காரா வடை

காரா வடை


தேவையானவை

:புழுங்கல் அரிசி-1/2 கப்

கடலை பருப்பு -3/4கப்

துவரம்பருப்பு கால் கப்

முழு உளுந்து கால் கப்

இஞ்சி பொடியாக நறுக்கியது சிறிதளவு

உப்பு தேவைக்கேற்ப

கருவேப்பிலை தேவைக்கேற்ப

பொரிப்பதற்கு எண்ணெய்

செய்முறை: முதலில் அரிசி பருப்புகளை ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும் சிறிதளவு கடலைப் பருப்பை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும் பிறகு மிக்ஸியில் அரிசியையும் உளுந்தையும் சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொண்டு எடுத்து வைத்துக் கொள்ளவும் பிறகு பிறகு மீண்டும் இதர பருப்புகளை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து காரத்திற்கு மிளகாய் பழம் 5 மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் அதிகமாக நீர் விடக் கூடாது இது மிகவும் முக்கியமான குறிப்பு. இப்பொழுது  அரைத்த அரிசையையும், பருப்பையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்

அத்துடன் கருவேப்பிலை இஞ்சி உறவைத்த கடலை கடலை பருப்பு சேர்த்து நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும்

பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய வைத்து கலவையை கைகளில் எடுத்து அவ்வாறே கிள்ளினாற் போல்..... போடவும்.

நுரை அடங்கி சிறிது நேரம் வேக ஆரம்பித்தது திருப்பிப் போட்டு நன்கு வேக வைக்கவும். அடுப்பின் தனல் சிம்மில் வைத்து வேகவிடவும்.இப்பொழுது சுவையான ஆரோக்கியமான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெடி😋😋😋😋-Mrs.G.லதா.சென்னை.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,