கொழுப்பு(Cholesterol கொலஸ்ட்ரால்) சம்மந்தமான மருத்துவ குறிப்புகள்

 இயற்கை மருத்துவம் வழங்கும் அறிந்து கொள்வோம்♻️♻️♻️






 ♥️♥️♥️இன்று நாம் பார்க்க இருப்பது கொழுப்பு(Cholesterol கொலஸ்ட்ரால்) சம்மந்தமான மருத்துவ குறிப்புகள்♥️♥️♥️



 🧶கொலஸ்ட்ரால்🧶 என்றால் 🧶என்ன❓🧶 



 ✍️✍️✍️கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. 80 % கொலஸ்ட்ராலைச் நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது.✍️✍️✍️ 



 ♥️♥️♥️கொலஸ்ட்ராலின் தன்மைகள்♥️♥️♥️🌹 


 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு, எல்லா செல்களுக்கும் வடிவம் கொடுத்து, அவைகளுக்குச் சுவராக இருந்து, இயங்கச் செய்கிறது. முக்கியமாக மூளையின் வளர்ச்சிக்கும், செல்களின் செயல் பாட்டிற்கும் இந்த கொலஸ்ட்டிரால் இன்றியமையாததாக இருக்கிறது. 

 கல்லீரலில் (Liver) இருந்து பித்த நீர் சுரக்க கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு தேவைப் படுகிறது. இந்த பித்த நீர்தான் (bile) உணவிலுள்ள கொழுப்பையும், மற்றும் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான A,D,E,K முதலியவற்றையும் குடலில் ஜீரணமாக்கி, இரத்தத்தில் கலக்கச் செய்கிறது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️. 



 ✍️✍️✍️கொலஸ்டிரால், நம் உடம்பிற்குத் தேவையான முக்கியமான ஹார்மோன்களான உடல் வளர்ச்சி ஹார்மோன் (Growth hormone), ஈஸ்ட்ரஜன் (Estrogen) டெஸ்டோஸ்டிரான் (Testosterone) சுரப்பதற்கு தேவைப்படுகிறது. 

 நம் உடம்பிலேயே தயாராகும் வைட்டமின் ‘ஈ’ க்கு கொலஸ்ட்ரால் மிகவும் தேவைப்படுகிறது✍️✍️✍️. 



 ♥️♥️♥️எது நல்ல கொலஸ்ட்ரால்❓♥️♥️♥️ 



 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️LDL என்பது கெட்ட கொலஸ்ட்ரால் HDLஎன்பது நல்ல கொலஸ்ட்ரால். ஏனென்றால் LDL ரத்தத்தில் அதிகமாக அளவு இருந்தால் இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

 இந்த LDL – இரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் படிகங்களாக படிந்து (Cholesterol plaque) இரத்த ஓட்டத்தை நாளடைவில் தடைபடச் செய்கிறது. இதற்கு Atherosclerosis என்று பெயர். 

 ஆனால் HDL இப்படிப்பட்ட கொலஸ்ட்ரால் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதனால் இதனுடைய அளவு ரத்தத்தில் கூடுவது மிகவும் நன்மையானதாக கருதப்படுகிறது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் எப்பொழுதும் புரதச் சத்து துணையுடன் தான் இருக்கும் (Lipoprotein).🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ 



 ♥️♥️♥️கொழுப்புகளின் வகைகளும், அவற்றின் அளவுகளும்♥️♥️♥️. 



 ✍️✍️✍️Total Cholesterol <—>200 mgm% மொத்த கொலஸ்ட்டிரால் 

 LDL Cholesterol <—>100 mgm%குறை அடர்த்திக் கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால் 

 VLDLCholesterol <—>30 mgm%மிக குறை அடர்த்தி கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால் 

 Triglycerides <130 mgm% முக்கிளிசரைடுகள் 

 HDLP Cholesterol <50 mgm %  மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்ரால் 

 மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mgm% க்கு மேலே செல்லச் செல்ல மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே போகும். 10% அதிகமானால் 30% அதிக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மாரடைப்பு வந்தவர்கள் இதன் அளவை 180 mgm% க்கு குறைவாக வைத்துக்கொள்வது நல்லது. 

 குறை அடர்த்தி கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 100 mgm% அதிகமானால் 5 மடங்கு அதிகமாக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. இவர்களுக்கு பாரிச வாயு நோய் வர வாய்ப்புகள் அதிகம். 

 முக்கிளிசரைடுகள் (TGL) நாம் உண்ணும் கொழுப்பு உணவிலிருந்து கிடைக்கிறது. மேலும், எந்தக் கொழுப்பையும், சர்க்கரையையும் கூட நம் கல்லீரல் முக்கிளிசரைடுகளாக மாற்றும் சக்தி கொண்டுள்ளது. ஆதலால் 150 mgm% அளவுக்கு மேற்பட்டால் பன்மடங்கு அதிக அளவில் மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 35mgm% கீழே இருந்தால் மட்டுமே மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. இதன் அளவு 50 mgm% க்கு மேலே அதிகமாக இருந்தால் மாரடைப்பைத் தடுக்கின்றது. இரத்தக் குழாயில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்டிராலை, அப்புறப்படுத்தி இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கவும் செய்கிறது.✍️✍️✍️ 



 🥥🍚🍦🍼🥃🍺🍯🥣கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகள்🥥🍚🍦🍼🥃🍺🍯🥣 



 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பூரிதக் கொழுப்பு (Saturated fatty acid) 

 எந்த எண்ணெய் குளிர வைக்கும் பொழுது உறைந்து விடுகிறதோ, அவைகளில் மிக அதிக அளவு பூரிதக் கொழுப்பு உள்ளது. உதாரணம், நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய். 

 ஐஸ்கிரீம், கேக், குக்கீஸ், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள் ஆகியவற்றிலும், முட்டையின் மஞ்சள் கரு, கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் உறுப்பு இறைச்சிகளான கல்லீரல், மண்ணீரல், மூளை போன்றவற்றில் பூரிதக் கொழுப்பு அதிகமாக உள்ளது. 

 இந்த உணவு வகைகளை அதிகமாக உட்கொள்வதால், இதிலுள்ள கொழுப்பு நம் கல்லீரலில் அதிவேகமாக கொலஸ்ட்ராலாக மாறி, முக்கியமாக கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL-cholesterol BP ஆக இரத்தத்தில் கலந்து 100 mgm% அளவைவிட மிகுதியாகிறது. இதனால் இவைகள் இரத்தக் குழாய்களில் படிந்து (Atherosclerosis) மாரடைப்பு, மூளை பாதிப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட காரணமாகிறது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️. 



 ✍️✍️✍️கொலஸ்ட்டிரால் அசைவ உணவுகளில் மட்டும்தான் உள்ளதே தவிர எந்த தாவர உணவிலும் கிடையாது. அப்படியிருக்க அனைவருக்கும் எழும் சந்தேகம், பாலும், பாலிலிருந்து கிடைக்கும் நெய், வெண்ணெய், பாலாடை போன்ற உணவுப் பதார்த்தங்கள் எந்த பிரிவில் சேர்க்கப்படுகிறது என்பதே. 

 பாலில் பூரித கொழுப்பு இருப்பதால், உடலில் ஜீரணமாகி நேரடியாக ரத்தத்தில் கலந்துவிடுகிறது.✍️✍️✍️ 



 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஒற்றை அபூரிதக் கொழுப்பானது (Mono unsaturated fatty acid -MUFA) கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் உள்ளது. 

 பன்ம பூரிதக் கொழுப்பு (Poly unsaturated ftty acid -PUFA) சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய், சோளம் எண்ணெய் ஆகியவற்றில் உள்ளது. 

 இந்த உணவுகளை அளவோடு சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL cholesterol) அதிகரிப்பதைத் தவிர்த்து நல்ல கொலஸ்ட்டிரால் (HDL Cholesterol) அளவை அதிகரிக்கும். 

 அபூரிதக் கொழுப்பு அதிகம் உள்ள எண்ணெயை கொதிக்க வைக்கும்போது, அதிலுள்ள நற்குணங்களை இழந்து, பூரிதக் கொழுப்பாக (Saternated fatty acid) மாறுகிறது. இந்த முறையில் தயாராகும் உணவுகளான அப்பளம், வடை, சிப்ஸ், பிரெஞ்ச் பிரைஸ் முதலியவற்றை அதிக அளவு உண்டால் இரத்ததில் கெட்ட கொரஸ்ட்டிரால் கூடி, நல்ல கொலஸ்ட்ரால் குறைந்து இரத்தக் குழாய்களை அடைக்கும். ஒரே எண்ணெயைப் பல முறை காய்ச்சி உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும்பொழுது இந்த தீமை பலமடங்கு உயர்கிறது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️. 



 ✍️✍️✍️ஒமேகா 3, ஒமேகா 6 என்பவை அதி முக்கிய கொழுப்பு வகைகள் ஆகும் (Essential fatty acid). இவைகளை நம் கல்லீரல் உற்பத்தி செய்ய முடியாது. உணவின் மூலமே இவை நமக்கு கிடைக்கிறது. இவைகள் இரத்தத்தில் உள்ள முக்கிளிசரைடுகள் குறைத்தும், நல்ல கொழுப்பை கூட்டியும், இரத்தம் உறையாமல் தடுத்தும், மாரடைப்பு வரும் வாய்ப்பையும் குறைக்கிறது. 

 இரத்தத்தில் ஒமேகா 3 ஒருபங்கு என்றால், ஒமேகா 6 இரு மடங்காக இருக்கும்✍️✍️✍️. 



 🍇🍒🍓ஒமேகா 3 உள்ள உணவுகள்🍇🍒🍓 



 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மீன், சால்மன் (Essential fatty acid), சுறா, வால்நட், சோயா, பிளாக்ஸ் விதைகள், அரிசி தவிட்டு எண்ணெய்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ 



 🥭🍍🍐🍏🍈ஒமேகா 6 உள்ள உணவுகள்🥭🍍🍐🍏🍈 



 ✍️✍️✍️சோளம், சூரியகாந்தி எண்ணெய், பருத்தி, வேர்க்கடலை, சோயாபீன்ஸ் மற்றும் விதைகளிலும், பருப்புகளிலும் கிடைக்கிறது.✍️✍️✍️ 


 🧃🥫🥃🍚🍦எவ்வாறு நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பது❓🧃🥫🥃🍚🍦 



 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️நல்ல கொலஸ்ட்ரால் உருவாவதற்கு மூல காரணம் கல்லீரல்தான். அதனால் கல்லீரலை தூண்டக்கூடிய மருந்துகள், உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் நம் உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க முடியும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️. 



 ✍️✍️✍️கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றுவதன் மூலம்  நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க முடியும்: 

· சீரான உடற்பயிற்சி 

· உடல் பருமனைக் குறைத்து சீரான எடையில் இருப்பது. 

· புகைப் பிடிப்பதைத் தவிர்ப்பது. 

· மது அருந்துவதைத் தவிர்ப்பது 

· அதிகமான பழ வகைகளையும், நார்ச்சத்துள்ள காய்கறிகளையும் உணவில் சேர்ப்பது. 

· அசைவ உணவு உண்பவர்கள், மீன் உட்கொள்வது நல்லது. 

· பிட்ஸா, பர்கர், சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், அப்பளம், வடைபோன்றவற்றை தவிர்ப்பது . 

· யோகாசன பயிற்சி செய்வது, 

· தியானப் பயிற்சி செய்வது .✍️✍️✍️ 



 ♥️♥️♥️கொழுப்பு என்றாலே அது ஆபத்தானதா ! – மருத்துவர் BRJ கண்ணன்♥️♥️♥️



 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️கொழுப்புக்கும் கொலஸ்ட்ராலுக்கும் உள்ள தொடர்பு என்ன ? உண்மையில் கொழுப்பு உணவுகள் தீமையானதா விளக்குகிறார் மருத்துவர் BRJ கண்ணன்... 

 By மருத்துவர் கண்ணன்  அறிவியல் – ஆரோக்கியம் ! – கொழுப்பு பற்றிய மெய்யான உண்மை!🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ 



 ♥️♥️♥️கொழுப்பும் கொலஸ்ட்ராலும் ஒன்றா❓♥️♥️♥️ 



 ✍️✍️✍️“கொழுப்பு ரொம்ப நல்லது. எவ்ளோவேனா சாப்பிடுங்க” என்று நான் சொல்லப்போவது இல்லை. ஆனால் நீங்கள் நினைக்கும் அளவிற்கு கொழுப்பு மிகவும் மோசமானது அல்ல என்பதையே சொல்லப் போறேன். 

 கொழுப்பு என்றால் என்ன? அதில் நிறைய வகைகள் இருக்கு. அதில் ஒன்றுதான் கொலஸ்ட்ரால். ஆனால் கொழுப்பு, கொலஸ்ட்ரால் இரண்டும் ஒன்று என பேசிக்கொண்டிருக்கிறோம். அது சரியல்ல. 

 நாம் சரிவிகித உணவு சாப்பிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். இதில் 25-30% உணவு கொழுப்பிலிருந்து வர வேண்டும். ஆனால் நாம் இப்போது சாப்பிடுவதில் 8-10% தான் கொழுப்பு இருக்கிறது. இந்த 10 சதவீதத்தை எப்படி முப்பது சதவீதமாக கூட்டிக்கொள்வது?✍️✍️✍️ 



 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️முதலில் ரத்தத்தில் இருக்கும் கொழுப்பு என்பது என்னவென்று பார்க்கலாம். ரத்தத்தில் LDL என்ற கெட்ட கொழுப்பு உள்ளது. “அதை சப்பிடாதே, இதை சாப்பிடாதே, கொலஸ்ட்ரால் கூடிடும்” என்று பயமுறுத்துகிறார்கள் அல்லவா ? அவர்கள் கூறும் விசயம் இந்த எல்.டி.எல் கொலஸ்ட்ரால்தான். இயல்பான நிலையில் இது 160-க்கு கீழே இருக்க வேண்டும். இதற்கு மேல் சென்றால் இது ‘அதிகம்’ என்று சொல்லலாம். ரத்தத்துல இருக்கும் அனைத்துக்கும் ஒரு வரையறை இருக்கிறது. சர்க்கரை, புரதம், சோடியம், பொட்டாசியம் எதுவாக இருந்தாலும் இதுக்கு கீழ போனால் ’குறைவு’, அதுக்கு மேல போனால் ‘அதிகம்’னு ஒரு ரேஞ்ச் வைத்திருப்பார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️. 



 ✍️✍️✍️உதாரணத்துக்கு சர்க்கரையை எடுத்துக் கொண்டால், நீங்கள் சாப்பிட்ட பிறகு பார்த்தால் கூட 140mg க்கு மேல் தாண்டாது. ஒருவருக்கு 150,160 mg தாண்டிவிட்டால் அவருக்கு ’சர்க்கரை நோய்’ எனச் சொல்ல மாட்டோம். அது 200-ஐ தாண்டினால் மட்டும்தான் அவருக்கு ‘சர்க்கரை நோய்’ என்று சொல்லுவோம்.  சரி அப்படியே 200-ஐ தாண்டினால் அடுத்த நாளே மாரடைப்போ  சிறுநீரகக் கோளாறோ வந்து விடுமா? வராது. 

 அது 200-த்தாண்டி அதிக நாட்கள் நீடித்தால்தான் நோயே வரும். இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டியது, நமது ரத்தத்தில் இருக்கும் உட்கூறுகள் இயல்பான வரையறையை தாண்டி விட்டதெனில் அடுத்த நாளே நமக்கு நோய் வந்துவிடாது. நம் உடம்பு அதனை சரி செய்வதற்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கும். ஒருவருக்கு எல்.டி.எல் பார்க்கிறீர்கள். 180 இருக்கு. உடனே டாக்டரை பார்க்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உடனே அவருக்கு அட்டாக் வரப் போவதும் இல்லை. உடனே சரி செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எல்.டி.எல். அதிகமானால் அட்டாக் வரும். சிலர் வீடியோவில் சொல்வது போல் கொழுப்பு இருந்தால் பாதிப்பு இல்லை என்று சொல்வது தவறு. எல்.டி.எல். அதிகமானால் இருதய நோய், பக்கவாதம் வரும்.✍️✍️✍️ 



 🛑🛑🛑எல்.டி.எல். – எச்.டி.எல். – ட்ரைக்லிசெரைட்ஸ் – ட்ரான்ஸ்ஃபாட் என்ன வேறுபாடு❓🛑🛑🛑



 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஆனால், இந்த அதிக எல்.டி.எல் என்பது நம்மிடம் எவ்வளவு பொதுவாக இருக்கிறது ? இருதய நோயோ, பக்கவாதமோ வந்த உங்கள் உறவினர், நண்பரிடம் கேட்டுப்பாருங்கள். கொழுப்பு அளவு, அதில் உள்ள எல்.டி.எல் அளவு எவ்வளவு இருக்கு என கேட்டுப்பாருங்கள். இயல்பாகத்தான்இருக்கும். இதுதான் உண்மை. ரொம்ப சிலருக்குத்தான் இந்த இயல்பு நிலையைத்தாண்டி அதனால் பக்கவாதம் வரும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️. 



 ✍️✍️✍️இருதய நோயாளிகளுக்கு மட்டுமே மருத்துவம் பார்க்கக்கூடிய ’கார்டியாக் ஸ்பெசலிஸ்டாக’ இருந்தாலும், மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு பேர்தான் அப்படி வருவார்கள். எனில், பாக்கி 98% மாரடைப்பு பிரச்சினைக்கு வருபவர்களுக்கு இரத்தத்தில் எல்.டி.எல். கொலஸ்ட்ரால் இயல்பு நிலையில்தான் இருக்கிறது. இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன வெனில், இந்த எல்.டி.எல். கொலஸ்ட்ரால் ஆபத்தானதுதான். ஆனால் அதிக எல்.டி.எல். கொலஸ்ட்ரால் ஒருவருக்கு வருவது அரிதானது✍️✍️✍️. 



 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்த எல்.டி.எல்-லுக்கும், உணவுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? சிறிது இருக்கிறது. உணவிலேயே கொழுப்புள்ள வகைகளான தேங்காய், நல்லெண்ணெய், மாமிசங்கள் ஆகியவற்றால் கொலஸ்ட்ரால் கொஞ்சம் அதிகமாக வாய்ப்பிருக்கிறது. ஆனால் நேரடித் தொடர்பு கிடையாது. நாம் சாப்பிடும் அளவுக்கு ஏற்ற மாதிரி கூடுமா என்றால் இல்லை.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ 



 ✍️✍️✍️நம் இரத்தத்தில் இன்னொரு மோசமான கொழுப்பு இருக்கு. அது ’ட்ரைக்லிசெரைட்ஸ்’. அது 200mg-க்கு கீழே இருக்க வேண்டும். மேலே போனால் அதிக ‘ட்ரைக்லிசெரைட்ஸ்’ என்று சொல்வோம். இது பரவலாக பலருக்கும் வரக்கூடியது. 100 பேருக்கு இந்த டெஸ்ட் எடுத்தால் 60 பேருக்கு இது இருக்கும். ஆனால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க மறந்து விட்டோம். மீண்டும் உங்கள் நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள். கொலஸ்ட்ரால் ரிப்போர்ட் எடுத்தவர்களிடம் டி.ஜி. எவ்வளவு இருக்கிறது என்று கேட்டுப் பாருங்கள். “ஆமாங்க, 220, 250 இருந்தது”என்று சொல்வார்கள். அதற்கும் இருதய நோய்க்கும், பக்கவாதத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது. அது எதனால் வருகிறது❓✍️✍️✍️ 



 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️நம்ம உணவில் இருக்கும் கொழுப்பினால் வருகிறதா? இல்லை. அது உணவில் இருக்கும், கார்ப்போஹைட்ரேட், மாவுப் பொருட்களால் வருகிறது. எல்.டி.எல். கொலஸ்ட்ராலை விட ‘ட்ரை க்லிசெரைட்ஸ்’ அதிக பிரச்சனையாக இருக்கிறது. அது எதில் இருந்து வருகிறது ? மாவுப் பொருட்களில் இருந்து வருகிறது. ஆக, இந்த மாவுப் பொருட்களை உட்கொள்வதைக் குறைத்தால் இந்த ’ட்ரைக்லிசெரைட்ஸ்’-ம் குறைந்து விடும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️. 



 ✍️✍️✍️அடுத்தது மூன்றாவதாக ஒரு கொழுப்பு இருக்கிறது. அது HDL  கொழுப்பு. அது நல்ல கொழுப்பு. அதாவது இந்த ஹெச்.டி.எல் 45 – 50mg இருந்தால் பக்கவாதமோ, மாரடைப்போ வரும். அது ரொம்ப குறைவு. குறைந்தது இதன் அளவு 40 இருக்க வேண்டும். அதற்கு கீழே இருந்தால் கொஞ்சம் அபாயம். ஆனால் இந்த ஹெச்.டி.எல். அளவை அதிகரிக்க மாத்திரையோ மருந்தோ எதுவுமே கிடையாது. உடற்பயிற்சி செய்தால் கூடும். நல்ல கொழுப்புள்ள உணவுகளை சாப்பிட்டால் அது கூடும். கொழுப்பு உணவுகளை சாப்பிட்டால் எல்.டி.எல். கூடும். ஆனால், குறைவாகத்தான் கூடும். கூடவே ஹெச்.டி.எல்.-ம் கூடும். இதிலிருந்தே தெரிகிறது கொழுப்புள்ள உணவுகளை எல்லாம் நாம பயமில்லாமல் எடுத்துக் கொள்ளலாம்✍️✍️✍️ .


 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இன்னொரு மோசமான கொழுப்பு இருக்கு. அது ‘ட்ரான்ஸ்ஃபாட்’. இது உருமாறிய கொழுப்பு. இயற்கையான உணவுகளில் இக்கொழுப்பு கிடையாது. செயற்கையாக நாம் தயாரிக்கும் பண்டங்களால் உருவாகிறது. இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலைப் பற்றி தெரிந்துகொண்டோம்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️. 



 ♥️♥️♥️உண்ணும் உணவுக்கும் கொழுப்புக்கும் என்ன சம்பந்தம்❓♥️♥️♥️



 ✍️✍️✍️இப்போது உணவுக்கு வருவோம்.  உணவு என வரும்போது கொலஸ்ட்ரால் என்று பேசாமல் கொழுப்பு என்று பேசியாக வேண்டும். உணவுல இருக்க கொழுப்பை விரிவாக இரண்டு விதமாக பிரிக்க வேண்டும். அவை நிறைவுற்ற கொழுப்பு (Saturated Fat), நிறைவுறாத கொழுப்பு (Unsaturated Fat). இந்த இரண்டையும் அதிகமாக சாப்பிட்டால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் கூடும் வாய்ப்பு உண்டு.✍️✍️✍️ 



 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஏனெனில், இந்த நிறைவுற்ற கொழுப்பு இரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் கூட்டும் வாய்ப்பு அதிகம். இந்த நிறைவுற்ற கொழுப்பு எதில் இருக்கிறது ?. பால், நெய், வெண்ணை, தேங்காய், முட்டை மாமிசம் இவற்றில் எல்லாம் இருக்கிறது. ஆனால் முன்னர் குறிப்பிட்டது போல நேரடி தொடர்பே கிடையாது. உதாரணத்திற்கு தேங்காயை எடுத்துக் கொள்வோம். தேங்காய சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என பலரும் கூறுகின்றனர்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ 



 ✍️✍️✍️“இவன் தேங்காய் நிறையா சாப்பிடுவான், நிறைய தேங்கா சாப்ட்டு கொலஸ்ட்ரால கூட்டிக்கிட்டான்”னு யாரையாவது கேள்விப் பட்டிருக்றீர்களா?  இருக்காது. ஆனால் எப்படி இதை உண்மை என நம்பிக் கொண்டு இருக்கிறீர்கள். இந்த தென்னை மரம் மனுதனோடு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றது. 

 உலகில் சில மரங்கள் ஒருசில பகுதியில் இருக்கும். சில வேறு பகுதியில் மட்டும் இருக்கும். ஆனால், தென்னை மரங்கள் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கின்றன. தென்னையிலிருந்து வரும் தேங்காய் அவ்வளவு மோசமானதாக இருந்திருந்தால், ஒன்று அதை சாப்பிட்டு, மனிதன் அழிந்திருக்க வேண்டும். இல்லை மனிதன் அதை வளர்க்காமல் விட்டிருக்க வேண்டும். இதிலேர்ந்தே அது மோசமானது இல்லை என்பது நமக்கு புரிகிறது அல்லவா ❓✍️✍️✍️ 



 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️தேங்காய் சாப்பிட்டு கொலஸ்ட்ரால் கூடியதாகவோ, அல்லது தேங்காய் எண்ணெயோ, தேங்காயோ சாப்பிட்டு மாரடைப்பு வந்ததாகவோ ஒரு ஆய்வும் சொல்லவில்லை. இதான் உண்மை. 

 அடுத்து பாலுக்கு வருவோம். கொழுப்புள்ள முழு பால் குடிப்பது நல்லதா? அதில் உள்ள கொழுப்பையெல்லாம் எடுத்தி விட்டு தரப்படும் ’ஸ்கிம்முடு பால்’ குடிப்பது நல்லதா? கொழுப்போடு சேர்ந்த பாலை குடிப்பதுதான் நல்லது. இதோ இரண்டு வாரம் முன்னால்கூட ஒரு மருத்துவ அறிக்கை வந்திருக்கிறது. அதிலும் இதுதான் சொல்லப்படுகிறது. இது நானாக சொல்வது கிடையாது. விஞ்ஞானம் சொல்வதையேதான் நான் சொல்கிறேன். ஆகவே, நாளை நீங்கள் பால் குடிக்கப் போகிறீர்கள் எனில், கெட்டியாக அப்படியே முழு பாலை குடியுங்கள். ஒன்றும் தவறில்லை🙋‍♀️🙋‍♀️🙋‍♀️. 



 ✍️✍️✍️அதே மாதிரிதான் மாமிசங்கள். மாமிசம் என்றாலே கொழுப்பு அதிகமாக இருக்கும் என நமக்குத் தெரியும். அதில் கொழுப்புதான் இருக்கிறது. கார்போஹைட்ரேட் கிடையாது. ஆனால், குறிப்பாக இந்த மட்டன் மேல், ஒரு தப்பான பார்வை இருக்கிறது. “மட்டன் சாப்பிடாதே” என்று ஆலோசனை கூறுவார்கள். சிலர் நெஞ்சு வலியோடு வருவார்கள். என்ன பிரச்சினை எனக் கேட்டால், “முந்தா நேத்து கொஞ்சம் மட்டன் சாப்பிட்டேன். அதான் அட்டாக் வந்திருச்சிங்க” எனக் கூறுவார்கள்.✍️✍️✍️ 


 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. கோழி இறைச்சியில எவ்வளவு கொழுப்பு இருக்கிறதோ, அதைவிட மட்டனில் இருக்கும் கொழுப்பு அதிகம்தான். கோழியை 100 கிராம் சாப்பிட்டால் மட்டனை 50 கிராம் சாப்பிடுங்கள். அவ்வளவுதான் வித்தியாசமே தவிர, மட்டனை ஏதோ விசம் மாதிரி பார்க்கக் கூடாது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ 



 ✍️✍️✍️சுருக்கமாகக் கூறினால், நம்மிடையே இருக்கும் கொழுப்புள்ள உணவுகள் பெரும்பாலும் பாதுகாப்பானவைதான். நாம் அளவாக, முன்னரே சொன்னது போல் 30% சாப்பிட்டோம் எனில், நமது உடலில் எல்.டி.எல். அதிகரிக்க வாய்ப்பே கிடையாது. வெறுமனே ”இதை சாப்டாதே, அதை சாப்டாதே” எனக் கூறுவது மிக மிக தவறு. சொல்லப்போனால் இந்த மாதிரி சொல்லி பயமுறுத்தி, கொழுப்பு சாப்பிடுவதற்குப் பதிலாக அரிசியையும் கோதுமையும் சாப்பிட்டு வியாதியை கொண்டு வந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை.✍️✍️✍️ 



 🧃🥫எந்த ஆயில் நல்ல ஆயில் ❓🧃🥫



 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️எண்ணெய் குறித்து கொஞ்சம் வருவோம். எந்த ஆயில் நல்ல ஆயில்? நான் எல்லோருக்கும் சொல்வேன். நம்ம பாரம்பரிய எண்ணெய்தான் நல்ல எண்ணெய். நாம் தமிழகத்தில் என்ன எண்ணெய் உபயோகிக்கிறோம் ? நல்லெண்ணெய், கடலை எண்ணெய் உபயோகிக்கிறோம். நம் கேரள நண்பர்கள் தேங்காய் எண்ணை உபயோகிக்கிறார்கள். வட இந்தியர்கள் இந்த கடுகெண்ணெய் உபயோகிக்கிறார்கள்.  அதெல்லாம் நல்லதுதான். இதெல்லாம்தான் வருடக்கணக்கில் நமது மரபணுக்களில் இருக்கிறது. அதை மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️. 



 ✍️✍️✍️இந்த நல்லெண்ணெய் உண்மையிலேயே நல்லது. நிறைவுற்ற கொழுப்பு அதில் இல்லை. நிறைவுறாத கொழுப்புதான் இருக்கிறது. எந்த எண்ணெயாகவும் இருக்கட்டும். எண்ணெயில செய்யப்பட்ட பொருட்களை அன்றைக்கே சாப்பிட்டால்தான் நல்லது. அதனால் கெட்ட கொழுப்பு கூடும் வாய்ப்பு கிடையாது. எண்ணெயில் செய்த பொருட்களை வைத்து, நான்கைந்து நாட்கள் கழித்து உண்ணும் போதுதான் நல்ல எண்ணெய் கெட்ட எண்ணெயாக மாறுகிறது✍️✍️✍️. 



 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️எப்படியெனில், நாம் அனைவரும் மிகவும் பயப்பட வேண்டிய ஒரு கொழுப்பு இருக்கிறது. அது   டிரான்ஸ்ஃபேட்.  எந்தப் பொருளும் கெடாமல் இருக்க வேண்டுமெனில் அதில் ஒன்று அதிகமான உப்பு இருக்க வேண்டும். அல்லது அதிகமான ட்ரான்ஸ்ஃபேட் இருக்க வேண்டும். நெய்யோ, எண்ணெயோ, வெண்ணெயோ, இயற்கையாக நமக்கு எப்படிக் கிடைக்கிறதோ, அதை அப்படியே வைத்து உணவுப் பொருட்களை செய்தால் விரைவில் கெட்டுப் போய்விடும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️. 



 ✍️✍️✍️எந்த ஒரு திண்பண்டமும் கெடாமல் இருக்கிறதெனில் அதில் டிரான்ஸ் பேட் இருக்கிறது எனப் பொருள். அதற்கு என்ன பொருள் ? அனைத்து பேக்கரி உணவுகள்,  கேக், சிப்ஸ், முறுக்கு, காரசேவு என கடையில் போய் நாம் வாங்கும் பொட்டலம் போடப்பட்ட  உணவுப் பொருட்கள் அனைத்திலும் ‘டிரான்ஸ்ஃபேட்’ இருக்கிறது. இந்த உண்மையை நாம் அதிகமானோர் உணரவில்லை. நாம் சாப்பிடும் பிஸ்கட், ஐஸ்கிரீம் என அனைத்திலும் இருக்கிறது. ஆகவே இந்த மாதிரி உணவுகளை எப்போதாவது சாப்பிடலாம். ஆனால் தினமும் சாப்பிட்டால் அது மிகப்பெரிய தவறு.✍️✍️✍️ 



 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஏன் பொரித்த உணவுகளைஅதிகமா சாப்பிடக்கூடாதுனு எனக் கூறுகிறோமெனில், பொரிக்கும்போதுதான் அந்த எண்ணையின் தன்மை மாறுகிறது. அனைத்து எண்ணெய்க்கும் ’ஸ்மோக் பாயிண்ட்’ என்றொரு எல்லை இருக்கிறது. எண்ணையை சூடு செய்யும்போத், அது கொதித்து ஆவியா மாறும் நிலை. அந்த அளவுக்கு ஆவியா மாறும் நிலைமைக்குப் போகாமல், அதற்கு முன்னரே பண்டங்களை தயாரித்தால் அதில் அவ்வளவு ஆபத்து கிடையாது. ஆவியாகத் தொடங்கிய பின் பண்டங்கள் தயாரிக்கும்போதுதான், அந்த எண்ணையின் தன்மை மாறி கெட்ட எண்ணெயாக மாறுகிறது. அதில் ’டிரான்ஸ்ஃபேட்’ உருவாகிறது. இதுதான் பிரச்சினை. இதே எண்ணையை மீண்டும் மீண்டும் சூடு படுத்தினால் என்ன ஆகும்❓🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ 



 ✍️✍️✍️அதில் HNE என சொல்லக் கூடிய நச்சுப் பொருட்கள் உருவாகின்றன. இந்த நச்சுப் பொருட்கள் அதிகமானால், அது நேரடியாக இதயத்தைத் தாக்கும். நேரடியாக மூளையைத் தாக்கும். ’அல்ஜீமர் டிசீஸ்’ என சொல்லக் கூடிய நோய் வரும். புற்றுநோய்க்குக் கூட அது அடிப்படையாக இருக்கிறது. ஆகவே, எண்ணெயை ஒருதடவைக்கு மேலே சூடு படுத்தக்கூடாது. 

 ஆகவே, தாளிப்பதற்கு, பொரிப்பதற்கு, குழம்பு வைக்கையில்க் எண்ணெயை பயன்படுத்தலாம் தவறில்லை. ஆனால்,  ஒரு முறை பயன்படுத்தின எண்ணெயை வைத்திருந்து மீண்டும் பயன்படுத்தினாலே, அந்த எண்ணெயில் செய்த பலகாரங்களை வைத்து சாப்பிட்டாலோதான் பிரச்சினை.✍️✍️✍️ 



 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பருப்பு சாதம் சாப்பிடலாம். நன்றாக நெய் ஊற்றி சாப்பிடலாம். அதில் தவறு கிடையாது. ஆனால் எண்ணெயில செய்த பலகாரங்களை வைத்து சாப்பிடுவது போல இருந்தால், இப்போதாவதுதான் சாப்பிட வேண்டும். மிக்சர், காராசேவு, சிப்ஸ் பின்னர் விளம்பரப்படுத்துகிறார்களே குர்குரே, ஹால்திகிராம் சினாக்ஸ் என அனைத்திலும் ட்ரான்ஸ்ஃபேட் இருக்கிறது. இந்த ’டிரான்ஸ்ஃபேட் மிகவும் ஆபத்தானது என்பதை நினைவில் கொள்ளவும். பல நாள் வைத்து உண்ணும் தின்பண்டங்களில் மற்றும் எளிதாக நமக்கு கிடைக்கும் பொருள் கெடாமல் இருக்கிறது என்றால் அதில் டிரான்ஸ்ஃபேட் இருக்கிறது என்று பொருள். அதை நாம் கூடுமான வரையில் தவிர்ப்பது நல்லது. 

 இந்த எண்ணெயைப் பற்றி பேசும்பொழுது, பலரும் பொதுவாக கேட்கும் கேள்வி, “வடை சாப்பிடலாமா?”  வடை மிகவும் நல்ல உணவுப் பொருள்தான். வடை உளுந்து அல்லது வேறு ஏதாவது பருப்பில்தான் செய்யப்படுகிறது. அதில் வேண்டிய அளவு புரதமும், கார்போஹேட்ரேட்டும் இருக்கிறது. எண்ணெயில் செய்யப்படுவதால் கூடவே கொழுப்பின் கூறுகளும் வருகின்றன🙋‍♀️🙋‍♀️🙋‍♀️. 



 ✍️✍️✍️ஆக, கொழுப்பு, புரதச் சத்து, மாவுச்சத்து கலந்த உணவுதான் வடை. அதனால் வடையில் எவ்வித பிரச்சினையும் இல்லை. நீங்கள் வீட்டில் செய்தால் 5 வடை கூட சாப்பிடலாம், ஒன்றும் செய்யாது. ஆனால் வெளியில் மட்டும் வாங்கிச் சாப்பிடக் கூடாது. 

 ஏனெனில், முதலில், அவர்கள் எந்த எண்ணெயை பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியாது. இரண்டாவதாக, அந்த எண்ணெயை அதிகமாக கொதிக்க வச்சி, அதுல டிரான்ஸ்ஃபேட்ஸ் உருவாகுற மாதிரி செய்வார்கள். மூன்றாவது, அதே எண்ணெயை மறுபடியும் மறுபடியும் உபயோகப்படுத்துவார்கள். காலையில கொதித்த எண்ணையை ஆறவச்சி மதியம் பயன்படுத்துவார்கள். மதிய எண்ணெயை இரவுக்குப் பயன்படுத்துவார்கள். இரவு எண்ணையை அடுத்தநாள் காலையில பயன்படுத்துவார்கள்.✍️✍️✍️ 



 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️எங்காவது, எப்போதாவது வெளியே செல்லும்போது 2 வடை, பஜ்ஜி போன்றவை சாப்பிட்டால் தவறில்லை. சில காலையில் 11 மணிக்கு 2 வடை, ஒரு டீ,  மாலை 4 மணிக்கு 2 பஜ்ஜி, 1 டீ என சாப்பிடுவார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும். 

 வீட்டில் நமக்குத் தெரியும் என்பதால் அது நல்ல எண்ணெயாக இருக்கும் வாய்ப்பு அதிகம். ஆனால் வெளியில் வாங்கி சாப்பிடும் பொருட்களில் உள்ள எண்ணெய் குறித்து அச்சப்படவேண்டும். கொஞ்சமும் யோசித்துப் பார்க்காமல் நாம் சில பொருட்களின் மீது முத்திரை குத்தி வைத்துவிடுகிறோம். நாம் அனைத்து கொழுப்பையும் மாற்றி மாற்றி சாப்பிட்டால், எதுவும் நமது உடலில் பெரியதாக தங்காது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ 



 ✍️✍️✍️ஒன்றை குறிப்பாக புரிந்து கொள்ளவேண்டும். நம்மால் அதிக கொழுப்பை சாப்பிட முடியாது. ஒரு கோப்பை பழச்சாறில் 300 கலோரி இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அதை 5 நிமிடத்தில் நாம் குடித்துவிடுவோம். அதே 300 கலோரி இருக்கும் நல்லெண்ணையோ, நெய்யோ, வெண்ணையோ கொடுத்தால் நம்மால் சாப்பிட முடியாது. கொழுப்பு உணவுவகைகளும் சரி, புரதங்களும் சரி, நம்மை சாப்பிடத் தூண்டாது. சாப்பிட்டது போதும் என சொல்ல வைக்கும். ஆனால், இந்த கொழுப்பையும் மாவுப் பொருட்களையும் சேர்த்த பண்டங்கள் தயாரித்தால் அது நம்மை அதிகம் உண்ண வைக்கிறது. எனவே, நாம மாவுப் பொருட்களை தவிர்ப்போம் என முடிவெடுத்தாலே கொழுப்பு உணவுகளை அதிகம் சாப்பிட மாட்டோம்.✍️✍️✍️ 



 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️உருளைக் கிழங்கை வைத்து ‘பிங்கர் பிரை’ என்றொரு உணவை செய்கிறார்கள். “நான் உருளைகிழங்கு அதிகமாக சாப்பிட மாட்டேன்” என முடிவெடுத்துவிட்டால், அதிகம் சாப்பிடமுடியாது. பீட்சா, பர்கர் இவற்றில் எல்லாம் பெரிய ’பன்’ இருக்கும். பீட்சாவுல பெரிய அளவு ஆக்கிரமிப்பது இந்த ரொட்டிதான். அதில் டிரான்ஸ்ஃபேட்-டும் இருக்கிறது. ஆகவே, இது போன்ற கண்ணுக்குத் தெரியும் மாவுப் பொருட்களை சாப்பிடமாட்டேன் என முடிவு செய்து விட்டால், கண்டிப்பாக உங்களால் அதிகம் கொழுப்பு சாப்பிட முடியாது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ 



 ✍️✍️✍️உங்களிடம் ஒரு கிலோ சிக்கன் கொடுத்தால் அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது. அதிகபட்சம் 200, 300 கிராம் அளவோடு நிறுத்திக் கொள்வோம். இதே சிக்கனை பிரியாணியோடு வைத்தால்  இரண்டையும் மற்றி மாற்றி சாப்பிட்டு முடித்து விடுவோம். ஆகவே மாவுப் பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்ள மாட்டேன் என சபதம் எடுத்துக் கொண்டாலேயே, கொழுப்பை நீங்கள் அதிகமாக சாப்பிட முடியாது✍️✍️✍️. 



 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அதனால் பயமில்லாமல் தினமும் இரண்டு தேக்கரண்டி நெய் விட்டுக் கொண்டு சாப்பிடலாம், வெண்ணெய் சாப்பிடலாம், தேங்காய் சாப்பிடலாம், நல்லெண்ணை சாப்பிடலாம். ஆனால் இவை அனைத்தும் வேண்டிய அளவுக்குதான். அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ 



 ✍️✍️✍️கொழுப்பு மீதான நமது பயத்தைத் தவிர்ப்போம். சரிவிகித உணவில் 30% வரை கொழுப்பு இருக்கலாம் என நாம் ஏற்கனவே பார்த்தது போல அந்த அளவுக்கு மட்டும் எடுத்துக் கொண்டால் நமக்கு நோய் வரும் வாய்ப்பு குறைகிறது✍️✍️✍️. 



 🛑🛑🛑கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்❓🛑🛑🛑



 🧶இது லேட்டஸ்ட்!🧶 


‘ 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️வாழ்க்கையில் பல விஷயங்கள் எளிமை யானவையே. உங்களால்தான் அவை சிக்கலாகிவிடுகின்றன’ என்கிறார் ஓஷோ. இந்த பொன்மொழியை வழிமொழிவதுபோல, கொலஸ்ட்ராலுக்கு ஆதரவாக வெளிவந்திருக்கும் சமீபத்திய அமெரிக்க ஆய்வு பலத்த விவாதங்களை உருவாக்கி இருக்கிறது. 

 கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கொலஸ்ட்ரால் என்பதைக் கேட்டாலே அலறுகிற அளவுக்குத்தான் நம்மிடம் புரிதல் இருக்கிறது. ஆனால், US Dietary guidelines advisory committee 2015 வெளியிட்டிருக்கும் ஆய்வில், `இதய நோய்கள், பருமன், நீரிழிவு பிரச்னைகளுக்கு வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றைத்தான் சரி செய்ய வேண்டும்’ என்று லாஜிக்கலாக பல காரணங்களை பட்டியல் இட்டிருக்கிறது. இதற்கு மருத்துவ வட்டாரத்தில் ஆதரவும் பெருகி வருகிறது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️. 



 ‘✍️✍️✍️உணவின் மூலம் கிடைக்கும் டயட்டரி கொலஸ்ட்ராலுக்கும் இதய நோய்க்கும் நேரடியாகத் தொடர்பில்லை. கொலஸ்ட்ராலைவிட அதிகப்படியான சர்க்கரை மற்றும் பாலீஷ் செய்யப்பட்ட தானிய உணவுகளே இதய நோய்களை ஏற்படுத்துவதில் முக்கிய இடம்பிடிக்கின்றன’ என்கிறது அந்த ஆய்வு. ‘40 வயசாயிருச்சா? எல்லாவற்றையும் தியாகம் செய்து, பத்திய சாப்பாடு சாப்பிடுங்கள்’ என்று சொல்வதையும் தவறு என்கிறது இந்த ஆய்வு✍️✍️✍️. 



 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️காரணம், உணவின் மூலம் கிடைக்கும் கொலஸ்ட்ரால் 15% மட்டுமே. மீதி 85% கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரலே உற்பத்தி செய்கிறது என்பதும் இதில் கவனிக்க வேண்டிய தகவல். 10 கிராம் கொலஸ்ட்ரால் உணவுகளினால் ரத்தத்தில் 10 கிராம் கொலஸ்ட்ரால் உண்டாகும் என்று நினைப்பதும் தவறானது என்கிறார்கள் ஆய்வாளர்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️. 



 ✍️✍️✍️இதய நோய் சிகிச்சை மருத்துவரான ஜாய் தாமஸிடம் இந்த ஆய்வு பற்றி கேட்டோம்...‘‘இந்த ஆய்வை நான் வரவேற்கிறேன். நம் உடலுக்கு அத்தியாவசியமான ஒரு சத்து கொழுப்பு. தாதுக்கள், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற சத்துகள் எப்படி நம் உடலுக்குத் தேவையோ, அதேபோல கொழுப்புச் சத்தும் நமக்குத் தேவை. 30 வயது வரை நம் உடலின் உருவாக்கத்துக்கும், அதன் பிறகு சேதமடையும் செல்களை சரி செய்யவும் ஹார்மோன்களின் இயல்பான செயல்பாட்டுக்கும் கொழுப்பு தேவை. ஆனால், கொலஸ்ட்ரால் பற்றி மக்களிடம் தேவையற்ற பயம் இருக்கிறது.✍️✍️✍️ 



 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பருமன், இதய நோய்கள், நீரிழிவு என்று பல்வேறு பிரச்னைகளை உண்டாக்குபவை கொலஸ்ட்ரால் என்பதெல்லாம் உண்மை தான். அவையெல்லாம் LDL, VLDL, ட்ரைகிளிசராய்ட்ஸ் போன்ற கெட்ட கொலஸ்ட்ரால் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  மாரடைப்பு, பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் பாதிப்புகள் போன்ற பிரச்னைகள் இந்த கெட்ட கொழுப்புகளாலேயே வருகின்றன.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ 



 ✍️✍️✍️நாம் பயம் கொள்ள வேண்டியது கொலஸ்ட்ராலைவிட அதைச் சார்ந்த மற்ற விஷயங்களில்தான் என்று குறிப்பிட்டிருக்கிறது அந்த ஆய்வு. அளவு கடந்த சர்க்கரை பயன்பாடு, உப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், புகைப்பழக்கம், மன அழுத்தம், மரபியல் ரீதியான காரணங்கள் போன்றவைதான் பருமனையும் நீரிழிவையும் உண்டாக்குகின்றன. இதயத்துக்கு எதிரிகள் இந்தப் பிரச்னைகள்தான் என்று சர்வதேச அளவிலான பொது காரணிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அது இப்போது ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகியிருக்கிறது✍️✍️✍️. 



 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️கார்போஹைட்ரேட் உணவும் தேவைக்கேற்ப செலவழிந்ததுபோக, மீதமுள்ளது கொழுப்பாக மாறிவிடும். அதனால் கார்போஹைட்ரேட் உணவுகளையும் அளவு தாண்டாமலேயே பயன்படுத்த வேண்டும். ‘கொழுப்பு ஆபத்து’ என்று ஒரேயடியாக ஒதுக்கி விடாமல் கொழுப்பைப் பயன்படுத்துவது எப்படி என்பதை இப்போது கற்றுக் கொள்வதுதான் அவசியமானது. ஸ்மார்ட்டாக பயன்படுத்தினால் கொலஸ்ட்ரால் நமக்கு உதவும் ஹீரோ. தவறாகப் பயன்படுத்தினால் நம்மைக் காலி செய்யும் வில்லன்’’ என்கிறார்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️. 



 ♥️♥️♥️கொலஸ்ட்ரால் கொலைகாரனா❓♥️♥️♥️



 ✍️✍️✍️Chol  என்ற வார்த்தை பித்தம் என்பதையும், Sterols என்ற வார்த்தை ஸ்டீராய்டு  ஹார்மோனையும் குறிக்கிறது. அதாவது, கொலஸ்ட்ராலே உடலில் அதிகம் சுரக்கிற ஒரு வகை ஸ்டீராய்டு ஹார்மோன்தான். அதனால்தான் இது அசைவ உணவுகளில் அதிகம்  இருப்பதாகக் கூறுகிறார்கள். பித்தநீர்தான் வைட்டமின்களைப் பிரித்து  ரத்தத்தில் கலக்க உதவி செய்கிறது✍️✍️✍️. 



 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️கொழுப்பின் அளவு 10க்கும் குறைவாக  இருப்பதை சைஸ் ஸீரோ என்கிறார்கள். கரீனா கபூர், கேத்ரினா கைஃப் போன்ற  மும்பை நடிகைகளும், ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொள்கிறவர்களும் எடையை குறைப்பதற்காக இந்த அபாயகரமான வேலையைச் செய்கிறார்கள். சராசரி கொழுப்பின் அளவை பராமரிப்பதே அனைவருக்கும் அவசியம். ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன் செக்ஸ்  ஹார்மோன்கள் சீராக செயல்பட கொலஸ்ட்ரால் அவசியம். கொலஸ்ட்ரால் குறைந்தாலோ,  அதிகமானாலோ செக்ஸ் ஹார்மோன்களில் குளறுபடி ஏற்பட்டு ஆண்களிடம் ஆண்  தன்மையையும், பெண்களிடம் பெண் தன்மையையும் குறைப்பதோடு தாம்பத்திய வாழ்வையும் பல வழிகளில் சிக்கலாக்கும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ 


 ✍️✍️✍️உடலில் கால்சியம் அளவை பராமரிப்பதிலும், உணவில் இருக்கிற சத்துகளை உடலின் செல்களுக்குக் கொண்டு செல்வதிலும்,  சூரிய ஒளியிலிருந்து சருமம்  சேதமாகாமல் தடுப்பதிலும் கொலஸ்ட்ராலுக்குப்  பெரும் பங்கு உண்டு. முட்டை கொலஸ்ட்ராலைக் கொண்டு வருகிறது   என்ற கருத்து இருக்கிறது. அதனாலேயே மஞ்சள் கருவை விட்டுவிட்டு பலரும்  சாப்பிடுகிறார்கள். அது அவசியம் இல்லை✍️✍️✍️. 



விளையாட்டு வீரர்கள், பாடி  பில்டர்கள் போன்றோர் மிக அதிக அளவில் முட்டையை சேர்த்துக் கொள்கிறார்கள்.  ஆனாலும், ஆரோக்கியமாகவே இருக்கிறார்கள். சாப்பிடுவதற்கேற்ற உடல் உழைப்பு  கட்டாயம் என்பது மட்டுமே நாம் எப்போதும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். முன்பு  கொலஸ்ட்ரால் பிரச்னை என்றால் மாத்திரைகள் மட்டுமே தருவார்கள். 


இப்போது  வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும், உணவுப் பழக்கத்தை ஒழுங்குக்கு கொண்டு வர  வேண்டும், தியானம் செய்ய வேண்டும் என்று கொலஸ்ட்ராலைச் சார்ந்த மற்ற  பிரச்னைகளைப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதுவே நல்ல மாற்றம்தானே! ‘கொழுப்பு ஆபத்து’ என்று ஒரேயடியாக ஒதுக்கிவிடாமல் கொழுப்பைப் பயன்படுத்துவது எப்படி என்பதை கற்றுக் கொள்வதுதான் இப்போது அவசியமானது.


எனவே இது போன்ற கொலஸ்ட்ரால் உணவுகளை தவிர்த்து மருத்துவர்கள் கூறுவது போல நாம் நம் உடல் நலத்தை பாதுகாப்பொம்மாக



 🌹நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்🌹

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,