அன்றும் இன்றும் என்றும்
அயறாது நம் நலன் கருதும்
தெவிட்டாத அன்பு காட்டும்
தொல்லைகள் பல வந்தாலும்
இரும்பு இதயம் கொண்டு
இடர்களை நீக்கி
நம்மை நல்வழி படுத்தி
நலமுடன் வாழ வைக்கும்
நம் நலனே மூச்சாக பேச்சாக
தன் ஊன் வருத்தி
தன் உயிர் வருத்தி
நமக்கு உயிர் தந்த நம்
நடமாடும் தெய்வத்தை போற்றுவோம்
நலம் பெற வழிபடுவோம்
நித்தம் செய்ய வேண்டிய இந்த
நற்காரியத்தை இன்றேனும் செய்வோம்
நன்றி தாயே!!!.....!!!
#மனதின் ஓசைகள்.
மஞ்சுளா யுகேஷ்.
No comments:
Post a Comment