பிடிஆர் போட்ட ஒரே ட்வீ ட்.. உடனே களத்தில் இறங்கிய ஆட்சியர்.

 

பிடிஆர் போட்ட ஒரே ட்வீ ட்.. உடனே களத்தில் இறங்கிய ஆட்சியர்.. வீடு தேடி வந்த பணம்!





மதுரையில் மருத்துவமனை ஒன்றில் கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகார் மீது நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளின் கட்டண கொள்ளையை தடுக்க தொடக்கத்தில் இருந்தே தமிழக அரசு தீவிரமாக முயன்று வருகிறது. தனியார் ஆம்புலன்ஸ் கட்டணம் இவ்வளவு, தனியார் மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகளுக்கு இவ்வளவு கட்டணம் என்று தமிழக அரசு தனி தனி கட்டணங்களை விதித்துள்ளது
இது தொடர்பாக தனியார் மருத்துவமனைகளுக்கு ஸ்டிரிக்ட் உத்தரவும் போடப்பட்டு உள்ளது. ஆனாலும் ஒரு சில மருத்துவமனைகள் அரசுக்கு தெரியாமல் கட்டண கொள்ளையில் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஈடுப்பட்டு வருகிறது
கட்டண கொள்ளை இந்த நிலையில் மதுரையில் தனியார் மருத்துவமனை ஒன்று கட்டண கொள்ளையில் ஈடுபட்டதாக புகார் வைக்கப்பட்டது. மே 12 மருத்துவமனையில் சேர்ந்த கொரோனா நோயாளி ஒருவர் 2 நாள் மட்டுமே அங்கு சிகிச்சை எடுத்த நிலையில் மே 14 டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள அந்த மருத்துவமனை நோயாளியிடம் இந்த 2 நாள் சிகிச்சைக்காக 1.3 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலித்துள்ளது.

அதன்படி மருத்துவரை சந்தித்த கட்டணம் 145 ஆயிரம் ரூபாய், டாக்டர் பீஸ் 25 ஆயிரம் ரூபாய் , நர்சிங் பீஸ் 13500 ரூபாய், டிஸ்போசல் பீஸ் 13000, பார்மசி கட்டணம் 10856, லேப் சார்ஜ் 4500, உணவு கட்டணம் 3500 ரூபாய் அனைத்திற்கும் கூடுதல் கட்டணம் விதித்து கொள்ளை அடித்துள்ளனர். இந்த பில் இணையத்தில் வைரலான நிலையில், நெட்டிசன் ஒருவர் அதை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் டேக் செய்து கோரிக்கை வைத்தார்.

இந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுங்கள் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் அவர் கோரிக்கை வைத்தார். இந்த நிலையில், இது தொடர்பாக மதுரை ஆட்சியரை விசாரிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன் என்று பிடிஆர் டிவிட்டரில் பதில் அளித்தார். இந்த ட்வீ ட்டை தொடர்ந்து உடனே மதுரை ஆட்சியர் அனீஸ் சேகர் உடனே விசாரணை நடத்தினார். மருத்துவமனை நிர்வாகிகளை அழைத்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அந்த தனியார் மருத்துவமனை கூடுதல் கட்டணம் வசூலித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்சியர் உத்தரவின் பெயரில் 66 ஆயிரம் ரூபாய் நோயாளியின் குடும்பத்திற்கு மீண்டும் திருப்பி அளிக்கப்பட்டது. நேராக நோயாளியின் கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டது. இனிமேல் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்று அந்த மருத்துவமனைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இது தொடர்பாக ட்வீ ட் செய்துள்ள அமைச்சர் பிடிஆர், கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக சமூக வலைதளத்தில் வந்த புகாரையடுத்து விரைந்து நடவடிக்கை எடுத்த ஆட்சியருக்கு நன்றி. மதுரையில் மீண்டும் ஒருமுறை தனியார் மருத்துவர்கள் கூட்டத்தை கூட்டி முதல்வர் ஸ்டாலின் அறிவித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டுமென வலியுறுத்த உள்ளோம், என்று கூறியுள்ளார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,