மணிவண்ணன் நினைவு நாள் இன்று

 மணிவண்ணன் நினைவு நாள் இன்று

கமலுடன் ‘அவ்வை சண்முகி’யில் இவர் செய்த முதலியார் ரோல்,
தனி ரகம்.
தமிழ் சினிமாவில், நடிப்பு வேந்தர் ரங்காராவை நினைத்து நடிகவேள் எம்.ஆர்.ராதாவை நினைத்து நகைச்சுவை வேந்தன் பாலையாவை நினைத்து ஏன் ரகுவரனை நினைத்து கதாபாத்திரங்களை கதை எழுதும் போதே சிந்தித்தது போல மணிவண்ணனையும் நினைத்து கதை செய்யும் அளவுக்கு உயர்ந்தார். எந்த கதாபாத்திரம் என்றாலும்அநாயாசமாக நடித்து அசத்திவிடுவார்.மணிவண்ணன், சத்யராஜ், கவுண்டமணி என்றாலே அங்கே சிரிப்புக்குப் பஞ்சமில்லை எனும் அளவுக்கு ரசிகர்கள் மனதில் அசையாத இடம் பிடித்தது இந்த மூவர் கூட்டணி. அங்கே சத்யராஜ், கவுண்டமணி என எல்லாருக்குள்ளும் இருந்து வெளிப்பட்டுக்கொண்டே இருந்தார் இயக்குநர் மணிவண்ணன்.
வில்லன், நகைச்சுவை கலந்த வில்லன், நகைச்சுவை கதாப்பாத்திரம், குணச்சித்திர கதாபாத்திரம் என்று அனைவரிடமும் ஜோடி போட்டு நடித்தார். யாருடன் நடித்தாலும் ஜோடிப்பொருத்தம் அருமை எனும் அளவுக்கு மணிவண்ணன் முத்திரை பதித்தார்.Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,