சுயம் தொலைத்த சாளரங்கள்
சுயம் தொலைத்த சாளரங்கள்
பாவையாயவள் கிடக்க பாதையாயெவர் இங்கே... நீள் நிலத்து தெருவெங்கும் சீழ் சிதைத்த பெருந்தடங்கள்... சாளரக்கதவுகள் சத்தமென கிறீச் முனகல்கள்... ஒளி சுடவில்லை தேகம் ஒழிகிறது- எவர் பின்னே.. காற்றிலாடு கேசம்மட்டும் புறத்தோடு வேர்வை தழுவ... கதவு தாண்டி சில குரல்கள் சினத்தை தெளிக்கிறது... சுட்டுகிறது விரல் விரிகிறது பெருகண்கள் ஐயகோ கொடுந்தீ... கைகளையும் கால்களையும் பினைத்துக்கொள்கிறது பெருந்தீ தின்ற அவ்விழி... நகர்கிறது கால்கள் நகர்த்தப்படுகிறது கைகள் சுத்தமாய் மறந்துபோன சுயங்களை தேடியவளுள் தொலைந்து போகின்றாள்... மக்கிப்போன கனவுகள் மட்டும் அதோ சாளரம் வழியே மெல்லச்சிரிக்கிறது... வந்தது ஒளியல்ல வழியென்று பிணமேடை கண்டென்ன .... பெருமூச்சு அவ்வளவே.... டினோஜா நவரட்ணராஜா #வாழ்தல்இனிது
Comments