வறட்டு இருமல் வருதா? அதற்கான காரணமும் தீர்வும்

 அடிக்கடி வறட்டு இருமல் வருதா? அதற்கான காரணமும் தீர்வும்ஒவ்வொரு முறை தூசிகள் நுரையீரல், தொண்டை அல்லது சுவாச பாதையில் நுழையும் போது, உடல் அதை இருமலின் மூலம் வெளிக்காட்டும். வறட்டு இருமலும் அப்படித் தான். சிலருக்கு இரவு நேரத்தில் மட்டும் இருமல் வரும். அதுவும் நன்கு ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டது போல் இருமல் கடுமையாக வரும். 


வறட்டு இருமல் பல காரணங்களால் வரும். இந்த வறட்டு இருமலைப் போக்க வேண்டுமானால், முதலில் அதற்கான காரணத்தை அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். மேலும் ஒருவருக்கு வரும் இருமல் வறட்சியால் தான் ஏற்படுகிறது என்பதை ஒருசில அறிகுறிகள் கொண்டும் அறிந்து கொள்ளலாம். 


வறட்டு இருமலுக்கு என்று மருந்து மாத்திரைகள் எதுவும் எடுக்காதீர்கள். இத்தகைய பிரச்சனைக்கு இயற்கை வழிகளின் மூலம் தீர்வு காண்பதே சிறந்தது. இக்கட்டுரையில் ஒருவருக்கு எதனால் வறட்டு இருமல் வருகிறது, அதற்கான அறிகுறிகள் மற்றும் தடுக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். 


வறட்டு இருமல் எதனால் வருகிறது?


* சுவாசப் பாதையில் உள்ள தொற்றுகள் இருந்தால் வரும். 


* சைனஸ் பிரச்சனை இருந்தால் வரும். 


* நிமோனியா


* தூசி அல்லது மகரந்தத்திற்கு அலர்ஜி என்றால் வரும். 


வறட்டு இருமலுக்கான அறிகுறிகள்


* சளி வெளிவராது. 


* தொண்டை வறண்டு, புண்ணாக இருக்கும். 


* மிகுதியான களைப்பு


* பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம்


* எரிச்சலூட்டும் தன்மை


இப்போது வறட்டு இருமலுக்கான சில எளிய இயற்கை நிவாரணிகளைக் காண்போம். 


மஞ்சள் பால்


காலங்காலமாக வறட்டு இருமலுக்கு மேற்கொள்ளப்படும் இயற்கை சிகிச்சை தான் இது. அதற்கு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இதனால் வெதுவெதுப்பான பால் தொண்டையை அமைதியடையச் செய்து, எளிதில் தூங்க உதவும். மேலும் மஞ்சள் தூளில் உள்ள ஆன்டி-பயாடிக் தன்மை இருமலை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும். 


மசாலா டீ


ஒரு டம்ளர் நீரில் சோம்பு அல்லது பட்டையைப் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி குடிப்பதன் மூலம், வறட்டு இருமல் போய்விடும். வேண்டுமானால் சுடுநீரில் சிறிது இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்தும் குடிக்கலாம். முக்கியமாக சுவைக்கு தேன் சேர்த்துக் கொள்ளுங்கள். 


துளசி


துளிசியில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது தொண்டையில் உள்ள கரகரப்பு மற்றும் வறட்டு இருமலை சரிசெய்யும். அதற்கு துளசி இலைகளை சிறிது வாயில் போட்டு மென்று விழுங்கலாம் அல்லது துளசி இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து தேன் கலந்து குடிக்கலாம். 


தேன்


தேனில் உள்ள உட்பொருட்கள், வறட்டு இருமலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறுடன், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 5 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, 2 நிமிடம் சூடேற்றி, பின் உட்கொள்ள வேண்டும். இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, வறட்டு இருமலில் இருந்து விடுபடலாம். 


கற்றாழை


கற்றாழையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வறட்சி இருமலில் இருந்து விடுவிக்கும். அதற்கு ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸ் உடன் சிறிது தேன் கலந்து, குடிக்க வேண்டும். 


வெங்காயம்


வெங்காயத்தில் உள்ள சல்பருக்கு நாள்பட்ட இருமலைப் போக்கும் சக்தி உண்டு. அதற்கு 1 டீஸ்பூன் வெங்காய சாற்றுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து, 3-4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் இந்த கலவையை தினமும் மூன்று வேளை உட்கொள்ள வேண்டும். இதனால் வறட்டு இருமலைத் தடுக்கலாம். 


மருதாணி இலை


ஒரு டம்ளர் நீரில் சிறிது மருதாணி இலைகளைப் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரால் தினமும் 2 முறை வாயைக் கொப்பளிக்க வேண்டும். இதனாலும் வறட்டு இருமலில் இருந்து விடுபடலாம். 


பாதாம்


8-9 ஊற வைத்த பாதாமை, தோல் நீக்கி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அத்துடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் வெண்ணெய் சேர்த்து கலந்து, நாள் ஒன்றுக்கு 2-3 முறை என உட்கொள்ள நல்ல பலன் கிடைக்கும். 


ஓமம்


ஒரு டம்ளர் நீரை சூடேற்றி, அத்துடன் 1 ஸ்பூன் ஓமம், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, சிறிது தேன் கலந்து, தினமும் 2 வேளை குடித்து வந்தால், சீக்கிரம் வறட்டு இருமலில் இருந்து விடுபடலாம். 


இஞ்சி


1/2 ஸ்பூன் இஞ்சி பேஸ்ட் உடன், 1/2 ஸ்பூன் மிளகுத் தூள் மற்றும் தேன் கலந்து சாப்பிட வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 வேளை சாப்பிட்டால், நெஞ்சு சளி வெளியேறுவதோடு, வறட்டு இருமலும் நீங்கும். 


ஆப்பிள் சீடர் வினிகர்


ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 4 ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, நாள் முழுவதும் குடித்து வந்தால், சுவாசப் பாதையில் உள்ள தொற்றுக்ள் சரியாகும். 


ஏலக்காய்


உங்களுக்கு இரவில் வறட்டு இருமல் அதிகம் வருமாயின், இரவில் படுக்கும் முன் ஏலக்காயை வாயில் பேடுங்கள். இதனால்வறட்டு இருமல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,