கோவா இளைஞர்களிடையே பிடிஆர்

 கோவா இளைஞர்களிடையே பிடிஆர் டிரென்டாகி வருகிறார். பிடிஆர் யார் என்பது குறித்து கோவா மக்கள் தேடியதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. அந்த செய்திகளை சுட்டிக் காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உருக்கமான கருத்தை தெரிவித்தார்.

மார்க்கம்
இதுகுறித்து அவர் கூறுகையில் நான் இதுவரை விமானம் மூலமாகவும் சாலை மார்க்கமாகவும் பல லட்சக்கணக்கான மைல்களுக்கு சென்றுள்ளேன். இதுவரை 2 ஆயிரம் விமானங்களில் பயணித்துள்ளேன். சில நேரங்களில் கன்கார்டு விமானத்திலும் (ஒலியை விட வேகமாக செல்லும் விமானம்) பயணம் செய்துள்ளேன்.
6 கண்டங்கள்
அது போல் 6 கண்டங்களில் உள்ள 60 நாடுகள், அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களுக்கும் சென்றுள்ளேன். ஆனால் இன்று நான் ஒரு உண்மையை புரிந்து கொண்டுள்ளேன். நான் கிட்டதட்ட போதுமான தூரம் பயணம் செய்யவே இல்லை. ஆம், இதுவரை நான் கோவாவுக்கு சென்றதில்லை என கூறி அந்த மக்களுக்கு அன்பையும் , நன்றிகளையும் சமிக்ஞை மூலம் தெரிவித்துள்ளார் பிடிஆர்.
நன்றி: ஒன் இந்தியா தமிழ்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,