ஆட்சி சரியா இருக்கு' - முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பிறகு சீமான், பாரதிராஜா பேட்டி!

 ` ஆட்சி சரியா இருக்கு' - முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பிறகு சீமான், பாரதிராஜா பேட்டி!நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தனர். அந்த சந்திப்பின் போது முதலமைச்சரின் கொரோனா பேரிடர் நிதிக்கு, சீமான் நிதியளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ``எனது தந்தையின் மரணத்தின் போது ஆறுதல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதுவே எனக்கு பெரும் ஆறுதலாக இருந்தது. அவர் நினைத்திருந்தால் அதோடு விட்டிருக்கலாம். ஆனால், அவர் என்னை தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியது என்னை நெகிழவைத்துவிட்டது. இந்த சந்திப்பு நான் பெருமைக்குரியதாக பார்க்கிறேன்.
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை பற்றி முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம். அவர் அதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். பிளஸ் 2 தேர்வு நடத்துவதா வேண்டாமா என்று ஆலோசனை நடத்தி வருவதாக கூறினார்கள். மாணவர்களின் உயிர் தான் முக்கியம். ஒரு வருடம் தேர்வு எழுதாவிட்டால் ஒன்றும் ஆகிவிடாது. எனது கருத்தையும் தெரிவித்திருக்கிறேன்." என்றார்.
நன்றி: விகடன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,