செட்டிநாடு வித்யாஸ்ரம், ஜவஹர் வித்யாலயா.. பெருகும் பாலியல் புகார்கள்.. அம்பலப்படுத்தும் சின்மயி

 செட்டிநாடு வித்யாஸ்ரம், ஜவஹர் வித்யாலயா.. பெருகும் பாலியல் புகார்கள்.. அம்பலப்படுத்தும் சின்மயிபத்ம சேஷாத்ரி, மகிரிஷி வித்யா மந்திர், செட்டிநாடு வித்யாஸ்ரம், ஜவஹர் வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களை பாடகி சின்மயி அம்பலப்படுத்தி வருகிறார். சென்னை கேகே நகர் பத்ம சேஷாத்ரி, சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர், செட்டிநாடு வித்யாஸ்ரம், ஜவஹர் வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து மாணவிகள், முன்னாள் மாணவிகள் புகார் அளித்து வருகிறார்கள்.

புகார்கள் என்றால் வெறும் புகாராக இல்லாமல் ஆசிரியர்கள் எல்லை மீறியதை போட்டோ எடுத்து ஆதாரமாகவும் கொடுத்துள்ளனர். ஆன்லைன் வகுப்புகளில் இடுப்பில் துண்டுடன் உட்காருவது, மாணவியை சினிமாவுக்கு அழைப்பது குறித்த ஆதாரங்கள் உள்ளன.
குரு தெய்வம் மாதா, பிதா, குரு, தெய்வம் என தெய்வத்தைக் கூட குருவுக்கு அடுத்த ஸ்தானத்தில் வைத்துள்ளார்கள். வீட்டில் இருப்பதை போல் மாணவிகளும் பள்ளியில் நிறைய நேரம் செலவிடுகிறார்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் மகளாக பார்க்கிறேன் மகளாக பார்க்கிறேன் என சொல்லி சொல்லி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளது எந்த வகையில் நியாயம்?

காமக் கண்ணோட்டம் தந்தை தொடுவதற்கும் காமக் கண்ணோட்டத்தில் தொடுவதற்கும் கூட வித்தியாசம் தெரியாதவர்களா இந்த காலத்து மாணவர்கள்? ஆசிரியர்கள் என்றாலே எத்தனை மரியாதை, கவுரவம் கிடைக்கிறது? மாவட்ட ஆட்சியராக இருந்தாலும் தான் படித்த ஆசிரியரை மரியாதை நிமித்தமாக பார்த்து செல்வது எத்தனை பெருமை?
சரஸ்வதி ஹயகிரீவர்களாக, சரஸ்வதிகளாக ஆசிரியர்களும் ஆசிரியைகளும் போற்றப்படுகிறார்கள். ஆனால் மாணவிகளை மார்க் என்ற ஒரு வெற்று விஷயத்தை வைத்துக் கொண்டு அவர்களை மிரட்டி பாலியல் சீண்டல்களை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் இது போன்ற ஆசிரியர்க

மேலும் ஒரு ஆசிரியர் தவறு செய்கிறார் என தெரிந்தவுடன் அதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பாலியல் புகாருக்குள்ளான பள்ளிகள் எல்லாம் சென்னையில் முன்னணி பள்ளிகளாகும். இங்கு வசதி படைத்தவர்கள், பிரபலங்களின் பிள்ளைகள் படிக்கின்றனர். இத்தகைய பள்ளிகளிலேயே இப்படிப்பட்ட விஷயங்கள் நடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இது போன்ற சம்பவங்கள் பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோருக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. பெண் பிள்ளைகள் இப்போதுதான் ஆணுக்கு இணையாக படிக்க வைக்கப்படுகிறார்கள். இத்தகைய சூழலில் இது போன்ற பாலியல் புகார்களால் பெண் பிள்ளைகளை பள்ளிகளில் சேர்ப்பதா வேண்டாமா என சில பெற்றோர் யோசிக்கிறார்கள்.


ஹேஷ்டேக் இதே போல் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்தால் பெண் பிள்ளைகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என சிலர் கருதுகிறார்கள். இது போன்ற பாலியல் புகார்களை ஒவ்வொன்றாக பாடகி சின்மயி அம்பலப்படுத்தி வருகிறார். ஏற்கெனவே சினிமா துறையில் #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் ஒவ்வொரு புகாரையும் கூறி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

source:https://tamil.oneindia.com/

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,