1,46,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முற்றிலும் புதிய மனித இனம் சீனாவில் கண்டுபிடிப்பு

 


மனித குல பரிணாம வளர்ச்சி: 1,46,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முற்றிலும் புதிய மனித இனம் சீனாவில் கண்டுபிடிப்பு 

முற்றிலும் புதிய மனித இனத்தின் மண்டை ஓடு ஒன்றை சீன ஆராயாச்சியாளர்கள் கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது நியாண்டர்தால் மற்றும் ஹோமோ எரக்டஸ் போன்ற ஆதி மனித இனத்துடன் பரிணாம வளர்ச்சியில் மிகவும் நெருங்கிய தொடர்புடைய இனம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கு `ட்ராகன் மேன்` என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த மனித இனம் கிழக்கு ஆசியாவில் ஒரு லட்சத்து 46 ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இது சீனாவின் வட கிழக்கு பகுதியான ஹர்பினில் 1933ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. ஆனால் அறிவியலாளர்கழோவபழதப2021ளின் கவனத்திற்கு தற்போதுதான் தி இன்னோவேஷன் என்னும் சஞ்சிகையில் இந்த மண்டை ஓடு குறித்த ஆய்வு வெளியாகியுள்ளது.

லண்டனில் உள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தின் பேராசிரியரும், இந்த ஆய்வுக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவருமான கிறிஸ் ஸ்ட்ரிங்கர், பல லட்ச ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்பட்ட படிமங்களில் இது ஒரு முக்கிய கண்டுபிடிப்பு என பிபிசியிடம் தெரிவித்தார்.

"இது ஹோமோ சாப்பியன்ஸை சேர்ந்தது அல்ல. இது வேறொரு கிளை. ஆனால் பல ஆயிரம் ஆண்டுகள் உருவாகி இறுதியில் அழிந்துபோன ஒரு நீண்ட தனி வம்சாவளியை சேர்ந்தது."

மனிதனின் பரிணாம வளர்ச்சியை மாற்றி எழுதக் கூடிய வலிமைவாய்ந்த கண்டுபிடிப்பு இது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த வகை மனித இனம் நியாண்டர்தால் மனிதர்களை காட்டிலும் ஹோமோ சாப்பியன்ஸ் இனத்திற்கு மிக நெருக்கமானதாக உள்ளது என தெரிவிக்கின்றனர்.

இந்த புதிய இனத்திற்கு `ஹோமோ லாங்கி` (Homo longi) என பெயர் சூட்டியுள்ளனர். சீன மொழியில் `லாங்` என்றால் டிராகன் என்று அர்த்தம்.

"நாம் நீண்ட நாட்கள் தொலைந்திருந்த நமது சகோதர இனத்தை கண்டறிந்துள்ளோம்" என்கிறார் சைனீஸ் அகாதமி ஆஃப் சயின்ஸ்ஸ் அண்ட் ஹெபெய் GEO பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஷிஜுன் நி.

"அட கடவுளே என்றேன். இது நன்றாக பாதுகாப்பட்டுள்ளது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. நீங்கள் எல்லா தகவல்களையும் தெளிவாக பார்க்கலாம். ஓர் அற்புதமான கண்டுபிடிப்பு," என பிபிசியிடம் தெரிவித்தார் அவர்.

இந்த மண்டை ஓடு சராசரி மனிதனின் மண்டை ஓட்டைக் காட்டிலும் பெரியதாக உள்ளது. நமது இனத்தை சேர்ந்த மனிதர்களின் மூளையின் அளவைக் காட்டிலும் இது பெரியதாக உள்ளது.வந்துள்ளது.

டிராகன் மேனுக்கு கிட்டத்ட்ட சதுரமான கண்களும், அடர்த்தியான புருவமும், அகலமான வாயும், பெரிய பற்களும் உள்ளன. இதுவரை இல்லாத அளவு முழுமையாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மண்டை ஓடு இது என ஹெபெய் ஜிஇஒ பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கியாங் ஜி தெரிவித்துள்ளார்.

"இது ஆதிமனிதன் மற்றும் நவீன மனிதனின் அம்சங்களின் கலவையாக உள்ளது. அந்த அம்சமே இதை தனித்து காட்டுகிறது," என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த டிராகன் மேனுக்கு கட்டுமஸ்தான மற்றும் முரட்டுத்தனமான உடல் வாகு இருந்திருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இருப்பினும் இந்த மனிதன் எவ்வாறு வாழ்ந்தான் என்பது தெரியவில்லை. ஏனென்றால் இந்த மண்டை ஓடு கண்டுபிடிக்கப்ப்ட்ட இடத்திலிருந்து அது அகற்றுப்பட்டுவிட்டது.

அப்படியானால், ஆராய்ச்சி செய்வதற்கான கல்லால் செய்யப்பட்ட ஆயுதங்கள் அல்லது கலாசாரத்தை பிரதிபலிக்கும் எந்த பொருளும் இல்லை என்று அர்த்தம்.

1933ஆம் ஆண்டு ஹெய்லாங்கியாங் மாகாணத்தில் ஷாங்குவா நதியின் குறுக்கே பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த கட்டட தொழிலாளர் ஒருவரால் இந்த மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டது. அந்த நதியின் பெயருக்கு கருப்பு டிராகன் நதி என்றும் பெயர் உண்டு. புதிய மனிதனின் பெயர் டிராஅந்த சமயத்தில் அந்நகரம் ஜப்பான் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த மண்டை ஓட்டின் மதிப்பை புரிந்து கொண்ட அந்த தொழிலாளர், இதை யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு கொண்டுவந்தார். ஆக்கிரமிப்பாளர்கள் கண்ணில் படாமல் காப்பாற்றினார். பின் தமது குடும்பத்தின் கிணற்றில் இதை மறைத்து வைத்தார். அங்குதான் இந்த மண்டை ஓடு 80 வருடங்களாக இருந்தது. அவர் இறப்பதற்கு முன் இந்த மண்டை ஓடு குறித்து தமது குடும்பத்திடம் கூறியுள்ளார். அதன்பிறகுதான் இது அறிவியலாளர்களின் கைகளில் கிடைத்துள்ளது.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட வகைப்படுத்த இயலாத கடினமான பண்டைய கால மனிதர்கள் பட்டியலில் டிராகன் மேனும் தற்போது சேர்ந்துள்ளார்.

தலி, ஜின்னிஷான், ஹுவாலாங்டாங் மற்றும் திபத்திய பீடபூமியில் உள்ள ஷியாஹேவில் கண்டறியப்பட்ட தாடை எலும்பு ஆகியவை அந்த பட்டியலில் அடங்கும். இந்த எலும்பு மிச்சங்கள் ஹோமோ சாப்பியன்ஸ் வகையை சார்ந்ததா அல்லது நியாண்டர்தால் வகையை சேர்ந்ததா அல்லது டெனிசோவன்ஸ் என்று அழைக்கப்படக்கூடிய மனித இனத்தை சேர்ந்ததா என்பது பெரும் விவாதமாகவே உள்ளது.

ரஷ்யாவின் டெனிசோவா குகையில் கண்டுடெடுக்கப்பட்ட 50,000-30,000 ஆண்டுகள் பழைமையான விரல்களிலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ மூலம் டெனிசோவன் என்ற இனம் கண்டறியப்பட்டது.

இந்த படிமங்கள் துண்டு துண்டாக இருந்ததால் இது `புதைப்படிம தேடுதலில் மரபணு` என்று கூறப்பட்டது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் மார்டா மிராசன் லார், இந்த டிராகன் மனிதன் டெனிசோவன் இனத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று தெரிவிக்கிறார்.


"டெனிசோவன் இனம் கடந்த காலத்தை சேர்ந்த ஒரு வியத்தகு மர்மம். திபத்திய பீடபூமியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தாடை (டிஎன்ஏ-வை வைத்து பார்த்தால்) எலும்பு டெனிசோவன் இனத்தை சேர்ந்த்தாக இருக்கலாம்" என்கிறார்.

எனவே தற்போது திபத்திய பீடபூமியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தாடை எலும்பும் டிராகன் மேனின் எலும்பும் ஒரே மாதிரியாக இருப்பதால் நாம் டெனிசோவன் இன மனிதனின் முக அமைப்பை முதன்முறையாக பார்க்கிறோம்" என்கிறார்.

சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய மனித இனம் வாழ்ந்த அதே காலகட்டத்தில் வாழ்ந்த ஆதி மனித இனம் ஒன்றை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள் டிராகன் மேன் லெவண்ட் பகுதியில் முதன்முறையாக தோன்றிய மனித குலத்தின் வழி வந்த இனமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

ஆனால் இந்த வகைப்படுத்த கடினமான படிமத்தை புதிய இனத்தின் படிப்படியான பரிணாமம் என்கின்றனர் சீன ஆராய்ச்சியாளர்கள். இந்த கருத்துக்கு எதிர் கருத்தை வைப்பவர்களுக்கு பேராசிரியர் நி, "இந்த முடிவுகள் பெரும் விவாதத்தை கிளப்பும். பலர் என்னுடன் ஒத்துப் போகமாட்டார்கள் என எனக்கு தெரியும்" என அமைதியாக பதிலளிக்கிறார்.

ஆனால் அதுதான் அறிவியல் என்கிறார் அவர்.கன் மேன்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,