கார்ப்பரேட்டு நிறுவனங்கள்

1857ல் முதல் இந்திய சுதந்திரப் போர் நடைபெற்று முடிந்ததும் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பிரிட்டிஷ் பாராளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்றியது. கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கப்பட்ட ஏகபோக வர்த்தக உரிமையைப் பறித்தது. இத்துடன் பிரித்தானிய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் இந்தியா வந்தது.


18-ம் நூற்றாண்டின் இந்தியப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்திய ஜெயின் மற்றும் மார்வாடி சமூகத்தைச் சேர்ந்த வியாபாரிகள், வங்கியாளர்களின் ஆதரவைக் கிழக்கிந்திய கம்பெனி பெற்றிருந்தது. 1718-க்கும் 1730-க்கும் இடைப்பட்ட காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி இவர்களிடமிருந்து ஆண்டுக்கு சராசரியாக ரூ.4 லட்சம் கடனாகப் பெற்றது. இந்திய வர்த்தகர்கள் மற்றும் வங்கியாளர்களுக்கு கிழக்கிந்தியக் கம்பெனி இயற்கையான கூட்டாளிகளாகத் துணையாக இருந்தது. இந்திய மேட்டிமைச் சமூகத்தின் ஆதரவும் நம்பிக்கையும் இல்லாமல் பிரித்தானியர்கள் இவ்வளவு காலம் நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்திருக்க முடியாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தியாவில் எப்படி ஒரு மிகப்பெரும் பொருளாதாரச் சுரண்டலை கிழக்கிந்திய கம்பெனியும் அதனைத் தொடர்ந்து பிரிட்டன் அரசும் நிகழ்த்தியது என்பதை வரலாற்றின் பக்கங்களைப் புரட்டுகையில் உணர முடிகிறது.

ஆனால் இன்றும் அதே நிறுவனங்கள் இந்திய வளங்களை நான்கு வழிச்சாலைகள் மூலமும் கட்டுப்பாடுகளற்ற தனியார் துறைமுகங்கள் மூலமும் தடையின்றிக் கொண்டு செல்கிறது என்பதை நாம் அறிந்துகொள்வது அவசியம். இந்தியாவை அத்தகைய ஒரு சந்தையாகவே மாற்ற உலகமயம் முயல்கிறது, ஒவ்வொரு ஆண்டும் வெற்றி கொள்கிறது என்பதை மறந்திட வேண்டாம். இன்றும் நம் மண்ணில் உலக கார்ப்பரேட்டு நிறுவனங்கள் தங்களின் தொழில் வளாகங்களை அமைத்துக் கொண்டுள்ளது. நம் அரசுகள் அதனைச் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்கிறது, இவையும் இன்றைய நவீன காலனிகள்தானே!

நன்றி: விகடன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,