மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை"

 

"மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை".. கோவா அமைச்சரின் புகாருக்கு.. பி.டி.ஆரின் பொளேர் பதிலடி!


கொரோனா மருந்து பொருட்களின் இறக்குமதி மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க கோவா அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்ததாக தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றஞ்சாட்டி உள்ளார். அதோடு கோடின்ஹோ வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பிடிஆர் சரமாரி பதிலடி கொடுத்துள்ளார்

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கோவாவிற்கு எதிராக தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கோவாவின் போக்குவரத்து துறை அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ குற்றஞ்சாட்டி இருந்தார். இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதில் கோவா போன்ற சிறிய மாநிலங்களுக்கு முன்னிரிமை கொடுக்க வேண்டும் என்று கோடின்ஹோ கோரிக்கை வைத்தார்.

ஆனால் இதை பிடிஆர் எதிர்த்ததாகவும், கோவா போன்ற சிறிய மாநிலங்களுக்கு முன்னுரிமை கொடுக்க கூடாது என்று பிடிஆர் பேசியதாகவும் கோடின்ஹோ குற்றஞ்சாட்டி இருந்தார். அதோடு பிடிஆர் இதற்காக கோவா மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோடின்ஹோ குறிப்பிட்டு இருந்தார். இதற்குதான் தற்போது பிடிஆர் அதிரடி பதில் அளித்துள்ளார்.

கோடின்ஹோவிற்கு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அளித்துள்ள பதிலில், குறைகுடம்தான் கூத்தாடும். தமிழகத்தின் நிதி அமைச்சராக நான் என் மாநிலத்தில் பல பொறுப்புகளை கவனித்து வருகிறேன். 8 கோடி மக்கள் வசிக்கும் மாநிலத்தில் மக்களுக்காக நான் பல பொறுப்புகளை கவனித்துக் கொள்கிறேன், பட்ஜெட் தாக்கல் செய்கிறேன். எனவே பொதுவாக தேவையில்லாத குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லி நான் நேரத்தை வீணாக்க மாட்டேன்.

ஆனால் இப்போது கோவாவின் போக்குவரத்து துறை அமைச்சர் வைக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கும், நான் கோவா மக்களை அவமானப்படுத்தியாக வைக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கும் பதிலடி கொடுக்க விரும்புகிறேன். அதோடு இது போன்ற நபர்களால் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.

நான் இரண்டு முக்கியமான கோரிக்கைகளை ஜிஎஸ்டி கூட்டத்தில் வைத்தேன், முதல் விஷயம், ஒரு மாநிலம் = ஒரு வாக்கு என்ற ஜிஎஸ்டி மாடல் தவறு. அதை கைவிட்டுவிட்டு மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களுக்கு வாக்குகளை கொடுக்க வேண்டும். பஞ்சாயத்து கவுன்சில் தொடங்கி நாடாளுமன்றம் வரை மக்கள் தொகை அடிப்படையிலேயே பிரநிதித்துவம் வழங்கப்படுகிறது. ஜிஎஸ்டி கவுன்சிலில் அதேபோல் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டேன்

அதேபோல் கொரோனா தடுப்பு பணிக்காக ஸ்பெஷல் செஸ் வரி என்ற சிக்கிம் போன்ற மாநிலங்களின் கோரிக்கைக்கு ஆதரவாகவே பேசினேன். செஸ் வரி வசூல் தொடர்பாக கோவா அஜெண்டா எதையும் முன் வைக்காத போது, நான் எப்படி கோவாவிற்கு எதிராக வாக்களிக்க முடியும்? செஸ் வரி வசூல் குறித்து கோவா எந்த அஜெண்டாவையும் விவாதிக்காத போது எப்படி அதில் நான் வாக்களிக்க முடியும்?.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,