மேட்டூர் அணை
தமிழகத்தில் எத்தனையோ நீர்த்தேக்கங்கள், அணைகள் இருந்தாலும் மேட்டூர் அணையை என்றால் அனைவருக்கும் தெரியும்..
தமிழகத்தின் மிகப் பெரிய நீர்த்தேக்கமாக உள்ள மேட்டூர் அணையை ஜூன் 12 ஆம் தேதி திறப்பது வழக்கம்.
மேட்டூர் அணையை ஸ்டான்லி அணை என்று அழைக்கப்படுகிறது.
திருவாங்கூர் சமஸ்தனத்திற்குட்பட்டிருந்த திவான் பகதூர் சி.பி.ராமசாமி அய்யர் என்பவற்றின் முயற்சியால் 1923 ஆம் ஆண்டில் இங்கிலாந்தை சேர்ந்த ஸ்டான்லி என்ற பொறியாளரை கொண்டு மேட்டூர் அணை கட்ட ஆரம்பிக்கப்பட்டது.
சி.பி.ராமசாமி அய்யரின் முயற்சிக்கு ஒரு காரணம் இருந்தது, அவரது முன்னோர்கள் தஞ்சாவூர் பகுதியை சேர்ந்தவர்கள்.
W.M எல்லீஸ் என்பவரின் வடிவமைப்பின்படி 4 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில், சுமார் 10,000 பணியாளர்களை கொண்டு 9ஆண்டு கால கடும் உழைப்பால் கட்டி முடிக்கப்பட்டு 1934ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. ஸ்டான்லி என்ற பொறியாளரால் கட்டப்பட்டதால் இவ்வணை ஸ்டான்லி அணை என்றழைக்கப்படுகிறது. மேட்டூர் அணை கட்டப்பட்ட போது, அப்பகுதியில் இருந்த 33 கிராம மக்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். அப்படி நீரில் மூழ்கிய பகுதியில், கிபி 10ஆம் நுற்றாண்டில் சோழ மன்னர்கள் ஆட்சி
காலத்தில் கட்டப்பட்ட
ஜலகண்டேஸ்வரர் கோயில், ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட இரட்டை கோபுர கிறிஸ்தவ ஆலயம் ஆகியவை நீரில் மூழ்கின. தற்போதும் அணையின் நீர்மட்டம் 70 அடிக்கு நெருங்கும் போது பண்ணவாடி நீர்தேக்கப்பகுதியில் தண்ணீரில் மூழ்கியிருக்கும் நந்திசிலையும், கிறிஸ்தவ தேவாலய கோபுரமும் வெளியே தெரிவது வழக்கம்.
மேட்டூர் அணையின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பல மாவட்ட பொதுமக்களின் குடிநீர், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்கு தண்ணீர்
மேட்டூர் அணை மூலம் கிடைக்கிறது.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும்போது அணை மற்றும் சுரங்க மின் நிலையம் மூலம் 250 மெகாவாட் மற்றும் காவிரி ஆற்றில் 7 கதவணை மின் நிலையங்கள் மூலம் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேட்டூர் அணையின்
மொத்த நீளம் 5300 அடி,
அதிகபட்ச உயரம் 214 அடி, அதிகபட்ச அகலம் 171 அடி ஆகும்.
அணையின் மேல் பகுதியில் 16 அடி அகலம் கொண்ட
சாலை உள்ளது.
அணையில் அதிகபட்சமாக
165 அடி உயரத்திற்கு நீரை தேக்கலாம். ஆனால் 120 அடி உயரம் வரை மட்டுமே தண்ணீர் தேக்கபடுகிறது. அணையின் நீர் கொள்ளளவு 93.4 TMC. 1TMC என்பது100 கோடி கன அடி நீர், லிட்டரில் சொல்வதென்றால் 2,830 கோடி லிட்டர் தண்ணீர் ஆகும். அணை கட்டப்பட்டத்தில் இருந்து 39 முறை நீர்மட்டம் 120 அடியையும்,
66-வது முறை 100 அடியையும் எட்டியுள்ளது.
மேட்டூர் அணை கட்டிமுடிக்கப்பட்டு 83 ஆண்டுகளுக்கு பிறகு 2017ஆம் முதன்முதலாக அணையின் நீர்பரப்பு பகுதியில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தை அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கப்பட்டது.
அணைக்கு எதிர் புறம் செயற்கை நீர்வீழ்ச்சிகள் மற்றும் அழகிய புல்தரைகளுடன் கண்ணை கவரும் விதத்தில் அழகு மிகுந்ததாக பூங்கா உள்ளது.
காவிரி டெல்டா குறுவைப் பாசனத்துக்காக மேட்டூா் அணையில் இருந்து 88 ஆவது ஆண்டாக கடந்த ஜூன் 12ஆம் தேதி அணையின் வலதுகரையில் உள்ள மேல்மட்ட மதகுகளை மின்விசையால் உயா்த்தி பாசனத்துக்கு தண்ணீரை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேட்டூா் அணை திறக்கப்பட்ட 88 ஆண்டு கால வரலாற்றில் குறித்த நாளான ஜூன் 12 -ஆம் தேதி அன்று, இதுவரை 18 ஆண்டுகள் மட்டுமே பாசனத்துக்காக தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
Comments