காரசாரமாக ஆந்திரா ஸ்டைல் இட்லி பொடி
காரசாரமாக ஆந்திரா ஸ்டைல் இட்லி பொடி
தேவையான பொருட்கள்:
வர மல்லி - 1/2 கப்,
உளுந்து - 1/4 கப்,
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
சீரகம் - 1 ஸ்பூன்,
வரமிளகாய் - 10,
கறிவேப்பிலை - 2 கொத்து,
பூண்டு - 5 பல்,
சிறிய நெல்லிக்காய் அளவு - புளி,
தேவையான அளவு உப்பு.
செய்முறை
சிலபேருக்கு வர மல்லி வாசம் பிடிக்காது. இப்படிப்பட்டவர்கள் 1/2 கப் உளுந்து, 1/4 கப் அளவு வரமல்லி என்று அளவுகளை எடுத்துக்கொள்ளலாம். இந்த பொடிக்கு, காரம் கொஞ்சம் தூக்கலாக தான் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
அடுப்பில் ஒரு கனமான கடாயை வைத்து 1/2 ஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து முதலில் வர மல்லியை போட்டு, வர மல்லி வாசம் வரும் வரை சிவக்க வேண்டும்.
அடுத்தபடியாக உளுந்தையும், கடலை பருப்பையும் ஒன்றாக சேர்த்து பொன்னிறமாக சிவக்கும் வரை வறுக்க வேண்டும்.
மூன்றாவதாக சீரகத்தை மட்டும் தனியாக சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து சீரகத்தை கருக விடாமல் வறுத்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
மிளகாயையும் உப்பையும் ஒன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
இறுதியாக கறிவேப்பிலையை மொறுமொறுவென வறுக்க வேண்டும்.
பூண்டு சூடாகும் வரை வறுக்கவேண்டும்.
புளியை சிறிய சிறிய துண்டுகளாக கிள்ளி போட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அப்போது தான் நன்றாக அரைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
புளியை மொத்தமாக ஒரு நிமிடம் வறுத்தால் கூட போதும்.
வறுத்த அனைத்து பொருட்களும் நன்றாக ஆறிய பின்னர் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
இப்போது சூப்பரான காரசாரமாக ஆந்திரா ஸ்டைல் இட்லி பொடி ரெடி.
Comments