முதல்வரின் "ட்ரீம் டீம்".. உலக நாடுகள் பாராட்டிய எக்ஸ்பர்டை களமிறக்கி.. தமிழ்நாடு அரசு அசத்தல்!

 

முதல்வரின் "ட்ரீம் டீம்".. உலக நாடுகள் பாராட்டிய எக்ஸ்பர்டை களமிறக்கி.. தமிழ்நாடு அரசு அசத்தல்!



தமிழ்நாடு மாநிலத்தின் கொள்கை வளர்ச்சி குழுவிற்கு நியமிக்கப்பட்டு இருக்கும் உறுப்பினர்களின் பட்டியல் அதிக கவனம் பெற்றுள்ளது. இதன் துணை தலைவராக ஜெயரஞ்சன், உறுப்பினர்களாக நர்த்தகி நடராஜன், கு. சிவராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டது பாராட்டப்பட்டு வருகிறது.


இவர்களின் நியமனம் ஒரு பக்கம் பாராட்டப்பட்டு வரும் நிலையில்.. இன்னோரு பக்க பொதுமக்களால் அதிகம் அறியப்படாத சர்வதேச எக்ஸ்பர்ட் ஒருவரையும் முதல்வர் ஸ்டாலின் இந்த குழுவில் நியமனம் செய்துள்ளார். தமிழ்நாடு மாநிலத்தின் கொள்கை வளர்ச்சி குழு என்பது மாநில திட்டக்குழுவின் சீரமைக்கப்பட்டுதமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள், சமூக நல, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படும் பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகள் என்று அனைத்தையும் திட்டமிடும் சக்தி வாய்ந்த அமைப்பு ஆகும். இதன் உறுப்பினர்கள் இன்று நியமிக்கப்பட்டனர்.

முதல்வர் ஸ்டாலின் இந்த குழுவின் தலைவராக முதல்வர் ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் நியமிக்கப்பட்டு இருக்கும் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் கவனம் பெற்று வரும் நிலையில், மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் பகுதி நேர உறுப்பினராக மருத்துவர் அமலோற்பவநாதன் நியமிக்கப்பட்டு இருப்பது மிக முக்கியமான முடிவாக பார்க்கப்படுகிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ துறையில் பணியாற்றி வருபவர் அமலோற்பவநாதன்.

அமலோற்பவநாதன் யார்? 2008ல் திமுக அரசு உருவாக்கிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். உலகம் முழுக்க பல நாடுகளில் இருந்து உறுப்பு மாற்று அறுவை செய்ய பலர் சென்னை வருகிறார்கள். இந்தியாவின் மருத்துவ தலைநகரம் என்று சென்னை பாராட்டப்படுகிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சென்னை சிறந்து விளங்க முக்கிய காரணம் அமலோற்பவநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.
8 வருடம் 8 வருடம் இந்த திட்டத்தை முன்னின்று ஒருங்கிணைத்தவர் அமலோற்பவநாதன். உலக புகழ்பெற்ற பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் இந்த திட்டத்தை முன்னோடி திட்டம் என்று பாராட்டின. இவர் கொண்டு வந்த உறுப்பு மாற்று சிகிச்சை முறைகள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மூலம் பின்பற்றப்பட்டன. சென்னை மருத்துவ கல்லூரியின் ரத்த நாள பிரிவின் இயக்குநராகவும் இருந்தவர்.


கொரோனா உலக மருத்துவ வல்லுநர்கள் பலரும் இவர் நெருக்கமாகி பழகி வருகிறார். கொரோனா காலத்தில் மாநில திட்டக்குழுவில் அமலோற்பவநாதன் போன்ற மருத்துவர் நியமிக்கப்பட்டு இருப்பது மிக சிறந்த முடிவாக பார்க்கப்படுகிறது. அதிலும் மருத்துவ துறையில் தமிழக அரசு தன்னிறைவு பெறும் திட்டத்தில் உள்ளது. வேக்சின் உற்பத்தி தொடங்கி ஆக்சிஜன் உற்பத்தி வரை அனைத்தையும் தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய அரசு முயன்று வருகிறது.

முக்கியம் இப்படிப்பட்ட நிலையில் அமலோற்பவநாதன் நியமனம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலாளர் இறையன்பு தொடங்கி ஆலோசகர்கள் வரை எல்லோரையும் தீர்வு செய்வதில் கவனமாக செயல்படுகிறார். தனக்கான ஒரு ட்ரீம் டீமை உருவாக்கி, பணிகளை முடுக்கி விடுகிறார்.. விபி சிங் பிரதமராக இருந்த போது நாடு முழுக்க இருக்கும் அறிவுஜீவிகளுக்கு பதவி கொடுத்து ஆட்சி நடத்தினார்.. தற்போது தமிழ்நாடும் அதே பாதையில் செல்ல தொடங்கி இருக்கிறது!






Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,