இன்று உலக இசை தினம் (21.06.2021)
இன்று உலக இசை தினம் (21.06.2021)
"பாடலின் உருவாக்கம் இசையோடு சங்கமம்"
உந்திக் கமலத்தில் உருவாகும் சொற்களாய்
தொண்டைக் குழிக்குள் ஏறி இறங்கும் குரலாய்
நாவினில் வந்து நர்த்தனமாடும் ஒலியாய்
செவிகளுக்குள் இதமென பாயும் தேனாய்
இசையுடன் பாடல்கள் சேர்ந்து உருவாகும்
கீதம் சங்கீதமென ராகங்களாய்
அது தரும் பலவித மெட்டில் பேரின்ப நாதமாய்
ஏழு ஸ்வரங்களில் ஒன்றிணைந்த சங்கீதம்
இசைப்பவருக்கு மொழி தாண்டிய ஸ்வரகீதம்
இனிய பாட்டினால் ஈர்க்கும் இசையுமொரு காந்தம்
கீதம் சங்கீதம்
மனதை வருடி வருடி தரும் பேன்பம்
கீதம் சங்கீதம்
இசையால் நம்மை இசைய வைக்கும்
இசையெனும் ரசிப்பே
சிந்தையில் சேர்ந்து மகிழ வைக்கும்
பண்ணில் பாட்டில் கலந்து உன்னில் எதோ ஒன்றை கொடுக்கும்.
உலகும் முழுவதும் இசையென்றும் இன்ப ஓசையால் வியக்கும்.
முருக.சண்முகம்
Comments