சட்டம் அறிவோம் / *போக்சோ சட்டம்:- POCSO Act:-*

சட்டம் அறிவோம்


*போக்சோ சட்டம்:-

POCSO Act:-*



பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து குழந்தைகளை (சிறார்களை) பாதுகாக்கும் சட்டம்.


ஆண், பெண் என்ற

பாலின வித்தியாசமின்றி 

18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளையும்

பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பதற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டு,

 2012 ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகின்றது.


இந்த சட்டத்தின் பிரிவுகள் பிணைவிடா (Non Bailable) குற்றங்களாகும்.


இந்த சட்டத்தின் 

பிரிவு 3 மற்றும் 4ன் படி குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்துவது குற்றம் ஆகும். இதற்கு குறைந்தபட்சம்

 7 ஆண்டுகளும், அதிகபட்சம் ஆயுள் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.


சட்டப் பிரிவு 5 மற்றும் 6 படி குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவர்கள், குழந்தைகளின் பெற்றோர், காப்பாளர், ஆசிரியர் அல்லது காவல் துறை அதிகாரியாக இருந்தால் அவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் அதிகபட்சம் ஆயுள் தண்டனையும் வழங்கப்படும். உடன் அபராதமும் விதிக்கப்படும்.


சட்டப் பிரிவு 7 மற்றும் 8ன் படி குழந்தைகளை அவர்களின் அந்தரங்க உறுப்பைகளை தொடுவது, அல்லது மற்றவரின் அந்தரங்க உறுப்புகளை கட்டாயப்படுத்தி தொடவைப்பது (பாலியல் சீண்டல்) குற்றம். 

இதற்கு, குறைந்தபட்சம் 

3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அதிகபட்சம் 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் 

அபராதமும் விதிக்கப்படும்.


சட்டப் பிரிவு 9 மற்றும் 10ன் படி குழந்தைகளை பாலியல் சீண்டல்கள் செய்தவர்கள் குழந்தையின் பெற்றோர், காப்பாளர் ஆசிரியர் அல்லது காவல் துறை அதிகாரியாக இருந்தால் அவர்களுக்கு குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அதிகபட்சம் 7 ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.


சட்டப் பிரிவு 11 மற்றும் 12ன் படி குழந்தைகளை பாலியல் ரீதியாக செய்கைகள் காட்டுவது, தொலைபேசி, அலைபேசியில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது போன்ற குற்றங்களுக்கு அபராதம் அல்லது அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.


சட்டப் பிரிவு 13 மற்றும் 14ன் படி குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை எடுப்பது, விற்பது, தயாரிப்பது, மற்றவருக்கு கொடுப்பது, குற்றமாகும். 

அது இணைய தளம், அல்லது கணிணி என எந்த தொழில்நுட்ப ரீதியில் இருந்தாலும் குற்றமே. இதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை



தகவல்களை பகிர்ந்தவர் 

வழக்கறிஞர். செல்வகுமாரி நடராஜன்

.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,