பீஸ் கட்ட முடியலைன்னா.. பிளாட்பார்முக்கு போ..

பீஸ் கட்ட முடியலைன்னா.. பிளாட்பார்முக்கு போ.. ஏ.ஆர் ரகுமானிடம் சொன்ன பிரபல பள்ளி




 இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தனது பள்ளி நாட்களில், பீஸ் கட்ட முடியாமல் அவதிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அவரின் பள்ளி குறித்து நிறைய கேள்விகள் இணையத்தில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இதுகுறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்.. இனி சாதிக்க ஒன்றுமே இல்லை என்னும் அளவிற்கு எல்லா சாதனைகளையும் படைத்தவர். எத்தனை எத்தனை சாதனைகளை படைத்தாலும்.. எதையும் தலையில் ஏற்றிக்கொள்ளாமல் எல்லா புகழும் இறைவனுக்கே என்று புகழ் மாலைகளை துச்சமாக கடந்து செல்வதுதான் ரகுமான் பண்பு.

தமிழ் உணர்வு.. தமிழர்களின் பிரச்சனையில் உடன் நிற்பது.. இயல்பாக பேசுவது.. டிவிட்டர் ஸ்பேஸ்களுக்கு சத்தமின்றி விசிட் அடித்து சர்ப்ரைஸ் கொடுப்பது என்று இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் பெரிய அளவில் செலிப்ரிட்டி கிரீடம் சுமக்காத சிம்பிள் மேன்.. ஆனால் இவரின் இந்த எளிமை பல கஷ்டங்களை கடந்து வந்திருக்கிறது.
10 வயதிலேயே அப்பா சேகரை இழந்துவிட்டு, பொருளாதார ரீதியாக பல துன்பங்களை அனுபவித்தவர்தான் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். அதுவும் இவர் படித்த பள்ளியில் பல விதமாக கொடுமைகளுக்கு ஆள் ஆகி இருக்கிறார். டிவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களில் இவர் படித்த பள்ளி எது என்று விவாதம் ஓடிக்கொண்டு இருக்கிறது.

l10 வயதிலேயே அப்பா சேகரை இழந்துவிட்டு, பொருளாதார ரீதியாக பல துன்பங்களை அனுபவித்தவர்தான் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். அதுவும் இவர் படித்த பள்ளியில் பல விதமாக கொடுமைகளுக்கு ஆள் ஆகி இருக்கிறார். டிவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களில் இவர் படித்த ள்ளி எது என்று விவாதம் ஓடிக்கொண்டு இருக்கிறது.

அப்பாவின் மறைவை தொடர்ந்து இவரால் பள்ளி தேர்வுக்கு சரியாக பீஸ் கட்ட முடியவில்லை. தங்கள் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலையை ரகுமான் பள்ளி நிர்வாகத்திடம் சொல்லி இருக்கிறார். பீஸ் கட்ட முடியலை..சீக்கிரம் கட்டிடறேன் என்று கூறியுள்ளார். ஆனால் அவர்களோ பீஸ் கட்டினால் தான் நீ தேர்வு எழுத முடியும் என்று கூறியுள்ளனர். பின் ரகுமான் தனது அம்மாவை அழைத்து சென்று பேசியும் பள்ளி நிர்வாகம் கடுமையாக பதில் அளித்துள்ளது.

lஅப்பா இல்லை என்று கூறியும் பள்ளி நிர்வாகம் மனம் இறங்கவில்லை. அந்த பிரபல பள்ளி, ரகுமானின் அம்மாவிடம்.. பீஸ் கட்ட முடியவில்லை என்றால் கோடம்பாக்கம் பிளாட்பார்மில் போய், யாரிடம் இருந்தாவது காசு கிடைக்குமா என்று கேட்டு பாருங்கள் என்று கூறியுள்ளனர். ஆம்.. அந்த பள்ளி நிர்வாகம் இப்படித்தான் பதில் சொல்லி இருக்கிறது.

தனது பள்ளி நாட்களில் நடந்த இந்த கொடுமையான சம்பவத்தை ஏ.ஆர் ரகுமானே பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். அந்த பள்ளி பீஸ் காட்டாத காரணத்தால் எப்படி எல்லாம் நடத்தியது என்று அந்த பேட்டியில் உருக்கமாக பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையம் முழுக்க வைரலாகிக் கொண்டு இருக்கிறது.


பள்ளியின் புறக்கணிப்பு அதன்பின்பும் தொடர்ந்தது. பின்னர் பொருளாதார நெருக்கடி, இசை மீதான ஆர்வம் என்று பல காரணங்களால் இவரின் படிப்பு தடைபட.. சினிமாவிற்குள் நுழைந்தார் ரகுமான். அதன்பின் ரகுமான் வைத்த ஒவ்வொரு அடியும்.. ஒவ்வொரு பீட்டும் வரலாறு. பல வருடங்கள் கழித்து ரகுமான் ஆஸ்கர் வாங்கிய போது.. பீஸ் கட்டவில்லை என்று ரகுமானை ஓரம்கட்டிய அதே பிரபல பள்ளி.. "இவர்தான் எங்களின் முன்னாள் மாணவர்" என்று விளம்பரம் செய்தது எல்லாம் வேறு கதை!


ஆரம்ப நாட்களில் இருந்து ரகுமான் இப்படி பொருளாதார ரீதியாக பல கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறார். ஆஸ்கர் வாங்கியவர் என்றாலும் கூட இப்போதும் கூட பாலிவுட் அவர் மீது தமிழர் என்ற பாகுபாட்டை காட்டிக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால் புகழை தலையில் ஏற்றுக்கொள்ளாத ரகுமான்.. புறக்கணிப்புகளையும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து முன்னேறிக்கொண்டு இருக்கிறார்!




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,