#மாடத்தி/லீனா மணிமேகலை

லீனா மணிமேகலை இயக்கத்தில் உருவான #மாடத்தி திரைப்படம் வரும் 24 ல் #neestream என்ற OTT தளத்தில் வெளிவருகிறது.

 


official trailer of the film


தமிழ்நாட்டின் தென்கோடியில், 'காணத்தகாதோர்' என்று அடையாளப்படுத்தப்படும் புதிரை வண்ணார் சமூகத்தைச் சார்ந்த ஒரு பதின்வயது பெண்ணின் பருவ வாழ்க்கையைப் பேசுகிறது. இயக்குனர் லீனா மணிமேகலை தன் கருவாச்சி பிலிம்ஸ் பேனரில் எழுதி இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் மாடத்தி 

 

தலித் மக்கள் மற்றும் இறந்தவர்களின் துணிகளையும் மாதவிடாய் துணிகளையும் துவைப்பவர்களான இம்மக்கள் இருக்கிறார்கள் அவர்கள் எதிர்கொள்ளும் கொடூரமான அடக்குமுறைகளை இப்படம் மிகவும் துலலியமாக தோலுரிக்கிறது

 

 

. இவர்களைப் பார்த்தாலே தீட்டு என்று மற்றவர்களால் கருதப்படுவதால் மற்ற சமூகத்தினர் கண்ணில் படாமல் ஒளிந்து செல்லும் அவல நிலைக்குள்ளாம் இந்த மக்களின் துயர வாழ்வின் பின்னணியில் பாலின, சாதி அடையாளங்கள், மத நம்பிக்கைகள் மற்றும் வன்முறை ஆகியவற்றை ஆழ்ந்து அவதானிக்கும் ஒரு  ''தேவதைக் கதைதான் மாடத்தி.       

 

 

மாடத்தி படத்தின் திரைக்கதையை லீனா மணிமேகலையுடன் இனைந்து ரஃபிக் இஸ்மாயில் மற்றும் யவனிகா ஸ்ரீராம் எழுதியுள்ளனர்.

 ஜெஃப் டோலென், அபிநந்தன் ராமானுஜம் மற்றும் கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

கூட்டுநிதியில் தொடங்கப்பட்ட இப்படத்தை பின்னர் பாவனா கோபராஜு, பியூஷ் சிங் மற்றும்  அபிநந்தன் ராமானுஜம் இணைந்து தயாரித்துள்ளனர்.  

 


 


அஜ்மினா காசிம், பேட்ரிக் ராஜ், செம்மலர் அன்னம் மற்றும் அருள் குமார் முக்கிய கதாப்பாத்திரங்களுக்கு உயிரூட்ட மற்ற கதாபாத்திரங்களாக அச்சமூக  மக்களே பங்கேற்றுள்ளனர்.

தங்கராஜ் படத்தொகுப்பு செய்ய தபஸ் நாயக் ஒலி வடிவமைப்பு செய்துள்ளார். மோகன மகேந்திரன் கலை இயக்கம் செய்ய,

 இப்படத்திற்கான இசையை கார்த்திக் ராஜா அமைத்துள்ளார்.

பவிசங்கர் விளம்பர வடிவமைப்பு செய்துள்ளார்.

 பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருது பெற்ற இப்படம் வருகிற ஜூன் 24-ந் தேதி நீஸ்ட்ரீம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது

 

 

 

இந்த படத்தைப்பற்றி சொல்லும் போது லீனா மணிமேகலை அவர்கள்

 

 இரண்டாயிரம் ஆண்டின் ஆரம்ப வருடங்களில் தொடங்கிய டிஜிட்டல் தொழில்நுட்ப புரட்சியே என்னைப் போன்ற முதல் தலைமுறை பட்டதாரி பெண்ணுக்கு சினிமாவை தன் துறையாக தேர்ந்தெடுக்க உதவியது. பணபலமும் ஆள்பலமும் பாலினபலமும் சாதிபலமும் பாராம்பர்யத் தொடர்ச்சியும் கொண்டவர்களுக்கே சினிமா என்ற யதார்த்ததை மாற்றி - மலிவான கேமிராக்களும் எடிட்டிங்-ஒலியமைப்பு மென்பொருளும் என்னைப் போன்ற ஆட்களுக்கும் திரைப்படங்கள் எடுப்பதை சாத்தியப்படுத்தின. 2003-ல் நான் முதன் முதலில் எடுத்த ஆவணப்படம் மாத்தம்மா. அதற்கு 30,000 செலவானது என்று ஞாபகம்.

இந்த 18 வருடங்களில் narrative documentaries, film poems, cinema verite, mockumentary, fiction என பல genres-ல் வெவ்வேறு நேர அளவுகளில் படங்கள் எடுத்துப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

மாடத்தி என்னுடைய முதல் pure fiction feature. இதோ இந்த facebook-இல் என்னுடைய படங்களையும் புத்தகங்களையும் வைத்து நிதி திரட்டி, நண்பர்களின் உதவியோடு, கதை மாந்தர்களான மக்களின் பங்கேற்புடன் உருவாக்கிய படம்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சி இன்று என் படத்தை நேரடியாக உங்கள் ஸ்கிரீனுக்கே கொண்டு வரும் வாய்ப்பைத் தந்திருக்கிறது என்கிறார்

 


கட்டாயம் இது ஒரு மாறுபட்ட படமாக தான் இருக்கவேண்டும்

 

 

 

இயக்குனர் Leena Manimekalai க்கு எங்களது வாழ்த்துகள்

 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,