வெண்டைக்காய் பக்கோடா

 

வெண்டைக்காய் பக்கோடா








சற்று வித்தியாசமான ஸ்நாக்ஸ் சுவைக்க ஆசையாக உள்ளதா? அப்படியானால் உங்கள் வீட்டில் வெண்டைக்காய் உள்ளதா? இருந்தால், அதைக் கொண்டு ஒரு அட்டகாசமான சுவையுடைய பக்கோடா செய்யலாம். இந்த வெண்டைக்காய் பக்கோடா பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

வெண்டைக்காய் பக்கோடா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெண்டைக்காய் பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்: * வெண்டைக்காய் - 20 * கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன்


அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன் * மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் * மஞ்சள் தூள் - 1 சிட்டிகை  * கறிவேப்பிலை - சிறிது * உப்பு - சுவைக்கேற்ப * எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு 
செய்முறை: * 
முதலில் வெண்டைக்காயின் மேல் பகுதியையும், கீழ் பகுதியையும் நீக்கிவிட்டு, நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். * பின் அதில் எண்ணெயைத் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் போட்டு, சிறிது நீரைத் தெளித்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். * பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். * எண்ணெய் சூடானதும் பிரட்டி வைத்துள்ள வெண்டைக்காயை எண்ணெயில் போட்டு பொன்னிறமாகவும், மொறுமொறுப்பாகவும் பொரித்து எடுத்தால், சுவையான வெண்டைக்காய் பக்கோடா தயார்.

வெண்டைக்காயை நீளமாக வெட்டிய பின், அதை ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் வைத்து, பின் பயன்படுத்தினால், அதில் உள்ள பிசுபிசுப்புத்தன்மை குறைவாக இருக்கும். * வேண்டுமானால், இத்துடன் மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்துக் கொள்ளலாம். * விருப்பமுள்ளவர்கள், மிளகாய் தூளுக்கு பதிலாக பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,