#இசைஞானி

 எழுபதுகளின் இறுதி காலமது...

1930 ஆம் ஆண்டுகளில் தொடங்கிய மொழித் திணிப்புக்கு எதிரான சீற்றம் தணியத் தொடங்கிய சூழல்.
இன்னிசை வழியே இந்திய துணைக்கண்டத்தில் வாழும் ஆதிக்க மனநோயாளிகளின் அன்னை மொழியாகிப் போன 'ஹிந்தி' தமிழ்நாட்டில் மெல்ல மெல்ல கால் பதிக்கத் தொடங்கிய நேரம்.
பெல்பாட்டம் ரெட்ரோ வகை இளைஞர்களின் முணுமுணுப்பாக அப்போது பாலிவுட் பாடல்கள் மாறத்தொடங்கின.
தமிழ் பாடகர்களின் உச்சரிப்பு பிழைகளை பாட்டளவில் கூட ஏற்காக இன்னிசை மன்னர் எம்.எஸ்.வீ தனது திரையுலக அந்திமக் காலத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம்.
அதே காலத்தில் பண்ணைப்புரத்தில் இருந்து வந்த அந்த ராசைய்யா தனது ஒற்றை ஆர்மோனியப் பெட்டியை வைத்து, தன் இசை சாம்ராஜ்ஜியத்தை கட்டமைக்கத் தொடங்குகிறார்.
'அண்ணக்கிளி உன்ன தேடுது...' என அதன் முதல் தனியிசை தமிழ்நிலத்தில் அடுத்துக்கட்ட ஆலாபனையை தொடங்கியது தான் தாமதம். காட்சிகள் மாறுகின்றன.


அடுத்த ஓரிரு ஆண்டுகளில் மீண்டெழுந்த தமிழிசை தன்னை மக்களிசையாக தகவமைத்துக் கொள்கிறது.
மைலாப்பூர் கச்சேரி சபாக்களில் தொடைத் தட்டி ரசிக்கும் 'சுத்த சன்னியாசி'களின் வசம் மட்டும் அதுநாள் வரை கர்நாடக இசையாக வாசம் செய்துவந்த பெருங்கலை ஒன்று...
ஞான சூனியங்களின் இசையாக, ஊர் நாட்டானின் இசையாக, பஞ்சப்பறாரிகளின் இசையாக, பாமர மக்களின் இசையாக, பட்டிக்காட்டான்களின் இசையாக திரையிசையாக மாறுகிறது.
ஒலிக்குறிப்பு ஓசைகளுக்கு அவர் தந்த அதே முக்கியத்துவம் தமிழுக்கும் தந்தார். தமிழை தமிழாக தந்த கவிஞர்களுக்கு அவர் வழியே சங்கம் நடத்தும் வாய்ப்பு ஏற்பட்டது.
தமிழை கொல்லாத இரசிக்கத்தக்க இசை - பல இடங்களில் மொழியே தேவையற்றதென சொல்லிய இசை அவரது இசை.
இளையராஜா எனும் சிம்போனி மாமேதை இசைக்கு செய்த தொண்டைவிட, தமிழுக்கு செய்த தொண்டு அதிகம்.
தமிழிசை மீட்பரான ஆப்ரகாம் பண்டிதரின் பணிகளுக்கு இணையான பணியை செய்தவர் அவர்.
பார்ப்பனீயம் - வைதீகம் - சனாதனம் கைக்கொண்டிருந்த ஏழிசையை ஏழை சனங்களின் இசையாக்கிய அவர் தாம் தன்னையறியாமலே இந்தி திணிப்புக்கு எதிரான கலகக்காரராக இருந்தவர் !

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,