பயமும் டென்ஷனும் உடலை என்ன செய்கின்றது?

: பயமும் டென்ஷனும் உடலை என்ன செய்கின்றது? 
 
தொடர்ந்து மனிதன் ஏதோ ஒரு ஆபத்தினை உடல் ரீதியாக, மன ரீதியாகவோ ஏற்க நேர்ந்தால் அது அந்த மனிதனின் உடலையும், மனதினையும், வெகுவாய் பாதித்து விடுகின்றது.


மனிதன் மிகுந்த தைரியசாலியாகத்தான் இருக்கிறான். எதனையும் ‘ஏன்’ ‘எதற்கு’ என்று ஆராய்ந்து அதனை எதிர் கொள்கிறான். ஆனால் ‘நோய்’ என்ற ஒரு சொல்லுக்கு வெகுவும் அஞ்சுகிறான். மனம் சோர்ந்து விடுகின்றான். இந்த பயமே அவனுக்கு நோயினை கொண்டு வந்து விடுகின்றது. நோயின் தீவிரத்தினை அதிகப்படுத்துகின்றது. பலர் இந்த பயத்திலேயே வாழ்க்கையை கூட சீக்கிரம் இழந்து விடுகின்றனர். காரணம் மனதிற்கு அப்படி ஒரு சக்தி உண்டு.


* சிலர் எதற்கெடுத்தாலும் கவலைப்படுபவராக இருப்பர். குடும்பத்தினர் உடல் நலம், தன் உடல் நலம், பணபாதுகாப்பு, அன்றாட வேலைகள் என கவலையே பேச்சாக இருக்கும். இவர்களுக்கு அடிக்கடி உடல்வலி, சோர்வு, தலைவலி, வயிற்றுப்பிரட்டல், மூச்சு வாங்குதல் போன்றவை இருக்கும்.


* சிலருக்கு பூச்சிகள்-சிலந்தி, கரப்பான் பயம் மற்றும் கூட்டம் ஒத்துக் கொள்ளாது. உடனடி உடல் நல பாதிப்பு ஏற்படும்.


* சிலருக்கு ஒரு இடத்திற்குச் சென்றால் எல்லோரும் தன்னையே கவனிப்பதை போலவும், தன்னை பற்றியே பேசுவதைப் போலவும் தோன்றும்.


* ஒரு விபத்து, உடல் நல பாதிப்பு, ஒரு கடினமான சூழ்நிலை இவற்றிலிருந்து வெளி வந்த பிறகு அந்த தாக்கத்தால் சிறு சத்தம் கூட இவர்களை அதிர வைக்கும்.


* சிலர் அடிக்கடி கையை சுத்தம் செய்வர். வீட்டை சுத்தம் செய்தபடியே இருப்பர்.


* சிலர் அடிக்கடி படபடப்பு, மயக்கம், சோர்வு என்றே இருப்பர். பொதுவில் பயம் உடையவருக்கு உணவுப் பாதை, சீரண உறுப்புகள், சீரண சக்தி இவை பாதிப்பு ஏற்படும். மூச்சு மண்டல பாதிப்பு, இருதய பாதிப்பு என மொத்தத்தில் முழு உடல் நல பாதிப்பினை ஏற்படுத்தி விடுவதால் இந்த பாதிப்பினை தவிர்த்து வாழும் முறையை அறிந்தால் மட்டுமே மனிதன் நோயின்றி வாழ முடியும்.


பயமும், டென்ஷனும் உடலை என்ன செய்கின்றது?


பயம் மனித உணர்ச்சியின் வெளிப்பாடு. ஏதோ ஒன்றினைப்பற்றிய கவலை, சோகம் பய உணர்ச்சியாக வெளிப்படுகின்றது. அதற்கு எதிர்ப்பாக, அதிலிருந்து தப்பிக்க நம்மை, நம் உடலை அடிப்படை தற்காப்பு உணர்வு உருவாகின்றது. இது இயற்கை நமக்கு அளித்துள்ள பாதுகாப்பு உணர்வு. ஆனால் தொடர்ந்து மனிதன் ஏதோ ஒரு ஆபத்தினை உடல் ரீதியாக, மன ரீதியாகவோ ஏற்க நேர்ந்தால் அது அந்த மனிதனின் உடலையும், மனதினையும், வெகுவாய் பாதித்து விடுகின்றது. பய உணர்ச்சி வரும் பொழுது நம் உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கும்.


* அது நம் உடலின் இன்றியமையா தேவைகளைத் தவிர மற்றவற்றினை குறைத்து விடும். (உ.ம்) நமது ஜீரண மண்டலம் அப்போது மிக மிக குறைவாகத்தான் வேலை செய்யும்.


* கண் பார்வை கூராக்கும், இருதய துடிப்பு கூடும். ரத்த ஓட்டம் சதைகளுக்கு வேகமாய் செல்லும். இந்த சூழ்நிலை நிகழ்வுகள் நம் ஞாபகத்தில் பதியும்.


* என்ன தேவையோ அதற்கான சக்தி அதிகரிக்கும் இந்நிகழ்வினை அது ஒரு ஆபத்தான நிகழ்வாக வருங்கால ஞாபகத்திற்கு பதிய வைக்கும்.


* அந்நேரத்தில் ஏற்படும் சத்தம், ஒளி, நேரம், தட்ப வெப்பநிலை என அனைத்தும் பதியும்.


* இம்மாதிரியான எந்த சூழ்நிலை ஏற்பட்டாலும் மூளை போர்கால அடிப்படை போல் முன்னெச்சரிக்கையாய் வேலை செய்யும். தொடர்ந்து ஏதேனும் ஒன்றை நினைத்து பயந்து கொண்டே இருந்தால்.


* நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கும்.


* இருதய பாதிப்பு ஏற்படும்.


* குடல் பாதிப்பு வெகுவாய் இருக்கும்.


* முதுமை கூடும்.


* சிறிய வயதிலேயே இறப்பு ஏற்படும்.


* மூளையின் சில பகுதிகளில் குறிப்பாக ‘ஹிப்போ காம்பஸ்’ பகுதியில் பாதிப்பு ஏற்படுவதால் நினைவு சக்தி தடுமாறும்.


* உலகம் பயம் மிகுந்ததாகத் தோன்றும்.


* உணர்ச்சிகள் தாறுமாறாய் இருக்கும். கோபம், அழுகை, சண்டை, முடிவு எடுக்க முடியாமை, கவனக்குறைவு என பல தாக்குதல்களைத் தரும்.


* சோர்வு, மன நல பாதிப்பு, மன உளைச்சல் என ஒன்றன் பின் ஒன்றாய் வரும்.


* உடல் நலம் வெகுவாய் கெடும்.


* இருதய துடிப்பு மிக அதிகமாய் இருக்கும். எப்பொழுதும் படபடப்புடனே இருப்பர்.


* மூச்சு அதிகமாய் இருக்கும்.


* சதைகள் வலுவிழந்து இருக்கும்.


* அதிக வியர்வை இருக்கும்.


* வயிற்றுப் பிரட்டல் இருக்கும்.


* மயக்கம் போன்று இருக்கும்.


* உடல் உறைந்து விட்டது போல் தோன்றும்.


* சாப்பிட முடியாது. தண்ணி கூட இறங்காது.


* உடல் சூடாகும், குளிராகும்.


* வாய் வறண்டு போகும்.


* அசைய முடியாது.


எனக்கு அலுவலகம், வீடு எங்கிலும் இப்படித்தான் இருக்கின்றது. என்னை எப்படி நானே தேற்றிக் கொள்வது என்பவர்களுக்காக.


* உங்கள் மூச்சு முறையாக இல்லையா?


உங்கள் நெஞ்சு இறுகியது போல் உள்ளதா?


உங்கள் தோள்கள் முன்னோக்கி குறுகி சற்று கூன் போட்டது போல் உள்ளதா?


இவை அனைத்தும் ஏதோ பயம் உங்களை ஆட்டிப் படைக்கின்றது என்று பொருள். உங்களை நீங்களே கொன்று கொண்டு இருக்கின்றீர்கள் என்று பொருள். சுய உணர்வோடு முதலில் மூச்சினை முறையாய் இயங்கச் செய்யுங்கள். இது மிகப் பெரிய மாற்றத்தினை உங்கள் உடலிலும், சக்தியிலும் ஏற்படுத்தும்.


* உங்களுக்கு ஏதாவது அலர்ஜி தொந்தரவு இருக்கின்றதா?


மிக அதிக மனஉளைச்சல், பயம் இவை கார்டிசால் ஹார்மோனை உங்கள் ரத்தத்தில் கூட்டியபடி இருக்கும். இது தொடர்ந்து ஏற்பட்டால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். ஆக விடாது அலர்ஜி ஏற்பட்டால் உடனடி உங்கள் மனநிலையையும் கவனிக்கவும்.


* உங்கள் பயம் எந்த சூழ்நிலையில், எந்த நேரத்தில் அதிகரிக்கின்றது என்று கவனியுங்கள். எந்த சூழ்நிலையில், எந்த நேரத்தில் நிவர்த்தி ஆகின்றது என்று கவனியுங்கள். கவனிக்க ஆரம்பித்தாலே நீங்களே அதனை சரி செய்து விடுவீர்கள்.


* இது ரொம்ப நாளா இருக்கு. அப்படியேதான் இருக்கும் என்று முடிவு கட்டி விடாதீர்கள்.


கீழ்கண்ட முறை, மிகுந்த பயன் அளிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.


தினமும் 15 நிமிடம் அமைதியாய் எதுவும் செய்யாது, எதுவும் நினைக்காது அமருங்கள். இது மிகப்பெரிய மாற்றத்தினை மூளையில் ஏற்படுத்துகின்றதாம்.


* முதலில் மன உளைச்சல் நீங்குகின்றது.


* சோர்ந்த மூளைக்கு புத்துணர்ச்சி ஊட்டுகின்றது.


* அமைதி மூளையின் திசுக்களை மீண்டும் புதுப்பிக்கின்றது என ஆய்வுகள் கூறுகின்றன.


* பொறுமை கூடுகின்றது.


* கவனத் தன்மை கூடுகின்றது.


* இன்றைய விஞ்ஞான மூளைக்கு இந்த அமைதி தேவை என்பதனை மிகவும் வலியுறுத்துகின்றது.


* அமைதி உங்கள் பயத்திற்கும், மனஉளைச்சலுக்கும் தீர்வான பதில்களைத் தந்து விடும்.


* சிந்திக்கும் திறனை சீராக்கும்.


* உடல் பாதிப்புகள் குறையும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.


மன உளைச்சல் படபடப்பினை நீக்குவதற்கு என்றே உணவுகள் இருக்கின்றது தெரியுமா?


* அடர்ந்த பச்சை நிறம் கொண்ட இலைகள், கீரைகள், உதாரணமாக பசலைக் கீரையில் உள்ள ஃப்போலேட் மனநிலைக்கு மிகவும் உதவுவது. செரடோனின், டோப்பமின் என நம்மை படபடப்பின்றி வைக்கும் ரசாயனப் பொருட்களை மூளை மூலமாக அளிக்க வல்லது.


* அடர்ந்த நிறம் கொண்ட சாக்லேட் சிறிது சாப்பிடுங்கள். நீங்கள் நல்ல மன அமைதியுடன் இருப்பீர்கள்.


* பிஸ்தா சிறிதளவு தினமும் எடுத்துக் கொள்ளலாம். மன உளைச்சல், பயம் வரும் போது நமது ரத்த நாளங்கள் சுருங்கும். இதனால் ரத்த ஓட்டம் குறையும். தினம் சிறிது பிஸ்தா எடுத்துக் கொள்வது ரத்த நாளங்கள் சுருங்குவதை தடுக்கும். இதனால் இருதய பாதிப்பு குறையும்.


* கொழுப்பு குறைந்த தயிர் தினம் ஒரு சின்ன ‘கப்’ எடுத்துக் கொள்வது நல்லது.


* காலை, மாலை வெய்யில் உடலில் பட வேண்டும். உடலில் வைட்டமின் டி சத்து குறையும் பொழுது எடுத்ததற்கெல்லாம் ‘டென்ஷன்’ ஆவார்கள். காலை, மாலை வெய்யில் உடலில் வைட்டமின் டி சத்து குறையும்.


* மக்னீசியம் மனநல பாதிப்புகள் ஏற்படாது இருப்பதற்கு மிகவும் அவசியம். பூசணி விதை, எள், பீன்ஸ், கொட்டை வகைகள் இவை சிறந்த அளவு ‘மக்னீசியத்தினை’ அளிக்க வல்லவை.


தவிர்க்க_வேண்டிய உணவுகள்


* அதிக வெள்ளை சர்க்கரை, பாலிஷ் செய்த அரிசி இவற்றினை கண்டிப்பாய் தவிர்க்க வேண்டும்.


* ‘க்ளூடன்’ என கோதுமை, பார்லி இவற்றில் காணப்படும் இப்பொருள் சிலருக்கு ‘அலர்ஜி’ தரும். ஆனால் பொதுவில் கோதுமை உணவு மனநிலையினை பாதிக்கும் திறன் கொண்டது என்பதால் இதனை அதிகம் உண்பதனை தவிர்ப்பது நல்லது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,