பத்மசேஷாத்ரியில்.. சிக்க போகும் கருப்பு ஆடுகள்?

 

பத்மசேஷாத்ரியில்.. சிக்க போகும் கருப்பு ஆடுகள்?

5 வருஷமா.. விட கூடாது.. தனி டீமை அனுப்பிய அன்பில்..

l

பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் தெரிவித்த கருப்பு ஆடுகள் யார்? பள்ளியில் யாருக்கெல்லாம் இது போன்ற தொடர்பு உள்ளது என்று தனிக்குழு விசாரணை தொடங்கி உள்ளது. இதில் ராஜகோபாலன் மட்டுமின்றி இன்னும் பலர் சிக்கலாம் என்றும் தகவல்கள் வருகின்றன.
தோண்ட தோண்ட புகார்கள்.. இணையம் முழுக்க ஜாதி ரீதியான, பாலியல் ரீதியாக அடுக்கப்படும் குற்றச்சாட்டுகள் என்று பத்மசேஷாத்ரி பாலபவன் பள்ளி மீது அதிர்ச்சி அளிக்க கூடிய பல புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அங்கு படிக்கும் மாணவிகள் பலர், பல வருடங்களாக பாலியில் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளானதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.
அதோடு இன்னும் சில மாணவர்கள் குறிப்பிட்ட ஜாதியை சேர்த்தவர்கள் என்பதற்காக சக மாணவர்களால், ஆசிரியர்களால் கடுமையாக நடத்தப்பட்டதும் அம்பலம் ஆகியுள்ளது. 2021ல் கூட இப்படி ஒரு பள்ளி மாணவர்களை ஜாதி ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் ஒடுக்கியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிலும் நேற்று கைது செய்யப்பட பத்மசேஷாத்ரி பாலபவன் பள்ளி ஆசிரியர் பல திடுக்கிடும் வாக்குமூலங்களை அளித்துள்ளார். இப்போது அல்ல, இதற்கு முன்பே 5 வருடங்களாக இப்படி கொடுமைகளை செய்து வந்ததாக ராஜகோபாலன் கூறியுள்ளார். அதாவது தனது தவறுகளைய் ஒப்புக்கொண்ட ராஜகோபாலன், அதை பல வருடமாக தொடர்ந்து செய்து வந்ததாகவும் போலீசிடம் கூறியதாக தகவல்கள் வருகின்றன.

இன்னும் பலர் அதோடு பள்ளியில் இன்னும் சிலர் இப்படி இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். தான் கைது ஆகிறோம் என்று தெரிந்ததும், தன்னை போலவே பள்ளியில் உள்ள மற்றவர்கர்களை பற்றியும் ராஜகோபாலன் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனால் பள்ளியில் உள்ள பல ஆசிரியர்கள், நிர்வாகிகள் விசாரணை வளையத்திற்குள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் தமிழக அரசு மிக கடுமையான நடவடிக்கைகளை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று முனைப்போடு இருக்கிறது. பொள்ளாச்சி சம்பவத்திற்கு இணையான கொடுமை என்பதால், இதை தீவிரமாக விசாரிக்கும் முடிவில் உள்ளது. இதனால்தான் நேற்று பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில், யாராக இருந்தாலும் கண்டிப்பாக விசாரிப்போம்.. தவறு செய்தவர்களை தண்டிப்போம் என்று கூறினார்.
திமுக ஆட்சியில் கொரோனா நடவடிக்கை தாண்டி, எடுக்கப்பட போகும் முதல் அதிரடி ஆக்சனாக இந்த பாலியல் கொடுமை வழக்கு பார்க்கப்படுகிறது
. இணையத்தில் புகார்கள் பறந்த 4 மணி நேரத்தில் விசாரணை, 12 மணி நேரத்திற்குள் கைது, போக்சோ சட்டம் என்று தமிழக அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகிகள், உயர்மட்ட உறுப்பினர்களையும் விசாரிக்கும் முடிவில் அதிகாரிகள் உள்ளனர்.
இதற்காக தனி டீமை அன்பில் மகேஷ் களமிறக்கி உள்ளார். இது பெரிய தவறு, தவறு செய்தவர்களை விட கூடாது என்று அன்பில் மகேஷ் உறுதியாக இருப்பதாக கூறுகிறார்கள். எவ்வளவு ஆழமாக விசாரிக்க முடியுமோ அவ்வளவு ஆழமாக இந்த வழக்கை விசாரிக்கவும், இதில் சம்மந்தபப்பட்டு இருக்கும் மற்றவர்களை தட்டி தூக்கவும் போலீஸ் திட்டமிட்டுள்ளது என்கிறார்கள்.

இதனால்தான் புகார் வந்த 3 மணி நேரங்களிலேயே தனி விசாரணை குழு அமைக்கப்பட்டது. 5 வருடமாக இப்படி நடக்கிறது என்றால் அது பெரிய கொடுமை, இதனால் முன்னாள் மாணவிகள் தொடங்கி பலரிடம் போன மூலமாக விசாரணை செய்ய உள்ளனர். அவர்களின் அடையாளத்தை வெளியிடாமல், இணையத்தில் வெளியான ஸ்கிரீன் ஷாட்களை வைத்து போலீசார் அந்த மாணவிகளை கண்டுபிடித்து விசாரிக்க உள்ளனர்.
இதில் மாணவிகள் தாமாக முன்வந்து வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதோடு வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கும் ராஜகோபாலினின் டெலிட் செய்யப்பட்ட சாட்களை பெற கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் அது கிடைத்துவிடும் என்பதால் பத்மசேஷாத்ரி பாலபவன் பள்ளியின் ராஜகோபாலும், அவர் பேசிய மற்ற ஆசிரியர்களும் கண்டிப்பாக சிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,