எங்களின் சிறந்த தாய்.

 உலக அன்னையர் தினம் இன்று










, நம்மைப் பெற்றெடுத்தவர் என்றுமே அன்னை  அவர் தெய்வம் தானே.


உலக அன்னையர் தினமான இன்று, அன்னையைப் பற்றி பதிவிடுகிறேன்.


 எல்லோரும் அன்னையாக போற்றப்பெற்ற "Mother தெரசா" அவர்களைப் பற்றித் நான் சில வரிகள்.



 நெஞ்சை விட்டு நீங்காத தாய் என்னும் தலைப்பில்:



 ஐரோப்பா கண்டத்தில் அல்பேனியா நாட்டில்

1910 ஆகஸ்டு 26ஆம் நாள் அவதரித்தாய்


 அடுத்தவர் நலனில் உதவிட எண்ணி மனதிலே எண்ணம் வளர்த்தாய்



 கடமை செய்ய  நல்லதொரு வாய்ப்பென  கல்கத்தா வந்தாய்


 கண்டாய் அங்கு ஏழைப் பிள்ளைகளின் நிலையை உணர்ந்தாய்


 சட்டதிட்டங்களை தாண்டி அப்பிள்ளைகளுக்கு  உதவிட முன் வந்தாய்



 வெள்ளை மனம் கொண்டதால் நற்பணி செய்திடவே வெண்ணிற ஆடை அணிந்தாய்


 ஏழை எளியவர்களின் எண்ணங்கள் என்னவென்று அறிந்தாய்


 ஏதாவது இவர்களுக்கு  செய்ய வேண்டுமென்று ஏனோத் துடித்தாய்


 கருணை இல்லம் ஒன்றை அமைப்பதற்கு  கல்கத்தா நகரினை தேர்ந்தெடுத்தாய்


 கஷ்டங்களில் சூழ்ந்த குஷ்டரோகங்களில் தவித்தவர்க்கும் ஆறுதல்  தந்தாய்


 பொறுமையென்னும் குணம் வளர்த்து தொண்டெனும் விதை விதைத்தாய்


 அன்பாலே அரவணைத்து அடுத்தவர் மனதுக்குள் புகுந்தாய்


 வாழ்நாள் முழுவதும் உதவிகள் செய்தே தன் வாழ்வினையே   அர்ப்பணித்தாய்


 கருணை மனம் கொண்டே பலர் கவலை தீர துணை புரிந்தாய்


 பாரத தேசத்தின் பாரத ரத்னமாய் பதக்கம் பெற்று உயர்ந்தாய்


 இந்தப்  பார் தந்த அமைதிக்கான நோபல் பரிசை யும் வென்று முடித்தாய்



 உலக மக்களின் உள்ளத்தில் நல் வழியமைத்து தனித்தன்மையோடு கலந்தாய்


 இவ்வுலகம் உள்ளவரை உன் புகழ் பாடும் உண்மையில் நீயும் தானம்மா எங்களின் சிறந்த தாய்.


 முருக சண்முகம் சென்னை- 56


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,