந்தும்
நான் எழுதும் எழுத்துக்கள் அல்லவா?
என் தோளில் விழும் மாலைகளெல்லாம்
உனதும் அப்பாவினதும்
உழைப்பு என்ற தோட்டத்திலே
வியர்வை என்ற செடியிலே பூத்த
மலர்களின் கோர்வை அல்லவா?
என்னை நல்வழிப்படுத்த நீ என்னைக்
கண்டித்தபோது வெதும்பினேன்
தண்டித்தபோது அழுதேன் - அப்போது
புரிந்திராத உன் கோபம் பின்னாளில்
என் குழந்தைகளால் புரிந்தது
அந்தத் தழும்புகளைத் தடவிப் பார்க்கிறேன்
உன் கால்களைக் கட்டிக் கொண்டு
கதற வேண்டும் போலிருக்கிறதே
மனதால் என் கண்ணீரை உன்
பாதங்களிலே சொரிகிறேன்
எத்தனை பிறவிகள் எடுத்தாலும்
நீயே என் தாயாக வா அம்மா
இல்லையேல் அடுத்த பிறவியில்
எனக்குப் பிள்ளையாகப் பிறந்துவிடு
உன்னை மார்பிலும் தோளிலும் சுமந்தேனும்
நன்றிக் கடனைச் செலுத்தும் வரம் கொடு
உன் காலடிகளே எனக்கு சொர்க்கம்
இறைவனிடம் நான் கேட்பதோ
சொர்க்கத்தில் உனக்கும் ஓர் இடம்
அனைத்து அன்னையர்கட்கும்
இதயம் கனிந்த
அன்னையர் தின நல்
வாழ்த்துகள்

"லோகநாதன் பி.எஸ்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,