சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க பயனுள்ள பத்து :

 சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க பயனுள்ள பத்து :











1. வெந்தயம் :

(Fenugreek)

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.

கல்லீரலைச் சுறுசுறுப்பாக்கி, பித்தத்தை முறிக்கும்.

இரவில் ஊறவைத்த வெந்தயத்தை, காலையில் நீருடன் சேர்த்து குடிக்கலாம்.

ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் நீர் ஊற்றிக் கொதிக்கவைத்து, ஆறிய பின்னர் அந்தக நீரை குடிக்கலாம்.

முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும்.


2. நெல்லிக்காய் :

(Amla/Indian Gooseberry) 

ரத்தத்தில் கலக்கும் இன்சுலினை, சிறந்த முறையில் கிரகிக்க நெல்லிக்காய் உதவுகிறது.

நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.

இது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

உடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் சாற்றை, அதைவிட நான்கு மடங்கு நீருடன் சேர்த்து அருந்தலாம் ; ஆனால், வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது.


3. பட்டை :

(Cinnamon) 

டைப் 2 சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து.

இன்சுலின் உடலில் சீராகச் சுரக்க உதவும்.

சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.

ஒரு டீஸ்பூன் பொடியைத் தண்ணீரில் கலந்து, இரண்டு வேளை உட்கொண்டு வரலாம். 

அரை டீஸ்பூன் பட்டை தூளை ஒன்றரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவைத்து, அந்த நீரை ஆறிய பின்னர் குடிக்கலாம்.


4. நாவல்பழம் :

(Novel fruit) 

நாவல்பழத்தில் உள்ள துவர்ப்புத் தன்மை, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.

கணையத்தைச் சீராக்கிப் பாதுகாக்கும்.

பித்தத்தைத் தணிக்கும். 

நாவல் விதைப் பொடியை ஒரு டீஸ்பூன் தண்ணீரில் கலந்து இரண்டு வேளை குடிக்கலாம்.

நாவல் பழத்தின் சாற்றை தினசரி குடிக்கலாம். 

தொடர்ந்து நாவல் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் குடல், இரைப்பை, இதயத்தின் தசைகள் வலுவாகும்.


5. பாகற்காய் :

(Bitter Gourd) 

சர்க்கரைநோய்க்கு பாகற்காய் சிறந்த மருந்து. 

இது, கணையத்தில் உள்ள பீட்டா செல்களை புத்துயிர் பெறச் செய்கிறது. 

பாகற்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட், கண்நோய் வராமல் காக்கும்.

தினசரி பாகற்காய்ச் சாற்றை வெறும் வயிற்றில் அருந்தலாம்.

அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ளலாம். 

ஒரு கப் பாகற்காய் சூப், அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகி, தோல் பளபளப்பாகும்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,