உலக தந்தையர் தினம் இன்று

 உலக தந்தையர் தினம் இன்று :



 இந்நாளில் தந்தையரை நினைவுபடுத்தி வாழ்வதும் நன்று.


 இன்று காலை என் எண்ணத்தில் உதித்த கருத்தினை இங்கு பதிவிடுகிறேன்.


 "விந்தைக்கு காரணம் தந்தை" என்னும் தலைப்பு


 இதனைப் படிக்கும் போது, அவரவர்கள் தனது தந்தையை நினைக்கவேண்டும் என்பது  அடியேன் விண்ணப்பம்.


 என் எழுத்தில் இருக்கும் கருத்துக்களில்  ஏதாவது ஒரு வரியாவது தங்களை ஈர்க்கும்  என்பதில் ஐயமில்லை.


" முதல் அழுகையின் ஓசையொரு ஆனந்தம்


 முகமலர்ந்த செவிக்கு கிடைத்த சங்கீதம்


 விந்தை உலகத்தை காண்பித்த தந்தை


 வியப்பில் ஆழ்த்தும் முதல் பார்வையில் அக்குழந்தை


 எல்லோரின் வாழ்விலும் இப்படியொரு நிகழ்வு


 இருக்கத்தான் செய்யும் நம் தலைமுறையின் வரவு


 உச்சசுகம் உலகில் உண்டென்றால் இதுவே


 ஒவ்வொரு தந்தையும் பெறுவதெல்லாம் மகிழ்வே



 வளரும்போது பிள்ளைக்கு உற்றதொரு நண்பன்


 நல்வழி காட்டும் ஒப்பற்ற தலைவன்


 பிள்ளையின் உயர்வொன்றில் வளர்ந்திடும் மனக்கவலை


 பெருமைப்பட வைத்த பின் பெறுவார் பேரின்ப நிலை


 அன்பும் பண்பும் தந்தையிடமென்றும் மாறாதது


 ஆயுள் முழுக்க தம் பிள்ளைகளையும் எண்ணும் வாழ்விது


 அப்பாவெனும் மரநிழலில் வளரும் வரை சுகம்


 அவரில்லாத போது அறிவாய் அந்த சொர்க்கம்......





 முருக .சண்முகம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,