ஆரம்பம் முதலே துணிச்சலுடன் பதிலடி கொடுக்கும் ஸ்டாலின்!

 

இந்து கோயில்கள்'.. பரப்பப்பட்ட பொய்கள்... ஆரம்பம் முதலே துணிச்சலுடன் பதிலடி கொடுக்கும் ஸ்டாலின்!
இந்துக்கள், கோயில்கள் விவகாரத்தில் தனக்கு எதிராக பரப்பப்பட்ட பொய்களுக்கு ஆட்சியின் ஆரம்பம் முதலே பதிலடி கொடுக்கும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.

கோயில் சொத்துக்கள் இணைத்தில் பதிவேற்றம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம், பெண்களும் அர்ச்சகர், வடலூர் வள்ளலார் சர்வதேச மையம், ஒவ்வொரு கோயில்களையும் புணரமைப்பது என அதிரடி காட்டி வருகிறது.

கடந்த ஆண்டு திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று தவறான பிரச்சாரங்களை சமூக வலைதளங்களில் சிலர் பரப்பினர். வதந்தி என்று சாதாரணமாக முடிய வேண்டிய இந்த விவகாரம் மிகப்பெரிய நெருக்கடியை திமுகவிற்கு ஏற்படுத்தியது. திமுகவின் முக்கிய நிர்வாகிகளே இதற்கு விளக்கமும் கொடுக்கும் அளவிற்கு வதந்திகள் காட்டுத்தீ போல் பரவின

திமுக அரசு சமூக நீதி, பகுத்தறிவு விஷயங்களில் தீவிரமான அடித்தளத்துடன் செயல்பட்டு வரும் திமுக, இந்து மதக்கடவுள் விவகாரத்தில் பாரபட்சமாக இருப்பதாக சட்டசபை தேர்தல் நேரத்தில் திமுகவிற்கு நெருக்கடிகளும் எழுந்தன. ஆனால் அதனை எல்லாம் சமாளித்து ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தற்போது இந்து கோயில்கள் விவாகரத்தில் புதிய முயற்சியில் இறங்கி உள்ளது.

மீட்கப்படும் நிலங்கள் கோயில்களின் சொத்து விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் ஆக்கிரமிப்புகள் எல்லாம் அகற்றப்படும் என்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். அறிவித்தபடி சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான இடம் மீட்கப்பட்டது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான இடமும் மீட்கப்பட்டது. இன்னும் பல கோயில் நிலங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சொத்து விவரங்கள் பதிவேற்றம் இதேபோல் சொன்னபடி கோயிலின் சொத்துவிவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கியது. பல்வேறு கோயில் சொத்துக்களின் விவரங்கள் இணைதளங்களில் காண முடியும். கோயிலின் ஆவணங்களையும் டிஜிட்டல் வடிவில் பாதுகாக்கும் பணியும் தொடங்கியது. பழமையான கோயில் ஆவணங்களை ஸ்கேன் செய்து இணையதளத்தில் பதிவேற்றும் பணியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதேபோல் தினசரி கோயில் வரவு செலவு கணக்குகளும் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.

பெண்கள் அர்ச்சகர் இன்னொரு பக்கம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை அடுத்த 100 நாளில் நடைமுறைப்படுத்துவோம் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இதற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதேபோல் பெண்களையும் அர்ச்சகர்களாக ஆக்கும் திட்டத்தை கொண்டுவருவோம் என்றும் சேகர்பாபு அறிவித்தார். இந்த அறிவிப்புக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது.

கவனமாக இருக்கும் ஸ்டாலின் இதேபோல் திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன வடலூர் வள்ளாலார் சர்வதேச மையம் அமைக்கும் பணியும் தொடங்கப்பட உள்ளது.இதுபற்றியும் அமைச்சர் சேகர்பாபு அண்மையில் ஆய்வு செய்தார். இதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களுக்கு சென்றுவரும் அமைச்சர் சேகர்பாபு, அங்குள்ள கோயில்களின் நிலையை அறிந்து புணரமைக்கவும் உத்தரவிட்டு வருகிறார். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கோயில் அச்சகர்களுக்கு உதவித்தொகையும் அண்மையில் வழங்கப்பட்டது. இப்படி இந்து கோயில்கள் விவகாரத்தில் பல்வேறு நடவடிக்கைளை ஸ்டாலின் தலைமையிலான அரசு வெளிப்படையாக செய்து வருகிறது. இதன் மூலம் கோயில்கள் விவகாரத்தை வைத்து அரசியல் செய்துவிடக்கூடாது என்பதில் திமுக மிகவும் கவனமாக இருப்பதாக சொல்கிறார்கள்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,