உலக இலக்கியம் படைத்த ஒரு கிராமவாசி
தமிழில்
உலக இலக்கியம் படைத்த
ஒரு கிராமவாசி
எந்த நவீனத்தை விடவும்
நவீனமாக எழுதிய
இலக்கியவாதி
தீராத கதை சொல்லி
வகை வகையாக
விதை நெல் மூட்டைகளைக்
களஞ்சியத்தில்
சேர்த்துவைத்துவிட்டு
தலைமுறைக்கும்
தேயாத செல்வத்தை
தன் தலைமுறைக்குக் கொடுத்துவிட்டு
புறப்பட்டுவிட்டான் முற்றி முதிர்ந்த
இந்த எழுத்து விவசாயி
துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு.
உதறிய துண்டிலிருந்தும்
கதைகளே உதிர்ந்தன
'இந்த இவள்...
மிச்சக் கதைகள்... என.
கோபல்ல கிராமத்தின் பெருசு
கோபல்ல கிராமத்து மக்களைக் காணப் புறப்பட்டு விட்டது.
கிடை போட்டவன்
விடிந்தும் உறங்குவதைப் பார்த்து
அவனை எழுப்பக் கத்திக் கத்தி ஓய்கின்றன
அவன் மந்தை ஆடுகள்.
*
பிருந்தா சாரதி
Comments