யோக வழியில் வாழ்க்கை!

 

















யோக வழியில் வாழ்க்கை!

யுஜ் என்னும் சமஸ்கிருத சொல்லில் இருந்த வந்த யோகா என்னும் சொல்லுக்கு, தனிப்பட்டவரின் நனவுநிலை அல்லது ஆன்மா, பிரபஞ்ச சக்தியுடன் இணைதல் என்று அர்த்தம். யோகா என்பது இந்தியாவின் 5000 ஆண்டு பழைமை வாய்ந்த உடல் சார்ந்த அறிவு. யோகா என்பதைப் பலர், உடல் வளைதல், திரும்புதல், நீட்டுதல், மூச்சினை எடுத்து விடுதல் என சிக்கலான உடற்பயிற்சி என்று நினைக்கக்கூடும், இவையனைத்தும், உள்ளிருக்கும் மனித மனதின் ஆன்மாவின் எல்லையற்ற சக்தியைத் திறந்து திறனை அதிகரிக்கும் ஆழமான அறிவியலைப் பற்றிய மேலோட்டமான கருத்துகள்.

யோகா என்பதே, தன்னுள் எப்படி வாழ வேண்டுமெனும் வாழ்க்கையின் சாரத்தைப் பொதிந்து வைத்திருக்கும் அறிவியல் ஆகும் – ஞான யோகம் – ஞான தத்துவ மார்க்கம், பக்தி யோகம் – பக்தி வழியில் பேரின்பம், கர்ம யோகம் – செயல்களின் பாதை, ராஜ யோகம் – மனதைக் கட்டுக்குள் வைக்கும் மார்க்கம். ராஜ யோகம், எட்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ராஜ யோக அமைப்பின் மையப்பகுதி என்பது, இவை அனைத்தையும் பல வழிகளில் சமன் செய்து இணைக்கும் யோக ஆசனப் பயிற்சியாகும்.

ஸ்ரீ ஸ்ரீ யோகா

மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்குள், பத்து மணிநேரங்களில் அளிக்கப்படும் ஸ்ரீ ஸ்ரீ யோகா பயிற்சி ஆரோக்கியமான புத்துணர்வளிக்கும் ஆனந்த அனுபவமாகும். உடலையும் மனதையும் சமநிலைப்படுத்தும், எளிய மற்றும் சற்றே கடினமான யோக நிலைகளையும், மூச்சுப் பயிற்சியையும் இணைத்து அளிக்கப்படும் வகுப்பு இதுவாகும்.

இது உடல் மற்றும் மனதை ஒரு சமநிலைக்குக் கொண்டு வர உதவும் எளிய மற்றும் சிக்கலான யோகா ஆசனங்கள் மற்றும் சுவாச நுட்பங்களைக் கொண்டது. இந்த நிகழ்வில் யோகா ஆசனங்கள், சுவாச நுட்பங்கள், யோகக் கல்வி மற்றும் தியானம் என மாணவர்களுக்கு ஒரு முழுமையான பயிற்சி அளிக்கப்பட்டு, வீட்டில் இதை எப்படிச் செய்யவேண்டும் என்பதையும் நடைமுறை பயிற்சியில் கற்றுத் தருகிறது. இது புதிதாய் பயிற்சி ஆரம்பிப்பவர்களுக்கும், அதே சமயத்தில் தொடர்ந்து பயிற்சி செய்பவர்களுக்கும் மற்றும் அனைத்து வயதினருக்கும் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று புதிதாக இதில் உள்ளது.

ஸ்ரீ ஸ்ரீ யோகா பயிற்சிப் பட்டறை, ஆசனங்களையும் வழக்கமான நடைமுறைகளையும் கற்கும் பயிற்சியாளர்களின் வாழ்க்கை முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. மக்கள் நாட்பட்ட நோய்களுக்கான நிவாரணத்தை உணர்கின்றனர், மற்றும் அவர்களின் நடத்தையில் தேவையான முக்கியமான மாற்றங்கள் நிகழ்வதைக் காண முடிகிறது. பங்கேற்பாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், பதட்டம் குறைந்து சகிப்புத்தன்மையின் அளவு அதிகரித்து, மனம் நிறைந்து, இங்கு கற்றுக் கொடுக்கப்படும் பயிற்சிகள் அளிக்கும் நிறைந்த ஆரோக்கிய அனுபவங்களையும் மகிழ்ச்சி அதிகரித்துள்ளதையும் பகிர்ந்துகொள்கின்றனர்.

அனைவருக்கும் யோகா

நீங்கள் இளைஞரோ முதியவரோ எந்த வயதினராக இருந்தாலும், உங்களின் பாய் அல்லது துணிவிரிப்பு இருக்கைக்கு நீங்கள் வந்து விட்டால், ஆசனங்கள் உங்களுக்கு ஆதரவாகவும் உங்களைத் தகுந்தவராகவும் வைத்திருப்பது என்பதே, யோகா ஆசனப் பயிற்சியின் ஒரு அழகாகும். உங்களுக்கு வயது ஆக ஆக, ஆசனம் பற்றிய உங்கள் புரிதல் மேலும் அதிநவீனமாகிறது. நீங்கள் உடலின் வெளி கட்டமைப்பில் கவனம் வைப்பதிலிருந்து, உள்ளே நடக்கும் தூய்மைப்படுத்தும் விஷயங்களுக்கு நகர்ந்து முடிவில் ஆசனத்தில் மட்டும் இருப்பீர்கள்

யோகா நமக்கு அன்னியமாக என்றும் இருந்ததில்லை. நாம் ஒரு குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே நாம் அதைச் செய்து வருகிறோம்! பூனை நீட்சி ஆசனமாக இருந்தால் அது முதுகெலும்பினை வலுப்படுத்துகிறது, அல்லது காற்று நிவாரண ஆசனம் செரிமானத்தை அதிகரிக்கிறது; குழந்தைகள் நாள் முழுவதும், சில யோகா வடிவங்களைச் செய்து கொண்டிருப்பதை நீங்கள் எப்போதும் கண்டிருப்பீர்கள். யோகா பல மக்களுக்கு பல விதமான விஷயங்களாக இருக்க முடியும். உங்களின் " யோகா வழியில் வாழ்க்கை!"யை நீங்கள் கண்டடைய உதவுவதென நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம்.

ஆயுர்வேதம்: வாழ்க்கை அறிவியல்

ஆயுர்வேதம் உலகின் மிகவும் மேலான மற்றும் சக்திவாய்ந்த உடல்-மன ஆரோக்கிய அமைப்பாகும். இது நோய்க்கான சிகிச்சை என்னும் அமைப்பு மட்டுமல்ல, ஆயுர்வேதம் என்பது ஒரு வாழ்க்கை அறிவியல் ஆகும். இது மக்களைத் துடிப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை, முழுமையான ஞானத்தை உணரச் செய்ய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தனிநபரின் உடல், மனம் மற்றும் ஆன்மாவை இயற்கையின் பொருத்தமான கொள்கைகளுடன் சமநிலையுடன் இயைந்து சுகாதாரமாகப் பராமரிக்க உதவும். நடைமுறையில் தொடரும் ஆயுர்வேதப் பயிற்சி, ஒரு கச்சிதமான வெற்றி பெறும் சூழலுடன் உங்கள் யோகா பயிற்சியை மேம்படுத்தும். இந்த வகுப்பில் நீங்கள் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பரந்த ஆயுர்வேத குறிப்புகள் மற்றும் பரிந்துரைகளுடன் அறிந்து கொள்ளலாம்.

சுவாச நுட்பங்கள் (பிராணயாமா) மற்றும் தியானம்

பிராணயாமா என்பது மூச்சின் நீட்டிப்பும் மூச்சினைக் கட்டுப்படுத்துவதும் ஆகும். சரியான உத்திகளுடன் மூச்சுப் பயிற்சி செய்வதால், அதிக பிராணவாயுவை இரத்தம் மற்றும் மூளைக்கு அனுப்பி, பிராணசக்தியை கட்டுப்படுத்தி மகத்தான சக்தியை அளிக்கும். பிராணயாமா பல்வேறு யோகா ஆசனங்களுடன் கைகோர்த்துக் கொண்டது போல் இணைந்திருக்கும். இந்த இரண்டு யோகங்களின் கொள்கைகள் சுய ஒழுக்கம் மற்றும் மனம், உடல் சுத்திகரிப்பின் மிக உயர்ந்த வடிவமாகப் கருதப்படுகிறது. பிராணயாமா உத்திகள் தியானம் என்னும் ஆழமான அனுபவத்துக்கு நம்மைத் தயார் செய்யும். பல்வேறு வகையான பிராணயாமா உத்திகள் பற்றி மேலும் இந்த பிரிவுகளில் அறியலாம்.

பதஞ்சலி யோக சூத்திரங்கள்

இந்த பகுதியில் பண்டைய நூல்களின் வர்ணனைகளை ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் பதஞ்சலி யோக சூத்திரங்களை பிரத்யேகமாக எடுத்துச் சொல்லும், யோகாவின் தோற்றம் மற்றும் நோக்கம் அறிவு குறித்து தெளிவுபடுத்தும். யோக சூத்திரங்களின் இலக்கு, யோக சூத்திரங்களின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளைப் புரிந்து கொள்ளச் செய்தல் ஆகும். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அளிக்கும் ஒவ்வொரு சூத்திரத்தின் விளக்கங்கள் ஒரு யோக வாழ்க்கையின் இறுதியில் என்ன நன்மைகளை அனுபவிக்க முடியும் என்னும் நடைமுறை ஆலோசனைகளை முன்வைக்கின்றது.

உடல் நோயால் உணர்வுகள் பாதிக்கப்பட்டுள்ளனவா? உங்கள் உணர்ச்சிகள் உங்களின் தனிப்பட்ட மற்றும் வேலையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றனவா? மேலும், எப்படி யோகா இயல்பாகவே பிரச்சினைகளைக் கடந்து குறைந்தபட்ச வாழ்க்கை முறை மாற்றங்களை ஏற்படுத்த முடியும்

யோகா பயிற்சி செய்பவர்

சிறுமி சாய்பிரகன்யா


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,