Sherni/ movie review

 

 


ஓட்டி ட்டியில் அமேசான்ல் நான் சமீபத்தில் ரசித்த படம்

Sherni - பெண் புலி).

 

சுருங்கிக்கொண்டே வரும் காடுகள், பேராசையுடன் வெட்டப்படும் கனிமச் சுரங்கங்கள், கிராமவாசிகளுக்கு மேய்ச்சல் நிலங்கள் இல்லாமல் போவது, வனவிலங்குகளைப் பாதுகாக்க அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு உள்ளூர் மட்ட அரசியல்வாதிகள் போடும் முட்டுக்கட்டைகள் என இரண்டரை மணி நேரத்திற்குள் பல விஷயங்களைப் பேசியிருக்கிறார் இயக்குநர்.

வனப் பாதுகாப்பு குறித்த பெருஞ்செய்தியொன்றை தாங்கி நிற்கும் இக்கதையில் சலிப்பூட்டும் பிரசார தொனி எங்குமே இல்லை. விறுவிறுப்பான த்ரில்லர் கதைக்கான துல்லிய திரைக்கதையினை எழுதி இருக்கிறார் இயக்குநர் அமித் மசூர்கர்..

 

சினிமாவில் அதிகம் பேசப்படாத விஷயங்களை வைத்து மிக அரிதாகவே திரைப்படங்கள் வெளியாகும். அப்படி ஓர் அரிதான திரைப்படம்தான் (சுலேமானி கீடா, நியூட்டன் படங்களை இயக்கிய அமித் மாசுர்கரின்  படம்தான்  இது

  

நடிகர்கள்: வித்யா பாலன், சரத் சக்ஸேனா, முகுல் சட்டா, விஜய் ராஸ்; ஒளிப்பதிவு: ராகேஷ் ஹரிதாஸ்; இயக்கம்: அமித் மாசூர்கர். வெளியீடு: அமெஸான் ப்ரைம்.

.

மத்தியப் பிரதேசத்தின் ஒரு பகுதிக்கு புதிய காட்டிலாக அதிகாரியாக வரும் வித்யா. அவர் பணி சேர்ந்த நேரத்தில்  பெண் புலி ஒன்று அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த மனிதர்களை அடித்துக்கொல்லவும். அந்தப் புலியை உயிருடன் வேறு இடத்திற்கு மாற்ற முயலும் வித்யாவின் முயற்சிகளுக்கு வரும் தடைகளும் அந்தத் தடைகளை அவரால் உடைக்க முடிகிறதா என்பதுமே படம்.

 

இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய இடத்திற்கு வரும் ஒரு காட்டிலாகா அதிகாரி தன் வேலையை நேர்மையாகவும் திறம்படவும் செய்வதற்கு எத்தனை பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை சொல்லும் படமாகவும் இதனை நாம் கருதலாம்

.கதைக்கருனு பார்த்தால் ஓர் ஆட்கொல்லிப் பெண் புலியை வனத்துறை காக்க முயல  அரசியல்வாதிகள் தங்கள் சுய நலத்திற்காக கொல்ல முயல்கிறார்கள் என்ற ஒரு வரிக் கதைதான்

ஆனா இந்த ஒரு வரியில்  பல்வேறு அடுக்குகளை வைத்து படத்தை முன்னெடுத்துச் செல்கிறார் மசூர்கர். திரைக்கதையும் காட்சியமைப்புகளும் படத்தை சிறப்பாக நகர்த்திச் செல்கின்றன. ஒற்றைக் காட்சியில் பல விஷயங்களைச் சொல்லிச் செல்கிறார் இயக்குநர்.

  • கனிமவளச் சுரண்டல், ஆதிகுடிகளின் அறியாமையினை பயன்படுத்திக் கொள்ளும் அரசியல்வாதிகள், சம்பளம் வந்தா போதும் என பணி செய்யும் வனப் பாதுகாப்பு உயரதிகாரி என பொறுப்பற்ற சுற்றத்திற்கு இடையே வித்யாபாலனின் உணர்வும் பொறுப்பும் கூடிய இந்தப் பயணம் ஒரு பெண் 
  • புலியின் அழுத்தமான தடம்

வனத்தில் நடக்கும் ஒரு பிரச்னையை வைத்து, பல சமூக, அரசியல், சுற்றுச்சூழல் பிரச்னைகளை அநாயாசமாகச் சொல்லும் இந்தப்படத்தில் . ஒரு வீராப்பான பெண் அதிகாரிக்கும் அரசியல்வாதிகளின் ஆதரவுபெற்ற கொலைகார வில்லனுக்கும் இடையிலான மோதலாக மாற்றி, தடதடக்க வைக்கும் க்ளைமாக்ஸில் கதாநாயகி வெற்றி பெற வைத்திருக்கலாம் INDIA

ஆனால், அந்த சாதராண பொழுதுபோக்கு வலையில் விழுந்துவிடாமல், எடுத்துக்கொண்ட கதைக்கு விசுவாசமாக, நம்பகத்தன்மையுடன் கூடிய ஒரு படத்தை முன்வைத்துள்ள இயக்குனரை நாம் பாராட்டியே ஆக வேண்டும்

.

படத்தின் டைட்டிலுக்கு அர்த்தம் பெண் புலி என்பது. இது காட்டில் உலவும் புலிக்கும் கதாநாயகிக்கும் பொருந்தும் வகையில் ஒரு பொதுப் பெயராக அமைகிறது. அந்த முதன்மைப் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் வித்யா பாலன்.

அவர் மட்டுமல்ல, வில்லனாக வரும் சரத் சக்ஸேனா, விலங்கியல் துறை பேராசிரியராக வரும் விஜய் ராஸ், முதுகெலும்பில்லாத உயரதிகாரியாக வரும் ப்ரிஜேந்திர கலா என ஒவ்வொருவரும் படத்தை சிறப்பாக மிக இயல்பாக நடித்து படத்தை மிக சுவாரஸ்யமாக நடத்தி சென்றுளளார்கள்

.

 இந்தியத் திரைப்படங்களில் பொதுவாகத் தென்படும் பெண்களை ஆண்களைவிட சற்று கீழானவர்களாகக் காட்டும் போக்கை உடைத்தெறிகிறது இந்தப் படம். இதையெல்லாம் சத்தமாக, பிரசாரத் தொனியோடு பேசாமல், ஒற்றைக் காட்சிகளில் செய்திருக்கிறார் இயக்குநர் என்பதுதான் இன்னும் வசீகரிக்கிறது.

 

வித்யாபாலனுக்கு உதவியாக வரும் விஜய் ராஸ் தனது நடிப்பில் அசத்தியிருக்கிறார். புலியைக் கண்டதும் என்ன செய்யவேண்டும் என மக்களுக்கு விளக்கும் காட்சியாகட்டும், அறமும் அறிவுமற்ற அதிகாரிகளின் செயல்களுக்கு ஆற்றும் எதிர்வினையாகட்டும் தனக்கான வாய்ப்பு வரும் இடங்களில் எல்லாம் அழகாக ஸ்கோர் செய்திருக்கிறார் அவர்.

.

நீங்கள் வனத்திற்குள் புலியைக் காண நூறு முறை சென்றால், அதில் ஒருமுறை நீங்கள் புலியைப் பார்ப்பீர்கள். ஆனால், புலியோ உங்களை 99 முறை பாத்திருக்கும்என்ற வசனம் அருமை. வன விலங்குகளுடன் மனித சேர்ந்து வாழ முடியும் என்பதையும், புலிகள் மனிதனுக்கு ஆபத்து விளைவிக்கும் உயிரல்ல என்பதனையும் சொல்லும் ஆழமான வார்த்தைகள் அவை.

புலி அடித்து ஒருவர் இறந்தார் என்ற செய்தியை வாசிக்கும் போதெல்லாம் நாம் ஒன்றைக் கவனிக்கலாம். புலி, மனிதனை அடித்துக் கொல்லுமே தவிர 99 சதவிகிதம் மனித மாமிசத்தை உணவாக எடுத்துக் கொள்ளாது. புலியைக் கண்ட மனிதனின் தற்காப்பு முயற்சிகளுக்கு புலிகள் எதிர்வினையாற்றும்போது நடக்கும் விபத்துகளே அவை.

.ஒளிப்பதிவாளர் ராகேஷ் ஹரிதாஸ் வனத்தை 360 டிகிரியில் நமக்கு சுற்றிக் காட்டுகிறார். சினிமாத்தனமில்லாத அவரது ஒளிப்பதிவுமுறை நம்மை மத்தியப் பிரதேச வனத்திற்குள் ட்ரக்கிங் அழைத்துச் செல்கிறது.

 

இறுதிக்காட்சியில் வித்யாபாலன் கண்டறியும் இரண்டு குட்டிப் புலிகள் அழகு. இக்காட்சியில் தோன்றும் கிராமத்துப் பெண் சொல்கிறார். “ரெண்டும் பசியாற கோழி குடுத்தேன்...”. தாயை இழந்த குழந்தைப் புலிகள் பாதுகாக்கப்படுகின்றன என்பது இதமான உணர்வனுபவத்தை நமக்குத் தருகிறது. குகை மறைவில் நின்று பரிசுத்த விழிகளால் மனிதர்களை வியந்து பார்க்கும் குட்டிப் புலிகள் க்யூட் சொல்ல வைக்கின்றன. அதேநேரம் அக்குழந்தைப் புலிகள் தாயை இழக்க மனிதர்களே காரணம் என்ற உண்மை நம்மை அடர்ந்த குற்றஉணர்ச்சிக்கு ஆளாக்கிவிடுகிறது..

 இப்படியாக மனிதன் தொடர்ந்து வன உயிர்களையும் வனத்தையும் அழித்துக் கொண்டே போனால். நம் நினைவுகளில் மட்டுமே இனி வனமும் வன உயிர்களும் வாழும். நீரின்றி அமையாது உலகு. வனமின்றி அமையாது நீர். பல்லுயிர் ஓம்புதலே பண்பட்ட சமூகத்தின் நல்லடையாளம்.

பல்லுயிர் ஓம்புதல் என்பதின் ஆதார நிலையே வனப் பாதுகாப்புதான். வனப் பாதுகாப்பு என்பது மரம், செடி கொடிகளை மட்டும் பாதுகாப்பது அல்ல, அவற்றை வாழிடமாகக் கொண்டுள்ள வன உயிர்களையும் பாதுகாப்பதும் கூட. இப்படியான விஷயங்களை ஓர் உண்மைச் சம்பவத்துடன் இணைத்து எழுதப்பட்டிருக்கும் சினிமாதான் 'ஷேர்னி' (sherni).

 வித்யா பாலன் அந்த பதவியிலிருந்து மாற்றப்பட புதியதாக பணி சேரும் அதிகாரி தனக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளை கூட கழட்டாமல் வந்து அலுவலக அறையின் வண்ணம் சரியில்லை அத மாற்ற வேண்டும் அந்த காண்டராக்டரை வரச்சொல்லுங்க என பரிசாக கொடுக்கப்பட்ட லட்டு இனிப்பை வாயிலே போட் இன்னும் நாம திருந்த போறதில்லைனு இயக்குனர் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்

  

இந்தியர்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் 'ஷேர்னி'

---உமாதமிழ்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,