புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம்' - கவிஞர் வைரமுத்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

 'புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம்' - கவிஞர் வைரமுத்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

கவிஞர் வைரமுத்துவுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், இவ்விருது வைரமுத்துவின் தமிழாற்றல் எல்லைகளை விரிவுபடுத்தி உலகளாவிய விருதுகளை நோக்கிய அவரது பயணத்திற்கான பாதையை வகுத்திருப்பதாக பாராட்டியுள்ளார்.
கவிஞர் வைரமுத்துவுக்கு, மலையாளப் பல்கலைக்கழகம் வழங்கும் கவுரவமிக்க ஓஎன்வி விருது, வழங்கப்பட்டுள்ளது.
மலையாளக் கவிஞரும் பாடலாசிரியரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓஎன்வி குறுப்புவின் பெயரில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் இவ்விருது முதல் முறையாக கேரளாவை சாராத வேறு மொழி கவிஞருக்கு அளிக்கப்படுகிறது. இவ்விருதைப் பெறுவதில் மிகப் பெரும் மகிழ்ச்சி அடைவதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், அணைகடந்த வெள்ளம்போல்
'என் காதலா' என்ற
என் ஆறாம் பாட்டுக்கு
நீங்கள் வழங்கிவரும் வரவேற்பால்
என் மனசுக்குள் மயிலிறகு ஊர்கிறது.
நீங்கள்
ஒருமுறை இட்ட பதிவை
இருமுறை வாசிக்கிறேன்.
மேகமில்லாமல்
ஏது மழை?
நீங்களில்லாமல்
ஏது கலை?
நன்றி. என கூறியுள்ளார்
நன்றி: நியூஸ் 18 தமிழ்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,