ஹோட்டல் ஸ்டைல் கொத்தமல்லி சட்னி

ஹோட்டல் ஸ்டைல் கொத்தமல்லி சட்னி

தமிழகத்தில் பிரபலமான சட்னிகளில் கொத்தமல்லி சட்னியும் ஒன்று. இது உடலுக்கு புத்துணர்ச்சியை தருவதோடு இட்லி மற்றும் தோசை போன்ற காலை உணவுகளுக்கு ஏற்ற சட்னியாகவும் உள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பரிமாறப்படும் இந்த கொத்தமல்லி சட்னியை ஈஸியான முறையில் தயார் செய்வது குறித்து இங்கு காணலாம்

தேவையான பொருட்கள்

சமையல் எண்ணெய்
காய்ந்த மிளகாய் – 5
உளுந்த பருப்பு
பூண்டு – 4 -5 பல்
தக்காளி – 2
தேங்காய் துருவல்

நீங்கள் செய்ய வேண்டியவை

முதலில் ஒரு கடாயை எடுத்து அதில் எண்ணெய் ஊற்றவும். அவை நன்கு சூடேறியதும் காய்ந்த மிளகாயை அதில் சேர்த்து கிளறவும். அவை நன்கு வதங்கியதும் தனியாக ஒரு தட்டில் எடுத்து வைக்கவும். பிறகு உளுந்த பருப்பை எண்ணெயில் இட்டு வெடிக்க விடவும்.

உளுந்த பருப்பு கலர் மாறியதும் அவற்றோடு பூண்டைச் சேர்க்கவும். பின்னர் அவற்றோடு 2 தக்காளிகளை சேர்த்து கொள்ளலாம். வெங்காயம் சேர்ப்பதை பெருபாலும் தவிர்க்கலாம். அவை ஓரளவு வதங்கும் போது தேங்காய் துருவல் சேர்த்து கொள்ளவும். பிறகு கொத்தமல்லி இலைகளை சேர்த்து வதக்கவும்.

அதன் பின்னர் இந்த கலவைகளை மிக்ஸில் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இப்போது நீங்கள் எதிர்ப்பார்த்த கொத்தமல்லி சட்னி தயராக இருக்கும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,