தனது அப்பாவை பற்றி பிரஷாந்தினி.

 உங்க அப்பாவுக்குரிய சரியான அங்கீகாரம் கிடைக்கலைனு நினைக்கிறீங்களா?” எனக் கேட்டால் சற்றே மெளனித்து தொடர்கிறார் பிரஷாந்தினி.“பலரும் இதுபற்றி வெளிப்படையா பேசியிருக்காங்க. என் அப்பான்னு இல்லை. அவர் இடத்துல வேறு யார் இருந்திருந்தாலும் அங்கீகாரம் கிடைச்சு இருக்கணும். அந்த அளவுக்கு இசையிலும் நடிப்பிலும் சாதனை செய்திருக்கார். தனக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கலையேனு அப்பா கலவைப்பட்டதில்லை. ‘எது நடந்தாலும் அது நல்லதுக்குதான். நான் உண்மையான உழைப்பைக் கொடுத்திருக்கேன். மக்களும் என் பாடல்களை ரசிச்சு பாராட்டறாங்க. அது போதும்’னு அடிக்கடி சொல்வார். அப்பாவுக்கு டயாபடீஸ் பிரச்னை இருந்துச்சு. சர்க்கரை அளவு கூடி சிரமப்படும் நிலையிலும் ஷூட்டிங் போனார். ரெக்கார்டிங்ல பாடல்களையும் பாடினார். அவர் காலில் இருந்த ஒரு காயம் ஆறாமல் உடல்நிலை மோசமாச்சு. ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணினோம். 2011 பிப்ரவரி 20-ம் தேதி காலமாகிட்டார். அப்போ ஹாஸ்பிட்டலுக்கும் வீட்டுக்கும் வந்த இளையராஜா அங்கிள், எங்களுக்குப் பக்கபலமா இருந்தார். அப்பாவின் குரல் இன்னும் பாடல்களில் ஒலிச்சுட்டே இருக்கு. அதனால அவர் இன்னும் வாழ்ந்துட்டுதான் இருக்கார். அவர் பயன்படுத்தின தம்புரா, ஆர்மோனியத்தைப் பொக்கிஷமா பாதுகாத்துட்டு இருக்கேன்” என நெகிழ்கிறார் பிரஷாந்தினி.
இணையத்தில் இருந்து எடுத்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,