கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு நாள் இன்று ஜீன் 2

 கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு நாள் இன்று ஜீன் 2கவிக்கோ அப்துல் ரகுமான்
தமிழில் உயர்கல்வி பயின்ற போது ஆங்கில இலக்கியம் மீதும் நேசம் பிறந்தது. கீட்ஸ், ஷெல்லி உள்ளிட்ட கவிஞர்களின் கவிதையில் மனம் கவரப்பட்டார். கல்லூரியில் நடக்கும் அனைத்து கவிதைப் போட்டிகளிலும் இவருக்குத்தான் முதல் பரிசு கிடைக்கும். முதுகலைக் கல்வி பயிலும்போது, மவுலானா ஜலாலுத்தீன் ரூமி, இக்பால், தாகூர், கலீல் ஜிப்ரான் ஆகியோரது கவிதைகளைப் படித்தார். அவர்களைப் போலவே எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டு, அவ்வாறே எழுதவும் தொடங்கினார்.
தமிழ், ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். சமஸ்கிருதமும் கற்றார். எந்தத் துறையில் இறங்கினாலும் அதன் வேர் வரை சென்று ஆழக் கற்பது இவரது இயல்பு.சிலப்பதிகாரம்
பால் நகையாள்
வெண்முத்துப் பல்நகையாள்
கண்ணகியாள் கால் நகையால்
வாய்நகைபோய்க்
கழுத்து நகை இழந்த கதை!
- கவிக்கோ அப்துல் ரகுமான்


ஒன்பது வயதில்
"எழிலன்னை ஆட்சியடா! -அது
எங்கெங்கும் காணுதடா!
பொழிலெங்கும் பாடுகிறாள் -புதுப்
பூக்களில் புன்னகைத்தாள்
மாலை மதியத்திலும் -அந்தி
மந்தார வானத்திலும்
சோலையின் தென்றலிலும் -சுக
சோபனம் கூறுகிறாள்
மலைகளின் மோனத்திலே- அந்த
வானவில் வண்ணத்திலே
அலைகளின் பாடலிலே -அவள்
அருள் பொங்கி வழியுதடா! "
என்ற தனது முதல் கவிதையை எழுதினார் அப்துல் ரகுமான்.
நன்றி: விகடன்

பன்மொழி புலமை
சிறு வயது முதலே கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்ட அப்துல் ரகுமான், தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாகவும் இவர் விளங்கினார்.
பால்வீதி
இவரின் முதல் கவிதை தொகுப்பு ‘பால்வீதி' 1974ஆம் ஆண்டு வெளிவந்தது. ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை தமிழில் பரப்பியதில் முக்கிய பங்கு வகித்தவர்.
சாகித்ய அகாடமி விருது
வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் தமிழ்த் துறையில் 20 ஆண்டுகள் பணியாற்றினார். இவர் 1999ஆம் ஆண்டு எழுதிய 'ஆலாபனை' கவிதைத் தொகுப்பு சாகித்ய அகாடமி விருது வென்றது குறிப்பிடத்தக்கது.
நன்றி: ஒன் இந்தியா தமிழ்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,