கருணாநிதி.. வார்த்தையை விட்ட நிருபர்.. தன்னோட பாணியில் சேகர் பாபு சொன்ன பதில்..

 கருணாநிதி.. வார்த்தையை விட்ட நிருபர்.. தன்னோட பாணியில் சேகர் பாபு சொன்ன பதில்.. ஆரவாரித்த திமுகவினர்



சென்னை: பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, முன்னாள் முதல்வர் கருணாநிதியை, பெயர் சொல்லி அழைத்த நிருபருக்கு தனக்கே உரிய பாணியில் அறிவுரை வழங்கியுள்ளார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது தான் இந்த நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது.
அந்த செய்தியாளர் சந்திப்பின் போது திமுக ஆட்சிக்கு வந்து 30 நாட்கள் ஆகி உள்ளது. இப்போது நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் டிரைலர் மட்டும் தான். இனிமேல்தான் மெயின் பிக்சரை பார்க்கப் போகிறீர்கள் என்று கூறியிருந்தார் சேகர்பாபு .
அனைத்து ஜாதியும் அர்ச்சகர்
மேலும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை அடுத்த 100 நாட்களுக்குள், தமிழகத்தில் அமல்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம் என்று உறுதியாக தனது பேட்டியில் தெரிவித்திருந்தார் சேகர் பாபு. அப்போது ஒரு நிருபர் கோவில்களில், தமிழில் அர்ச்சனை செய்யப்படாமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.
நிருபர் கேட்ட கேள்வி
தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று கோவில்களில், பெயர் பலகை இருக்கிறது. ஆனால் பெரும்பாலான கோவில்களில் சமஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை ஓதப்படுகிறது. இதற்கு முன்பு இருந்த கருணாநிதி ஆட்சியில் அது சரியாக கடைபிடிக்கப்பட்டது. இந்த விஷயத்தில் அரசு எந்த மாதிரி நடவடிக்கை எடுக்கும் என்று கேள்வி எழுப்பினார்.
வாடிப்போன முகங்கள்
இந்த கேள்வியை காதில் வாங்கியதுமே சேகர்பாபு அருகே அமர்ந்திருந்த திமுக நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் முகம் சற்று வாடிப்போனது. ஆனால் சேகர்பாபு அசரவில்லை. அமைதியாக கேள்வியை உள்வாங்கிக் கொண்டார். நேரடியாக முதலில் கேள்விக்கு மட்டும் பதில் சொன்னார்.
தமிழில் அர்ச்சனை
அவர் கூறுகையில், திருக்கோவில்களை பொருத்த அளவில் தற்போது கொரோனா காலம் என்பதால் பக்தர்களுக்கு இன்னமும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. நீங்கள் சொன்ன கருத்தை ஏற்றுக்கொண்டு, நிச்சயம் கோயில்களைக் கண்காணித்து தமிழில் அர்ச்சனை செய்வதற்கு உண்டான உரிய நடவடிக்கைகளை எடுப்போம் என்று தெரிவித்தார் சேகர்பாபு. ஆனால் இதன் பிறகுதான் விஷயத்துக்கு வந்தார்.
அமைதியாக கொடுத்த அட்வைஸ்
"மாண்புமிகு நிருபர் அவர்கள் வயதில் சிறியவர்.. தவறாக எண்ணக்கூடாது.. கலைஞர் என்று கேட்டு இருக்கலாம்.. முன்னாள் முதலமைச்சர் என்று கேட்டு இருக்கலாம். ஆனால் பெயரை நச்சென்று அழுத்தி சொன்னீர்கள். கருணாநிதி அவர்கள் என்றுகூட சொல்லியிருக்கலாம். 98 வயது நிரம்பிய மறைந்த முன்னாள் முதல்வர் அவர். எனவே, அருள் கூர்ந்து, இதை ஒரு வேண்டுகோளாக வைத்துக்கொள்ளுங்கள் . அப்படி கூறுவதுதான் நாணயமாக இருக்கும்" இவ்வாறு, பணிவோடும், அதேநேரம் , சொல்லவந்ததை தீர்க்கமாகவும் சொல்லினார் சேகர்பாபு. சுற்றியிருந்த திமுகவினர் கைதட்டி அவரது இந்த கருத்தை வரவேற்றனர்.
தன்மையான பதில்
கருணாநிதி என்று நேரடியாக பெயரை குறிப்பிட்டு நிருபர் கேள்வி எழுப்பிய போதிலும், முதலில் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு, பிறகு நிருபரை பார்த்து மாண்புமிகு நிருபர் என்று குறிப்பிட்டு தனது அறிவுரைகளை வழங்கினார் சேகர் பாபு. அதுவும் பணிவோடு மனது புண்படாத வகையில் அந்த அட்வைஸ் இருந்தது. இந்த செய்தியாளர் சந்திப்பு வீடியோவை பார்த்த திமுக ஆதரவாளர்கள், மிகவும் தன்மையாக சேகர்பாபு சொல்ல வந்த கருத்தை பதிவு செய்துவிட்டார் என்று பாராட்டுவதை பார்க்க முடிகிறது.
நன்றி: ஒன் இந்தியா தமிழ்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,