எழுத்தாளர் அனுராதா ரமணன்

 எழுத்தாளர் அனுராதா ரமணன் நினைவு நாள் இன்று மே16.


அனுராதாவுக்குக் கலைகளில் நல்ல ஈடுபாடு இருந்தது. கலைக் கல்லூரியில் சேர்ந்து படிப்பை முடிக்கும் முன்னரே திருமணம் ஆயிற்று.
அவருடைய திருமணம் ஒரு கசப்பான அனுபவமாகவே இருந்தது என்பதை அவரே எழுதியிருக்கிறார். இருபத்திரண்டு இருபத்துமூன்று வயதிலேயே இரு பெண் குழந்தைகளுடன் பிறந்தகம் வந்தார்.
விட்ட படிப்பைத் தொடர்ந்தார். தனி மனுஷியாகத் தன் பெண்களை வளர்க்க முற்பட்டார்
ஆரம்பத்தில் ஓவியராகவும் வடிவமைப்பவராகவும்தான் அவர் பத்திரிகை உலகில் நுழைந்தார். Indian Housewife, Grahani aur Grahasti மற்றும் மங்கையர் மலருக்கு வடிவமைப்பவராக இருந்தார்.
ஒருமுறை மங்கை பத்திரிகைக்குத் தன் ஓவியங்களுடன் போனபோது தன் டயரியை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டார். அதில் அவர் எழுதியிருந்த குறிப்புகளைக் கண்ட ஆசிரியர் அவரைக் கதை எழுதுமாறு கூறவே மிகுந்த தயக்கத்துடன் எழுதிய கதைதான் கனவு மலர்கள் கருகும்போது. அதைத் தன் பெயரில் எழுதத் தயங்கி சாம்பவி என்னும் பெயரில் எழுதினார்.
அதன் பிறகு தினமணி கதிரில் நான்கு சுவர்களுக்கு நடுவில் எழுதினார். ஓவியரான அவர் 1977இல் எழுத்தாளராக உருவெடுத்தார்.
முப்பத்திரண்டு ஆண்டுகளில் அவர் எழுதிக் குவித்தார் எனலாம்.
கிட்டத்தட்ட 800 நாவல்களும் 1230 சிறுகதைகளும் எழுதியிருக்கிறார் என்று அனுமானிக்கப்படுகிறது. ஆனந்த விகடனில் பரிசு பெற்ற இவரது சிறை என்னும் கதை திரைப்படமாக்கப்பட்டது.
கூட்டுப் புழுக்கள், ஒரு வீடு இரு வாசல், மலரின் பயணம் போன்ற இவர் கதைகள் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று மூன்று மொழிகளில் படமாக்கப்பட்டன. இவருடைய பல கதைகள் தொலைக்காட்சித் தொடர்களாக வெற்றிபெற்றிருக்கின்றன.
சுபமங்களா, வளையோசை போன்ற பத்திரிகை களுக்கு ஆசிரியராக இருந்த அனுபவமும் இவருக்கு உண்டு. எழுத்துக்கான பல விருதுகளும் இவரைத் தேடிவந்தன. கடந்த எட்டு ஒன்பது ஆண்டுகளாகத் தினமலரில் அன்புடன் அந்தரங்கம் என்னும் பத்தியின் மூலம் பலருக்குப் பிரச்சினைகளை எதிர்கொள்ள ஆலோசனை தந்தார்.
இணையத்தில் இருந்து எடுத்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,