மிஸ்க்ட் வெஜிட்டப்ள் பிக்கிள் / அனன்யா பக்கம்

 

இன்றைய அனன்யா பக்கத்தில்

மிஸ்க்ட் வெஜிட்டப்ள் பிக்கிள்




மிஸ்க்ட் வெஜிட்டப்ள் பிக்கிள்

இந்த பூவுலகத்துலேயே எனக்கு இருக்கற ஒரே வீக்னெஸ்ஸு . அவ்வ்.. அப்படில்லாம் நாக்கு மேல பல்லைப்போட்டு சொல்ல மிடியாது. பல தீனி வீக்னெஸ் இருக்கு. இருந்தாலும் இந்த மிக்ஸ்ட் வெஜிட்டப்ள் பிக்கிள் தான் அதில் முக்கியமான வீக்குனெஸ். டு ஸ்டார்ட் வித்.. பேரே ஒரு அழகு தான். எப்பப்பாரு மாங்கா, எலுமிச்சங்கா, நார்த்தங்காய், கடாரங்காய், கொழுமிச்சங்காய், கிட்டத்தெட்ட எல்லாமே ஒரே டேஸ்டு தான். இதுல பீமகிருஷ்ண ராமுடு, ராமகிருஷ்ண பீமுடுன்னு கொஞ்சம் சிட்ரஸ் சுவையும் வாசனையும் முன்ன பின்ன இருக்கும். எத்தனை காலந்தான் இதையே சாப்பிட்டுண்டு இருக்கறதாம்.
அபுதாபி போனப்போ தான் இந்த மிக்ஸ்ட் வெஜ் பிக்கிளை ஒரு ஹைப்பர் மார்கெட் ராக்ல பார்த்தேன். Mother's Recipe ப்ராண்ட். லேபிளே கொள்ளையழகு. உள்ளே கால் லிட்டர் எண்ணைக்கு நடுவுல் ரெண்டு ஸ்பூன் பிக்கிளை பேக் பண்ணியிருப்பாங்கறது வேற விஷயம். எக்ஸ்போர்ட் குவாலிட்டி ஊறுகாய்கள் வேறு விதம். கொஞ்சம் எல்லாம் ஃப்ரெஷ்ஷாகவே இருக்கும். லோக்கல் மார்கெட் மாதிரி காலாவதியான விஷயங்களை யூ ஏ ஈ லஅனுமதிக்கமாட்டா. மளிகையெல்லாம் ஃப்ர்ஸ்ட் குவாலிட்டி தான் கிடைக்கும். உண்மையை சொல்லணும்ன்னா அழக்க்கா கலர் கலரா காய்கறியை போட்டு ஊறுகாய் பண்ணலாங்ககறதே எனக்கு புது நியூஸ். அடடே...கேரட்லாம் ஊறுகாய்ல இருக்கேன்னு ரொம்ப ஆச்சர்யப்பட்டேன்.
பேக்கேஜ்ட் ஊறுகாய்களின் தலைவன்னா அது படேக்கர்ஸ் பிக்கிள் தான். அடிச்சுக்க முடியாத டேஸ்ட். அப்பா தனியா பாம்பேல (அப்பெல்லாம் பாம்பே தான்) இருந்தப்போ அவருடைய ஸ்டேப்பிள் சாப்பாடே தச்சி மம்மூ & படேக்கர் பிக்கிள் தான். நாங்க சென்னைலேந்து அங்கே போறோம்ன்னா யதா சக்தி ரெண்டு மூணு டைப் படேக்கர் ஊறுகாய் பாட்டில்களை வாங்கி ஸ்டாக் பண்ணிடுவார்.
அதுக்கப்புறம் ஊறுகாய் வெளில வாங்கினதா நினைவில்லை.
ஆச்சு ரெண்டு வருஷம் முன்னால வரைக்கும் ரெடிமேடு ஊறுகாய்கள் மறந்தே கூட போயாச்சு. எப்பவாவது என் ஜென்ம விரோதி ஒருத்தனுக்கு இஞ்சி ஊறுகாய் பிடிக்கும்ன்னு வாங்கி வைச்சிருக்கேன். ”ஏய் மார்கெட்ல புது ஊறுகாய் வந்திருக்கு, பாருடி”ன்னு சொல்லி ஒரு பாட்டிலை காமிச்சப்போ, வல்லபா கொஞ்சூண்டு டேஸ்டு பண்ணி பார்த்துட்டு என்னை செம்ம லட்சார்ச்சனை. என்னன்னு கேட்டப்போ ”ரெடி மேட் ஊறுகாய்களில் பூரா ப்ரிஸர்வேட்டிவ்ஸ் போடுவா, வினிகர் நல்லதே இல்லை. வாங்காதே”ன்னு என் அகக்கண்களை திறந்தாள். அப்புறந்தான் எனக்கு ஒரு விஷயம் புலப்பட்டது. எல்லா ஊறுகாயிலேயும் ஏகப்பட்ட வினிகரை போட்டுப்போட்டுத்தான் ஒரே புளிப்பா தயாராக்கறா போல்ருக்கு! எந்த உருப்படியான ஊறுகாயிலும் சாஸ்திரத்துக்கு கூட காரமே இருக்காது. நான்ஸென்ஸ். சில ஊறுகாய்களில் பழைய எண்ணெய் வாடை வரும். மிச்ச ஊறுகாய்களில் பீஸே காணாது. வெறும் புளிப்பு செமி சாலிட் திரவம் தான் இருக்கும். 126/- எள்! ஐய்யய்யே இத்தனை நாளா வினிகரை தான் இண்டைரக்டா ஊறுகாய்ன்னு நினைச்சுண்டு சாப்பிட்டுண்டு இருக்கோம் போல்ருக்கு! ஹெள அன்னாச்சுரல்! அதுலேந்து ரெடி மேடு ஊறுகாய்க்கு பெரிய நோ சொல்லியாச்சு.
சமீபத்துல ராஜசுவைன்னு ஒரு விளம்பரம் பார்த்து, ஆஹ்ஹ்ஹா.. எப்படி இருக்கும் அந்த ராஜசுவைன்னு ஜொள் கொட்டிண்டு இருந்தேன். குறிப்பா அந்த மிக்ஸ்ட் வெஜ் பிக்கிள்ன்னு அவன் காமிச்ச விஷுவல்ஸ் இருக்கே.. சத்யமா வாட்டர்ஃபால் கொட்டிடுத்து! காரெட், பீன்ஸ் எல்லாத்தையும் சிவப்ப்பா மிளகாய்ப்பொடியோட காமிச்சு நம்ம வயத்தெரிச்சலை கொட்டிண்டான் பார்த்துக்குங்கோ! கடைல்லாம் திறந்தாச்சுன்னு சொன்னதும் கூட்டமில்லாத ஒரு நாளைக்கி மெதுவ்வா போய் தட் ராஜஸ்ஸுவை ஊறுகாய் பாட்டிலை எடுத்து பேக்ல போட்டுண்டு ஓடியாந்துட்டேன். அஃப்கோர்ஸ் பில் பண்ணிட்டு தான்!
தச்சு மம்மூவை ரெடி பண்ணிண்டு கஷ்டப்பட்டு லேபிளை திறந்தா திரவம் மட்டுந்தான் இருக்கு. நானும் ஸ்பூனை போட்டு துழாவித்துழாவி தேடிப்பார்க்கறேன் ஒரு மிக்ஸ் வெஜ்ஜிட்டபுளை காணோம்! ஆத்தாடி என்ன ஒரு பித்தலாட்டம்ஸ்ன்னு செம்ம கோபம் எனக்கு. கடைசியா ஒரு பீஸ் கிடைச்சது. அஹ்ஹான்னு எடுத்துப்பார்த்தா சுமார் எழு நூறு நாட்களுக்கு முன்னால எண்ணெயில் போடப்பட்ட சவுக் சவுக் மாங்கா. நாமெல்லாம் வயசானா தலைமுடியை இழக்கறதில்லையா? அதே மாதிரி தட் மாங்கா பீஸ் தனது மேல்சட்டையை முதுமை காரணமா இழந்திருந்தது. தோலையே காணோம். சர்வகேவலம்! லேபிளை உத்து நோக்கினாத்தான் நமக்கொரு உண்மை புலப்படுது. Buy one get one freeயாமா! இதையே திங்க மிடியாது இதுல இன்னொரு பாட்டில் வேற. பழைய இஸ்ட்டாக்ன்னு தெரியாம ஏமாந்துட்டியே அனன்யே. மைண்ட்வாய்ஸ் ரோபோ ரஜினி மாதிரி பல காப்பீஸ் எடுத்து நின்னுண்டு கை கொட்டி ஷிரித்தார்ஹள்ள்ள்!ந்னா பார்த்துக்குங்கோ!
ராஜசுவையை தேடிப்போனா ஒரே புளிப்பு, பழைய எண்ணெய். திடம்மா மனசுல ஒரு முடிவு பண்ணினேன். இனி நம்ம லைஃப்ல நோ வினிகர், நோ சிட்ரிக் ஆஸிட். ஸ்ட்ரிக்ட் பாலிஸி. (குறிப்பா சிட்ரிக் ஆஸிட்ங்கற புளிப்பு க்றிஸ்டல்ஸ் கார்ன் ஸிரப்பில் படியும் பூஞ்சையாம். கஷ்டம்! எவ்ளோ அறியாமையில் இருந்திருக்கோம்? போன தீபாவளிக்கு ஜிலேபி பண்றதுக்கு வாங்கி வைச்சிருந்தேன். இதை படிச்சதும் அதை தூர எறிஞ்சுட்டேன்.
அன்னைக்கு மதருக்கு ஃபோன் பண்ணி மிக்ஸ்ட் வெஜ் பிக்கிளின் மோசமான ஏமாத்து வேலையை பத்தி அரை மணிக்கூர் அரற்றிண்டு இருந்தேன். விசும்பி விசும்பி அழுததில், மதர் சொன்னா, போறும்டி இதெல்லாம் என்ன பிரமாதம். ஒரு பீட்ரூட், ஒரு கேரட், ஒரு முள்ளங்கி இருந்தா போறும், ஆத்துலேயே மிக்ஸ்ட் வெஜ் ஊறுகாய் போட்டுட்டா போச்சு. இதெல்லாம் ஜுஜுபி. கண்ல ஆனந்தக்கண்ணீர் பெருக கடைக்கு ஓடினேன்.
பீட்ரூட், கேரட், முள்ளங்கி எல்லாத்தையும் வாங்கிண்டு வந்து ஜூலியன்ஸா நறுக்கினேன். எலுமிச்சம்பழமும் நிறைய வாங்கிண்டேன். இல்லேன்னா ஊறுகாய் கெட்டுடும். நேச்சுரல் ப்ரிஸர்வேட்டிவ் யூ ஸீ! எக்ஸ்ட்ராவா இன்னும் ரெண்டு பழம் நறுக்கினேன். ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்ங்கற மாதிரி தக்குனூண்டு எம்ளிச்சம்பழத்துக்குள்ளே எவ்வளோ ஜூஸ்! நம்ம ஸ்டையில் படி நல்லெண்ணெயில் கடுகு தாளிச்சு , மஞ்சள் பொடி, பெருங்காயப்பொடி ,வெந்தியப்பொடி, உப்பு, மிளகாய்ப்பொடி சேர்த்து ட்ரெடிஷனலா 100% ஆத்தெண்டிக் மிக்ஸ்ட் வெஜ் பிக்கிள் ரெடி பண்ணினேன்.
ஆனாலும் பீன்ஸ் நறுக்கும்போது, ”தட் ராஜசுவைக்காரன் ஏதோ விளம்பரத்துக்காக கலர்ஃபுல்லா காமிச்சா, உனக்கெங்கே போச்சு மூளை.? பீன்ஸெல்லாம் ஊறுகாய்ல போடவே மாட்டா.. லூசு.. ஏழு பீன்ஸும் க்ருஷ்ணார்ப்பணந்தான் . திங்காம தூக்கிப்போடப்போறேன்னு என்னை நானே லட்ச்சார்ச்சனை பண்ணிண்டேன். ஐய்யாம் மை பெஸ்ட் க்ரிட்டிக் யூ க்னோ?
ஒரு ஏழெட்டு குட்டி எம்ளிச்சம்பழம் பிழிஞ்சு விட்டு கலந்து விட்டுட்டு ஃப்ரிஜ்ல எடுத்து வைச்சுட்டேன். யாரு கிட்டே? ரெண்டு நாளா ஃப்ரிஜ்ல வைச்சாத்தான் ஸ்பைஸஸ்ல நன்னா ஊறி காய்லாம் கர்க் முர்க்ன்னு சாப்பிட ஜோரா இருக்கும்ன்னு பொறும்மையா காத்திண்டு இருந்தேன். ஏக்கத்துல ரெண்டு கிலோ இளைச்சே போய்ட்டேன்.
வீக்கெண்டே ஊறுகாய் போட்டாச்சேன்னு நேத்திக்கு டப்பாலேந்து ஒரு ஸ்பூன் எடுத்துண்டு போட்டுண்டேன். கலவையா காய்களும் அதனுடன் கொஞ்சம் செமி சாலிட் திரவமும் தட்டில் விழுந்தது. அஹ்ஹா... இதுவல்லவோ உண்மையான ராஜஸ்ஸ்ஸ்ஸ்சுவை! ஸ்லர்ப்ப்ப்ப்ப்! ஆங் சொல்ல விட்டுப்போச்சு. அந்த பீன்ஸானா எண்ணெய்ல ஊறி அவ்ளோ அருமையா இருக்கு!


-அனன்யா







பிகு
இந்த குறிப்பு பற்றி அனன்யா கிட்டே கேட்டோம்.
ரொம் ப நல்லா இருக்கு என சொல்ல உங்களுக்காக
பதிவுட்டுளளோம்





Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி