சிறுவயது போல சிறுநீரகம் எல்லா வயதிலும் செயல் பட செய்ய வேண்டியது என்ன?

 சிறுவயது போல சிறுநீரகம் எல்லா வயதிலும் செயல் பட செய்ய வேண்டியது என்ன?




காலையில் தேநீர் பருகினால்தான் பெரும்பாலானோருக்கு சோம்பல் நீங்கி புத்துணர்வு ஏற்படும். தலைவலியை போக்கும் பானமாகவும் நிறைய பேர் கருதுகிறார்கள். சிறுநீரகங்களை சுத்தப்படுத்தவும் தேநீர் உதவுகிறது. தினமும் ஒரு கப் தேநீர் பருகுவது சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். குப்பைமேனி இலை, துளசி போன்ற மூலிகைகளை கொண்டு தேநீர் தயாரித்து பருகுவது நல்லது.


ஒமம்


ஒம இலை சிறுநீரக செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் உணவுடன் சிறிது ஒம இலையை சேர்த்து கொள்ளவும்.


புளி


புளியிலுள்ள டார்டாரிக் அமிலம், சிறுநீர ஆக்சலேட் கற்கள் உருவாக்கத்தை தடுகிறது. புளியை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதால்தான் இந்தோனேசிய மக்களுக்கு அதிகம் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதில்லையென்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



மஞ்சள்


மஞ்சள் சிறுநீரக செயல்யிழப்பை தவிர்க்கவும், இழந்த செயல்பாட்டை புத்துணர்வு அடையவும் செய்யும் மகிமையுடையது என்று சித்த மருத்துவத்தின்படியும், இக்கால அறிவியலின்படியும் நிருபிக்கபட்டுள்ளது.


செர்ரி பழ வகைகளை சாப்பிட்டு வருவதும் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும். தொடர்ந்து இரண்டு வாரங்கள் செர்ரி மற்றும் கிரான்பெர்ரி பழங்களை சாப்பிட்டு வருவதன் மூலம் சிறுநீரக பாதையில் ஏற்படும் நோய் தொற்று குறைய தொடங்கும். இதனை உலர்ந்த பழமாகவும் உட்கொள்ளலாம். சாலட்டுகளாக தயார் செய்தும் சாப்பிடலாம். இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடெண்டுகள் பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்து உடலை தற்காத்துக்கொள்ள வழிவகை செய்யும்.


எலுமிச்சை, ஆரஞ்சு, முலாம் பழங்களில் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. அதனை ஜூஸாக பருகிவந்தால் சிறுநீரகத்தில் கலந்திருக்கும் நச்சுக்கள் வெளியேறும். சிறுநீரக கற்கள் படியாமலும் பாதுகாக்கலாம். இவற்றில் ஏதாவது ஒரு ஜூஸை தினமும் பருகுவது நல்லது. உப்போ, சர்க்கரையோ சேர்க்காமல் பருக வேண்டும்.


கீரை வகைகளையும் தவிர்க்காமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவற்றில் நிறைந்திருக்கும் ஆன்டிஆக்சிடெண்ட், வைட்டமின், தாதுக்கள் போன்றவை சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். எனினும் அளவுக்கு அதிகமாக உட்கொள்வது சிறுநீரக கற்கள் உருவாக வழிவகுத்துவிடும்.


தவிர்க்க வேண்டியவை


தக்காளி, புழுச்சைகீரை, உருளை, சர்க்கரைவள்ளி கிழங்கு.


வாழை, மாம்பழம், பப்பாளி, ஆரன்ஜு, உலர் பழங்கள்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,