வழக்கறிஞர் இல்லாமலே, நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளிப்பது எப்படி??

 வழக்கறிஞர் இல்லாமலே,  புகார் அளிப்பது எப்படி??



//



ஏதேனும் பொருள் அல்லது சேவையை சொந்த உபயோகத்திற்காக விலை கொடுத்து வாங்குபவர்களே நுகர்வோர்கள்.


நுகர்வோர்களை பாதுகாக்க, 1986 டிசம்பர் 24ல் இந்தியாவில் "நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்" கொண்டு வரப்பட்டது.


பேக்கிங் செய்யப்பட்ட பொருட்கள்ல, தயாரிப்பு தேதி, காலாவதியான தேதி, தயாரிக்க பயன்படுத்திய பொருள்கள் தெளிவா குறிப்பிட்டு இருக்கணும். தண்ணீர் பாட்டில்ல ISI முத்திரை இருக்கணும்.

இதற்கு மாறாக மற்றும் அதிக விலைக்கு விற்றல், தரமற்ற, கலப்பட, Bill தர மறுத்தல்னு ஏதேனும் குறைபாடு இருந்து புகார் அளித்தால், குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப அபராதமோ அல்லது கடையை சீல் கூட வைப்பாங்க.


//


இது இல்லாம, மன உளைச்சல், உடல் ரீதியான பாதிப்பு மற்றும் இழப்பு ஏதேனும் ஏற்பட்டு இருந்தால் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் வழக்கு தொடர்ந்து இழப்பீடு கோரலாம்.


பிரச்சனையை பொறுத்து தான் இழப்பீடு கோர முடியும். 1 கோடி வரையிலான இழப்பீடுக்கு மாவட்ட குறைதீர் மன்றங்களிலே முறையிடலாம்.


பிரச்சனை நடந்த 2 வருஷத்துக்குள்ள வழக்கு தாக்கல் பண்ணிருக்கணும்.


வழக்கறிஞர் தேவை இல்லை. 


முதல்ல,

யாரல பாதிக்கப்பட்டமோ அவங்களுக்கு A4 பேப்பர்ல,  "பாதிக்கப்பட்டதையும், அதற்கு தீர்வு சொல்லலனா நுகர்வோர் நீதிமன்றத்துல கேஸ் போடுவேனு" லெட்டர் எழுதி ரெஜிஸ்டர் போஸ்ட்ல அனுப்பனும்.


அதுக்கு 15 நாள்ல பதில் சொல்லலனா அல்லது முறையற்ற பதில் சொன்னா, இருக்கிற ஆதாரங்களை வச்சி நுகர்வோர் நீதிமன்றத்துல புகார் படிவத்துடன்(Complaint form), பிரமாண வாக்குமூல (Proof affidavit) படிவத்தையும் நிரப்பி கொடுக்கணும். (இப்படிவங்கள் நீதிமன்றத்திலயே கிடைக்கும்)


நீதிமன்ற உத்தரவை எதிர்த்தரப்பு நிறைவேற்றவில்லையெனில் நிறைவேற்றச் சொல்லி நீதிமன்றத்தில் மனு அளிக்க வேண்டும்.


நீதிமன்ற தீர்ப்பில் திருப்தி இல்லையெனில், மாவட்ட நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக 30 நாளில் மாநில நீதிமன்றத்திலும், மாநில நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தேசிய நீதிமன்றத்திலும், தேசிய நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யலாம். இதற்கு பின் மேல்முறையீடு செய்ய முடியாது.‘

தகவல்களை பகிர்ந்தவர் வழக்கறிஞர். செல்வகுமாரி நடராஜன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,