கற்றாழை மகிமை

 கற்றாழை மகிமை கற்றாழை என்றாலே ஒரு எதிர்மறை உணர்வு தான் வரும். கிராமங்களில் சாலையோரம் ஒரு புறம் இவை ஒதுங்கி வளரும். அதே மாதிரி ரயில் தண்டவாளங்கள் அருகில் உள்ள மண் சரிவுகளில் இவை அதிகம் இருக்கும். இவற்றை சுற்றி எருக்கம் செடிகளும் இருக்கும். பாம்புகள் அடைவதற்கு இவை ஏற்றது என்று சொல்லி, பெரியவர்கள் சிறுவர்களை அணுகவிட மாட்டார்கள். 


தற்போது  கற்றாழை பற்றிய நேர்மறை தகவல்கள் கிடைப்பதின் காரணமாக நிறைய வீடுகளில் வளர்த்து வருகிறார்கள். அனேகமாக எல்லா வீடுகளிலும், அவர்களுடைய தோட்டத்தில் அல்லது தொட்டிகளில் இவை காணப்படுகின்றன. கற்றாழை தழை எளிதில் ஒடிந்து விடும். அதன் உள்ளே இருந்து வெளியே ஒழுகி வரும் ஜெல் பல மருத்துவ குணங்கள் கொண்டது. சருமத்திற்கு அழகு வேண்டுபவர்கள், இதை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.


கற்றாழை பற்றிய சில தகவல்கள்

01. கற்றாழை பாம்பு போன்று மடல் விரித்து வளர்வதால், இந்த தாவரத்திற்கு கற்றாழை என்ற பெயர் வந்தது. இதற்கு அதிகம் சூரிய ஒளி தேவையில்லை. ஓரளவு இருந்தாலே போதும். அதே மாதிரி நீர் தேவையும் மிகவும் குறைவு தான். பொதுவாக கிளி பச்சை நிறத்தில் இருக்கும் சில தாவரங்கள், விளிம்புகளில் மஞ்சள் நிறம் பார்டர் வைத்தது போல இருக்கும். விளிம்பில் ரம்பம் போன்று வெடிப்புகள் இருக்கும். தழைகளை மிகவும் பதமாக பறிக்க வேண்டும். இல்லேயில் விரல்களில் காயம் பட ஏதுவாகும். 


02. துளசி, கற்றாழை மற்றும் வேம்பு இவை மூன்றும் மனித இனத்திற்கு அதிக நன்மைகள் தரும் தாவரங்கள். 

03. இன்று இதன் ஜெல்லை எடுத்து பதப்படுத்தி, கற்றாழை லேகியம், கற்றாழை ஷாம்பு, கற்றாழை சாறு என்று பலவகைகளில் விற்கிறார்கள். 

04. தற்போது நிறைய ஜூஸ் கடைகளில் கற்றாழை ஜூஸ் என்று தருகிறார்கள். 

05.நமது முன்னோர்கள் பயன்படுத்தியவை  இவை - வெள்ளைப்படுதலுக்கு கற்றாழை; சிந்தனை வளர்ச்சிக்கு தாமரைப்பூ; சிறு நீர் கற்கள்  நீக்குவதற்கு சிறுகண்பீளை; கக்குவான் இருமலுக்கு வசம்புத்தூள்; காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீர்; விக்கலுக்கு மயிலிறகு; வாய்ப்புண்ணிற்கு மணத்தக்காளி; நீர்கோவைக்கு சுக்கு மற்றும் மிளகு கலந்த சுடுநீர்; நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீர் மற்றும் வேர்குருவிற்கு சந்தனம் -  போதுமான மருத்துவ ஆராய்ச்சிகள் மற்றும் வசதிகள் இல்லாத காலங்களில், மேற்சொன்னவை தான் மனித இனத்தின் ஆரோக்கியத்திற்கு கைகொடுத்தன. 

06. முன்றைய தினங்களில் சோற்றுக்கற்றாழை பற்றிய எதிர்மறை தகவல்கள் இருந்தன. தற்போது அனைவரும் தைரியமாக பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். சோற்றுக்கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி பிறகு குளிர்ந்த தண்ணீரால் தடவி வந்தால், முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும் என்று சொல்லுகிறார்கள். தற்போது தலைக்கும் பயன்படுத்த தொடங்கி  விட்டார்கள். 

07. கற்றாழை சாற்றை கால் வெடிப்புகளில் தடவலாம். இதன் மூலம் வலியிலிருந்து நல்ல தீர்வு கிடைக்கும். 

08. உடலில் தோன்றும் பலவிதமான கட்டிகளுக்கும் கற்றாழை ஜெல்லை தடவினால், தீர்வு கிட்டும் என்று சொல்லுகிறார்கள். 

09. நகத்தில் உள்ள சுத்தியை குணமாகவும் சக்தி கற்றாழைக்கு உண்டு. கற்றாழை சாறுடன் மஞ்சள் தூள் கலந்து  விளக்கெண்ணெய் விட்டு சூடாக்கி அதை நக சுற்று உள்ள இடத்தில் பூசினால், வலியும் குறையும் மற்றும் எளிதில் குணமாகும். பாட்டி வைத்தியங்களில் இதுவும்  ஒன்று. 

10. சோற்றுக்கற்றாழை ஒரு சிறந்த மீட்ருவாக்கி; அதாவது rejuvenator. நன்றாக சொல்லவேண்டும் என்றால், புத்துணர்ச்சி தரக்கூடியது. இவற்றின் பயன்கள் இவை என்று சொல்லுகிறார்கள் - அழிந்த செல்களுக்கு பதிலாக புதிய செல்களை உருவாக்குதல்; பழுதாகிய செல்களை ஒரிஜினல் இயல்பிற்கு கொண்டு வருதல்; காயங்களை ஆற்றுதல்; பாதிப்புண்டாக்கும் கிருமிகளை அழித்தல்; கண்களுக்கு குளிர்ச்சி தருதல்; கண்களில் உள்ள அழுக்குகளை வெளியேற்றுதல்;- இப்படி பல நன்மைகள் கற்றாழையால் மனித இனத்திற்கு கிடைக்கின்றன. நோய்த்தொற்று ஏற்படாமல் இருப்பதற்கு இதன் ஜெல் பயன்படுகிறது. 


கற்றாழை பற்றிய எதிர்மறை செய்திகளை புறந்தள்ளிவிட்டு, அதனை பயன்படுத்தலாம்.  தற்போதைய மருத்துவ குறிப்புகள் கற்றாழை பயன்பாடு பற்றிய நேர்மறை தகவல்களை தருகின்றன. 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,