மனித உடல் ஓர் அதிசயம்..!!

 மனித உடல் ஓர் அதிசயம்..!!

 


உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று போய் விடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்.ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம். உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. 


பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறை கண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.

உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப் பிடித்திருக்கிறார்கள். 


விதம்விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக் கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும் போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.


நமது பாதங்களைப் பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும். காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன


இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்றுப் பெரியதாக இருக்கும்.


நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறப்படுத்தத் தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சொப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக் கூடிய அளவுக்கு இரும்பு எனப் பல பொருட்கள் உள்ளன.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,