வேர்க்கடலை, பூண்டு, சீரகம்… டேஸ்டி சட்னி

 

வேர்க்கடலை, பூண்டு, சீரகம்… டேஸ்டி சட்னி இப்படி செய்து பாருங்க!

உங்கள் வீடுகளில் காலையில் செய்யப்படும் சுவையான உணவுகளுக்கு சட்னி தயார் செய்வதில் பல நேரங்களில் உங்களுக்கு குழப்பம் எழலாம். அதே வேளையில் நீங்கள் ஆவலோடு செய்த சட்னி உங்கள் விருப்பமானவர்களுக்கு பிடிக்காமல் பொய் விடும். அவ்வாறு நடந்து விடாமல் இருக்கவும், உங்கள் சுவையான காலை உணவுகளுக்கு கூடுதல் சுவையை கொடுப்பதற்கும் இங்கு நாங்கள் பரிந்துரை செய்துள்ள சட்னியை நீங்கள் முயற்சித்து பார்க்கலாம்.





இதன் செய்முறை எளிமையானது, தொந்தரவில்லாதது, மேலும் பல உணவுகளுடன் சேர்த்து கொள்ளக்கூடிய வகையில் அமைத்துள்ளது.

தேவையான பொருட்கள்

வேர்க்கடலை – 200 கிராம்

பூண்டு – 3 தேக்கரண்டி

சீரகம் – 2 தேக்கரண்டி (சுவைக்கு ஏற்ப)

உப்பு – சுவைக்கு ஏற்ப

சிவப்பு மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி (உங்கள் விருப்பப்படி அளவை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம்)

நீங்கள் செய்ய வேண்டியவை

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் வேர்க்கடலையை இட்டு, நடுத்தர தீயில் நன்றாக வறுக்கவும். ஒரு முறை குளிர்ந்ததும் வேர்க்கடலை தோல்களை நீக்கவும்.

இப்போது மிக்சியில் வேர்க்கடலை இட்டு நொறுநொறுப்பான பதத்தில் அரைக்கவும். பின்னர் சீரகம் மற்றும் பூண்டு சேர்த்து தனியாக
அரைக்கவும்

அதன் பிறகு அரைத்து வைத்துள்ள எல்லா பொடிகளையும் ஒரே தூளாக சேர்த்து கலக்கவும்.

இந்த தூளை தயிருடன் சேர்த்து சட்னியாக மாற்றிக்கொள்ளலாம். மேலும் சான்டவிச் போன்றவற்றோடும் சேர்த்து உண்ணலாம்.

Comments

அருமை. நானும் முயற்சி செய்கிறேன்

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,