- பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கான திட்டத்தை விமர்சிக்கும் பிரஷாந்த் கிஷோர்

 

மோடி அரசின் மாஸ்டர் ஸ்ட்ரோக்- பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கான திட்டத்தை விமர்சிக்கும் பிரஷாந்த் கிஷோர்






நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலின் போது மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. நிச்சயம் நூற்றுக்கும் குறைந்த அளவிலான இடங்களை மட்டுமே பெற்று தோல்வியை தழுவும் என்று, திரிணாமுல் காங்கிரஸின் தேர்தல் ஆலோசகரான பிரஷாந்த் கிஷோர் திட்டவட்டமாக தெரிவித்தார். அதேபோல், வெளியான தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க-விற்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 10 சதவீதமாக இருந்தது. அதைத்தொடர்ந்து, மத்திய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வருபவர் தற்போது மத்திய அரசு அறிவித்திருக்கும், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான உதவித் திட்டத்தை பா.ஜ.க-வின் மற்றொரு ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ என்று நகை முரணோடு விமர்சித்துள்ளார்.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டையும், நாட்டு மக்களையும் புரட்டிப் போட்டு வருகிறது. தினந்தினம் சற்றும் எதிர்பார்த்திராத மரணங்களும், அதிர்ச்சியூட்டும் சம்பவங்களும் நம்மைச் சுற்றி நிகழ்ந்து வருகிறது. இதில் கொரோனாவால் பெற்றோர்கள் இருவரையும் இழந்த குழந்தைகளின் நிலை துயரத்தின் உச்சம். இதனால், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை, இலவசக் கல்வி, முன்னுரிமை, வங்கியில் வைப்புத்தொகை என பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அறிவித்தன.


இதேபோல், கொரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவாக மத்திய அரசு புதிய திட்டங்களை அறிவித்தது. அந்த அறிவிப்புகளை பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக, அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,`` பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு PM Cares வழியாக, அவர்களின் 18-வது வயது முதல் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும். அவர்களது 23-வது வயதில் 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும். இலவச கல்வி அளிக்கப்படும். அதேபோல், அவர்கள் உயர்கல்வி மேற்கொள்வதற்காக கடன் வழங்கப்படும். அதற்கான வட்டியை PM Cares மூலம் அரசாங்கமே செலுத்திவிடும். ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் கீழ் 5 லட்ச ரூபாய்க்கான காப்பீட்டுத் திட்டம் இலவசமாக வழங்கப்படும்." என்று அறிவிக்கப்பட்டது.

இதை கடுமையாக விமர்சித்துள்ள பிரஷாந்த் கிஷோர், ``மோடி அரசின் அலட்சியப் போக்கால் பெருகிவரும் கொரோனாவின் இரண்டாவது அலையில், பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் உடனடி தேவைகளுக்கு வழிவகுக்காமல் அவர்களின் 18-வது வயதில் உதவித்தொகையை வழங்கும் மத்திய அரசின் PM Cares திட்டத்தை எண்ணி பெருமை கொள்ளுங்கள். இது மோடி அரசின் மற்றுமொரு மாஸ்டர் ஸ்ட்ரோக். ஏற்கனவே, இந்திய அரசியல் அமைப்பில் கட்டாயமாக இருக்கும் இலவச கல்வியை புதியதொரு திட்டமாக மோடி அறிவித்திருப்பது நெகிழ்வாகவுள்ளது” என கேலியாக விமர்சித்துள்ளார்.

அதேபோல்,``ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அந்த குழந்தைகளை சேர்ப்பதாக கூறியதற்கு நன்றி. 50 கோடி மக்களுக்கான சுகாதாரத் தேவைகள் பூர்த்தி செய்வதாக கூறிய திட்டம் அது. ஆனால், தேவையான நேரத்தில் ஆக்ஸிஜன், படுக்கை வசதிகளையும் கூட அவர்களால் வழங்க இயலவில்லை” என பிரஷாந்த் கிஷோர் கடுமையாக சாடியுள்ளார்.

இவை எல்லாவற்றையும் சாத்தியப்படுத்த PM Cares திட்டத்திற்கு வரக்கூடிய நிதியானது தொடர்ந்து சீராக வந்து கொண்டிருக்க வேண்டும். அது, வரும் காலங்களில் சாத்தியப்படுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே(?). இது மோடி அரசு புரிந்திருக்கும் மற்றொரு மிகப்பெரிய தவறு என்று காரசாரமாக கூறியுள்ளார்.

கடந்த மே 21-ம் தேதி மாநில மற்றும் யூனியன் அரசுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் குறித்த தரவுகளை மத்திய அரசிடம் சமர்பிக்குமாறு தெரிவித்திருந்தனர். அந்த தரவுகளின்படி, நாட்டில் கடந்த ஏப்ரல் முதல் மே மாதம் வரை சுமார் 577 குழந்தைகள் கொரோனாவால் தங்களது பெற்றோர்கள் இருவரையும் இழந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

courtesy:https://www.vikatan.com/

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,