உங்களுக்கு IQ குறைவா?.. வானதியை கண்டித்த பிடிஆர்

 

நிறுத்துங்கள்! நீங்கள் பிறவியிலேயே பொய்யரா?.. இல்லை உங்களுக்கு IQ குறைவா?.. வானதியை கண்டித்த பிடிஆர்
உங்கள் பொய் மூட்டைகளுடன் என்னை டேக் செய்வதை நிறுத்துங்கள், அதற்கு பதிலாக ஏதேனும் பயனளிக்கக் கூடிய பணிகளை பாருங்கள் என பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசனுக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காட்டமாக பதில் அளித்துள்ளார்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கோவாவிற்கு எதிராகவும் அந்த மாநிலத்தை அவமதித்ததும் தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கோவாவின் போக்குவரத்துத் துறை அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.
ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதில் கோவா போன்ற சிறிய மாநிலங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என கோடின்ஹோ கோரிக்கை வைத்தார்.

இதை பிடிஆர் எதிர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே கோவாவை அவமதித்த பிடிஆர் கோவா மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த மாநில அமைச்சர் கேட்டுக் கொண்டார். இதற்கு விளக்கமளித்த பிடிஆர் நடந்தவற்றை விளக்கிக் கூறி, தான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை என கூறிவிட்டார்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் வானதி ஸ்ரீனிவாசன் தலையிட்டதை அடுத்து அவருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து வானதி ஸ்ரீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பிடிஆரை டேக் செய்து வெளியிட்ட பதில், ஜிஎஸ்டி கவுன்சிலில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நடந்து கொண்ட விதம் நமது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட அவமானம்

நமது மாநிலத்திற்கு களங்கத்தை ஏற்படுத்திவிட்டது. கோவா போக்குவரத்துத் துறை அமைச்சரை விமர்சனம் செய்வதால் தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வானதி தெரிவித்திருந்தார்.

ஜிஎஸ்டி கவுன்சிலில் நடந்தது என்ன என்பது குறித்து தெளிவாக விளக்கிக் கூறியும் வானதி ஸ்ரீனிவாசன் இவ்வாறு கூறியதை கண்ட பிடிஆர் கோபத்துடன் பதில் அளித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், உங்கள் பொய்களுடன் என்னை ட்விட்டரில் டேக் செய்வதை நிறுத்துங்கள். ஏதாவது பயனுள்ள பணிகளை செய்யுங்கள்.

நீங்கள் பிறவியிலேயே பொய்யரா இல்லை உங்களுக்கு உண்மையில் IQ திறன் குறைவா? ஒரு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் யாரும் யாரையும் அவமதித்துவிடலாம் என நினைக்கிறீர்களா? என கூறிய பிடிஆர், கொஞ்சம் பொறுங்கள், நான் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காதீர். இது கொஞ்சம் கஷ்டமான கேள்வி. நீங்கள் இரண்டுமே என பதில் அளித்துள்ளார். இதையடுத்து வானதியை ட்விட்டரில் பிளாக் செய்துள்ளார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,