10 நாள் ஆனாலும் புதினா கெட்டுப்போகாம ஃபிரெஷா அப்படியே இருக்கனுமா.
10 நாள் ஆனாலும் புதினா கெட்டுப்போகாம ஃபிரெஷா அப்படியே இருக்கனுமா..?
புதினாவை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளும்போது பல நன்மைகள் கிடைக்கின்றன. துவையலாகவோ அல்லது புதினா சட்னி, குழம்பு, சாதத்தில் சேர்ப்பது என பல வகைகளில் புதினாவை தினசரி எடுத்துக்கொள்ள முடியும்.
கீரை வகைகள் என்று வரும்போது புதினாவும் அடங்கும். அந்த வகையில் புதினாவை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளும்போது பல நன்மைகள் கிடைக்கின்றன. துவையலாகவோ அல்லது புதினா சட்னி, குழம்பு, சாதத்தில் சேர்ப்பது என பல வகைகளில் புதினாவை தினசரி எடுத்துக்கொள்ள முடியும். அவ்வாறு சேர்த்துக்கொள்வதால் நன்மைகள் பல் அகிடைக்கின்றன.
புதினாவை வெறுமனே அப்படியே சாப்பிட்டாலே வயிற்று மந்தம், பசியின்மை ஆகியவை சரியாகும். அதோடு அது மூச்சுத்திணறல் பிரச்னைக்கும் உதவும். வாய்க்குமட்டல் இருந்தாலும் புதினாவை மென்று சாப்பிட்டாலோ அல்லது முகர்ந்தாலோ குமட்டல் நின்றுவிடும். இரத்த சோகை இருந்தாலும் புதினா சாப்பிடும்போது உற்சாகம் பிறக்கும். பெண்களுக்கு இது பல வகைகளில் நன்மை அளிக்கிறது.
பலர் புதினா கட்டுகளை வாங்கி வைத்துவிட்டு கெட்டுபோய்விட்டதே என புலம்புவார்கள். ஃபிரிட்ஜில் வைத்தாலும் புதினா சில நாட்கள்தான் தாங்கும். ஆனால் அதை சரியான முறையில் சேமித்து வைத்தால் பத்து நாட்கள் கூட வரும்.
அதாவது புதினாவை வாங்கி வந்ததும் நன்கு தண்ணீரில் அலசி காம்புகளைக் கிள்ளிவிட்டு இலையை மட்டும் எடுத்து ஒரு துணியில் பரப்பி காய வையுங்கள். இலைகளில் தண்ணீர் இருக்கக் கூடாது. தண்ணீர் இருந்தால்தான் விரைவில் அழுகி விடும். அதேபோல் பாலிதீன் பைகளில் போட்டு வைத்தாலும் விரைவில் கெடுப்போய்விடும்.
எனவே உலர்த்திய இலைகளை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும். அந்த டப்பாவின் அடியில் டிஷ்யூ பேப்பர் வைத்து அதன் மேல் இலைகளை வைத்து மூடுங்கள். இதனால் ஈரம் இருந்தாலும் பேப்பர் உறிஞ்சிவிடும்.இந்த முறையில் புதினாவை சேமித்து வைத்தால் 10 நாட்கள் ஆனாலும் அழுகிப்போகாமல் இருக்கும்.
கிள்ளிய காம்புகளை அப்படியே ஒரு டப்பாவில் மண் நிரப்பி அதில் நட்டு வைத்து வீட்டில் சூரிய வெளிச்சம் படும் இடத்தில் வைத்து தண்ணீர் ஊற்றி வர அதில் புதினா இலைகள் முளைக்கத் தொடங்கும். வீட்டிலேயே புதினா செடி வளர்த்து தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.
Comments