விஸ்வரூபம் எடுக்கும் மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை

 பத்மசேஷாத்ரி விவகாரம்- -ஒய்.ஜி. மகேந்திரன் மகள் மதுவந்தி
மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி, சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. இந்த சர்ச்சையில் பிராமின், நான் பிராமின் அரசியலை புகுத்துகிறார்கள் என்று அப்பள்ளியின் டிரஸ்டியான ஒய்.ஜி. மகேந்திரனின் மகள் மதுவந்தி குற்றம்சாட்டியுள்ளார்.


இது தொடர்பாக மதுவந்தி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது: இப்ப நடந்திருப்பது ஒரு பயங்கரமான, அசிங்கமான நிகழ்வு. பத்மசேஷாத்ரி பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் அங்கு பணிபுரியும் ராஜகோபால் என்கிற ஆசிரியர் பற்றி ஒரு புகார் கொடுத்திருக்கிறார்

இது கடுமையான குற்றச்சாட்டும் புகாரும் ஆகும். இந்த புகார் பற்றின விவரங்கள் எங்களுக்கும் வந்தது. எனக்கும் என் தந்தை ஒய்.ஜி. மகேந்திராவுக்கும் வந்தது.
டிரஸ்டி ஒய்.ஜி. மகேந்திரா என் தந்தை ஒய்.ஜி. மகேந்திரா, ஸ்கூல் மேனேஜ்மென்ட் கிடையாது. அவர் ஒரு டிரஸ்டி. 
இந்த புகார் வந்த கையோடு இரவு 12 மணிக்கு பள்ளி நிர்வாகத்துக்கு இ மெயில் அனுப்பிட்டார் என் தந்தை. இதுக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற விண்ணப்பத்தையும் அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

முக்கியமான விஷயம், என்னுடைய பாட்டி திருமதி ஒய்.ஜி.பி அவர்கள் ரத்தமும் வேர்வையும் சிந்தி உருவாக்கிய இந்த பள்ளியின் கண்ணியம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான். அப்புறமா என்னை ட்ரோல் பண்ணுற கண்மணிகளுக்கு ஒரு முக்கியமான விஷயம்.. உங்க ஸ்கூல்.. உங்க ஸ்கூல்னு ட்ரோல் பண்றீங்க.. ஆமா என் ஸ்கூல்தான்.. நான் படிச்ச ஸ்கூல்.. நடத்துகிற ஸ்கூல் இல்லை. என்னை போல ஆயிரக்கணக்கானோர் படித்து கொண்டிருக்கும் பள்ளி. இப்போது நடந்திருப்பது அசிங்கமான ஒரு விஷயம். இதுக்கு சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
இதுல ஜாதி, மத ம், இனம், இதெல்லாம் உள்ள புகுத்தி... பிராமின், நான் பிராமின், ஷத்ரியா, வைஷியா, சூத்ரா, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், ஜெயின் ,சீக்கியர்னு தப்பான அரசியலை விளையாடாதீங்க.. அரசாங்கத்திடமும் நான் கேட்டுக் கொள்வது.. நீங்க என்ன நடவடிக்கை எடுக்கிறீங்களோ அதுக்கு முழு ஒத்துழைப்பை எங்க குடும்பத்தின் சார்பாக நாங்க கொடுப்போம்.


நாங்களும் நடவடிக்கை எடுக்கத்தான் கேட்டிருக்கிறோம். இப்போதைக்கு ராஜகோபாலன் அவர்களை சஸ்பென்ட் செய்யப்பட்டிருக்கிறார். அது மிகச் சரியான நடவடிக்கை. அப்பதான் படிக்கிற மாணவர், மாணவியருக்கும் பெற்றொருக்கும் ஒரு நம்பிக்கை வரும். 
 நடக்கிறது என்னானு நாங்க பார்க்கப் போகிறோம். அதுவரை சும்மாவும் இருக்கமாட்டோம். கேட்க வேண்டிய கேள்விகளை கேட்டுகிட்டுத்தான் இருப்போம்.Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,