நூலகங்கள்தான் நமது பாசறைகள்

 எழுத்தாளர்கள் தொடர்பான தமிழ்நாட்டு அரசாங்கத்தின் அறிக்கையை இப்போதுதான் படித்துமுடித்தேன். சிறப்பு. சிறப்பு. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு நன்றி பல.
உண்மையில் திமுகவின் முந்தைய ஆட்சிக் காலங்களும் எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் தந்த காலங்கள்தான்.
தனிப்பட்ட முறையில் கலைஞருக்கு சில எழுத்தாளர்களை கூடுதலாகப் பிடித்திருக்கலாம். ஆனால் கலைஞரை கொஞ்சம்கூட பிடிக்காத எழுத்தாளர்களின் வாழ்நாள் வேலையே, இறுதிவரை திமுக இலக்கியவாதிகளை மதிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டை கைவிடாததுதான். திராவிடம் ஒரு பாழ்நிலம் என்கிற வெ.சா.வின் ஆயிரத்தெட்டுப் பிரதிகளாக உருவானவர்கள்தான் இங்கே பலரும். (பலரும் என்றுதான் சொல்கிறேன். எல்லோரும் என்று அல்ல).
எப்போதுமே பிரான்சையும் கேரளாவையும் காட்டிக்காட்டி தமிழ்நாட்டை விமர்சிப்பது மட்டுமே இவர்களில் பலரின் வேலையாக இருந்தது. அந்தந்த நாடுகளில் இருந்த எழுத்தாளர்கள் அந்தந்த நாடுகளில் நடந்த சமூக சீர்திருத்த, அரசியல் இயக்கங்களுக்கு எப்படி ஆதரவாக நின்றார்கள் என்பது பற்றி வாயைத் திறக்கமாட்டார்கள்.
என்னைப் பொறுத்தவரை இதில் அரசாங்கங்கள் தங்களைத் ‘திருத்திக்கொள்வது’ இருக்கட்டும். எழுத்தாளர்கள் தங்களை ‘திருத்திக்கொள்வதும்’ முக்கியமானது.
அப்புறம், முதல்வர் அவர்களே, ஞானபீடம், சாகித்ய அகாதெமி சான்றிதழ்களைக் காட்டினால் சட்டென்று சாவியை எடுத்துக் கையில் கொடுத்துவிடாதீர்கள். அவர்கள் அந்த விருதுகளை எப்படி வாங்கினார்கள் என்பதையும் சற்று ஆராய்ச்சி செய்து அதன் பிறகு முடிவெடுங்கள். எதற்காக விருதுபெறுகிறார்கள் என்பதும் அவசியம். இல்லையென்றால் சமூக நீதிக்கும் சமத்துவத்துக்கும் எதிராக எழுதி, ஆனால் உன்னத எலக்கிய தரத்தின் காரணமாக பரிசு வாங்கி, உங்களிடமிருந்து கனவு இல்லத்தை ஆட்டையைப் போட்டு விடப்போகிறார்கள், சாக்கிரதை.
மற்றபடி, மதுரை நூலகம் அறிவிப்பு மகிழ்ச்சியூட்டுகிறது. ஒவ்வொரு மாவட்டத் தலைநகரத்திலும் இதுபோன்ற மாநூலகங்கள் வேண்டும். நூலகங்கள்தான் நமது பாசறைகள். இதைப் பற்றி தனியே எழுதவேண்டும்.
- ஆழி செந்தில் நாதன்
நன்றி: சாருநிவேதிதா

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,