பிரெட் ஆனியன் பொடிமாஸ் |

 

பிரெட் ஆனியன் பொடிமாஸ் | 






. அதிகம் மெனக்கெடாமல், அதே நேரம் வாய்க்கு ருசியாக என்ன சமைக்கலாம் என யூடியூபை தேடிக் கொண்டிருக்கும் சிங்கிள் பசங்களுக்கான சிம்பிள் வீக் எண்ட் மெனு


பிரெட் ஆனியன் பொடிமாஸ்

தேவையானவை:

பிரெட் - 10
நீளமாக நறுக்கிய
பெரிய வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 3
துண்டுகளாக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்து - அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு


செய்முறை:

பிரெட்டை நீங்கள் விரும்பும் வடிவில் துண்டுகளாக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயைக் கீறிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்துத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். பிறகு பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, பிரெட் துண்டுகள் சேர்த்துக் கிளறவும். இறுதியாக எலுமிச்சைச்சாறு ஊற்றிக் கிளறி கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,